Published:Updated:

''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"

ப.தினேஷ்குமார்
''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"
''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"

இந்திய சினிமாவில், அம்மா கதாபாத்திரங்களை வலிமையாக உருவாக்கியதில் தமிழ் சினிமாவின் பங்கு மிகப் பெரியது. அதில் எம்.ஜி.ஆர் காலம் தொட்டு தவிர்க்க முடியாத விஷயமாக இருப்பது, கதாநாயகனின் அம்மா சென்டிமென்ட்தான். 

எம். ஜி. ஆர் :

ஆக்‌ஷன் அதிரடிகளுக்கும் அம்மா சென்டிமென்ட்களுக்கும் தமிழ் சினிமா கதாநாயகர்களுக்கு முன்னோடி 
எம். ஜி.ஆர்தான். இவர் ஆரம்பித்து வைத்த இந்தப் பாணி இன்றும் வெற்றிப் பாணியாக இருந்து வருகிறது. 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாய்க்குத் தலைமகன்', 'தாய்க்குப் பின் தாரம்', 'தாயின் மடியில்' எனப் படத் தலைப்பிலேயே தாய் பாசத்தைக்  கையாண்டார்.

''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"

அத்துடன், தன் பாடல்களிலும் அம்மாவின் அருமை பெருமைகளை ஊருக்கு ஊட்டி வளர்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும். 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும்...' என, தனக்கு கிடைத்த வெற்றிக்கு காரணமே நீங்கள்தான் அம்மா என்று அத்தனை வெற்றிகளையும் தாயின் காலடியில் சமர்ப்பிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் இந்தப் பாடல்காட்சியில் நடித்திருப்பார். அத்துடன், 'தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை...’ என்ற பாடல் வழியாக அம்மாவின் அத்தனை சிறப்புகளையும் சொற்பொழிவாக எடுத்துரைப்பார். இதுமட்டுமன்றி, அம்மாவின் பெருமைகளைப் பேசும் ஏராளமான பாடல்களில் எம். ஜி.ஆர் நடித்திருக்கிறார். 

ரஜினி :

ஒருகாலத்தில், எம்.ஜி.ஆரின் அம்மா சென்டிமென்ட் பாணியை விடாமல் பின்பற்றி வந்தார் ரஜினி. தன் படங்களில் வரும் பாடல்கள் மூலம் அம்மா சென்டிமென்டை ரசிகர்களுக்கு எடுத்துரைத்தார். 'அன்னை ஓர் ஆலயம்' படத்தில் வரும் 'அம்மா... நீ சுமந்த பிள்ளை... சிறகொடிந்த கிள்ளை...' என்று, அம்மாவை இழந்த ரஜினி பாடும்போது ஒவ்வொருவருக்கும் அவர்களின் அம்மாதான் நினைவுக்கு வருவார்கள். அதே போல், 'உழைப்பாளி' படத்தில் வரும் 'அம்மா... அம்மா... எந்தன் ஆருயிரே...' பாடலுக்கு, காட்சிகளின் வழியே வலிமை சேர்த்திருப்பார்கள். 

''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"

மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் வரும் 'சின்னத்தாயவள் தந்த ராசாவே...' பாடல் காட்சியில், தாய் பாசத்துக்கு ஏங்கும் பிள்ளையாய் ரசிகர்களின் கண்ணீரை காணிக்கையாகப் பெற்றார் ரஜினி. இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டியதுபோல், 'மன்னன்' படத்தில் வரும் 'அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே...' பாடல் அமைந்தது. கை கால்கள் செயல் இழந்த தன் தாயை, ஒரு குழந்தையைப்போல தூக்கிக்கொண்டு சேவை செய்யும் அந்தப் பாடல் காட்சிக்கு இன்று வரை ஈடு இணையே கிடையாது என்றுகூட சொல்லலாம். 

