Published:Updated:

"தன் படத்தைப் போட்டுக்காட்டி என் மன அழுத்தத்தைப் போக்கினார் பாலு மகேந்திரா!"- ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்

அந்த நேரத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். 'அய்யா எதற்காக அழைத்தார். முதல்வர் நம்மைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?' என்று எனக்குள் நிறைய கேள்விகள். விடை தெரியாமல் தவித்துப்போய்விட்டேன். எப்போது படம் முடியும் என்றிருந்தது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்

தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். `பொக்கிஷம்’, `லீ’, `மழை’, ‘உன்னைச் சரணடைந்தேன்’, `ராமகிருஷ்ணா’, `வந்தேமாதரம்', `ராமன் தேடிய சீதை’, ‘சென்னை 28 பார்ட் 2', `பார்ட்டி’ எனத் தொடர்ச்சியாக மாறுபட்ட பல இயக்குநர்களின் படங்களில் தன் பங்களிப