ராமராஜன் :

எம். ஜி.ஆரின் நகல்போல் தன் படங்களில் உழைக்கும் மக்களின் காவலனாக வலம் வந்தார் ராமராஜன். இவர் அடைந்த வெற்றிக்கு இளையராஜாவின் பங்கு அபரிமிதமானது. ராமராஜன் என்றாலே மாடு, டவுசர் என்று பேச்சு இருந்த காலத்தில், மக்களுக்காகப் போராடும் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். இதனால், அடுத்த எம்.ஜி.ஆர் என்று பேசும் அளவுக்கு வலம் வந்தார். 

''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"

அந்த சமயத்தில் வந்த ராமராஜனின், பல பாடல்கள் அம்மா சென்டிமென்ட் பாடல்கள்தான். 'என்ன பெத்த ராசா' படத்தில் வரும் 'பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா... இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா...' என்ற பாடலும், 'என்னை விட்டு போகாதே’ படத்தில், தன் தாயை நினைத்துப் பாடும் ‘உன்னை போல ஆத்தா...’ என்ற பாடலும், காண்போரை கண்கலங்க வைக்கும் அளவுக்கு அம்மா சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாக வெளிவந்தது. 

ராஜ்கிரண் :

''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"

ராமராஜனைப் போலவே அவரின் சிஷ்யனான ராஜ்கிரணும் அந்தத் தாய் சென்டிமென்ட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இவரின் வெற்றிக்கும் 'தாய் சென்டிமென்ட்' பாடல்களும, இளையராஜா இசையும் மிகப்பெரிய காரணம். 'அரண்மனைக் கிளி' படத்தில் வரும் 'என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...' பாடலில், ராஜ்கிரண் தன் தாயின் உடலை எரித்த சாம்பலை முகத்தில் பூசிக்கொண்டு அழும் காட்சியை, காண்பவர்கள் கசிந்துருகச் செய்யுமளவுக்கு உருக்கமாகப் படமாக்கியிருப்பார்கள். 

இளம் கதாநாயகர்கள் :

இன்றைய இளம் கதாநாயகர்கள் எம். ஜி.ஆர், ரஜினி போன்று பெரும்பாலும் தாயார் சென்டிமென்ட் படங்களில் நடிக்காவிட்டாலும், ஒன்றிரண்டு படங்களிலேயே முத்திரை பதித்துவிடுகின்றனர். அந்த வகையில், அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த ‘ராம்’ படத்தில் வரும் ‘ஆராரிராரோ...’ பாடல் அடுத்த தலைமுறைக்கான அம்மா பாடலாக அமைந்தது.

''எம்.ஜி.ஆர் முதல் விஜய் ஆண்டனி வரை... அம்மா சென்டிமென்ட் காட்டிய ஹீரோக்கள்!"

இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூ' படத்தில் இடம்பெற்ற 'காலையில் தினமும்' பாடலிலும் மற்றும் ‘வியாபாரி’ படத்தில் இடம்பெற்ற ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா..?’ என்ற பாடலிலும் எளிய வார்த்தைகளில் மிகப்பெரிய தத்துவத்தை சொல்லியிருப்பார்கள். அத்துடன், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ஒரு பக்கா சென்டிமென்ட் படம்; தன் தாயின் உயிரைக் காப்பாற்ற பிச்சை எடுக்கும் மகனின் கதை. இதில் வரும், ’நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன் போல் ஆகிடுமா..?' என்ற பாடலும் இந்தத் தினத்தின் மகத்துவத்தைப் போற்றியது. 

இப்படி, இன்றும் அம்மா சென்டிமென்ட் என்பது வெற்றிப் பாணியாகவே தொடர்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதைக் கிண்டல் செய்து சில படங்களும் காமெடிகளும் வந்தாலும் இந்தப் பாணி யாரும் அசைக்க முடியாத கோட்டையாக இருக்கின்றது. அதற்கு சமீபத்தில் வெற்றி பெற்ற 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படமும் 'பிச்சைக்காரன்' திரைப்படமுமே மிகச்சிறந்த உதாரணங்கள். இன்னும், அம்மாவின் பெருமைகளைப் போற்றும் விதத்தில் நிறைய படங்கள் வெளிவர இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்துவோமாக!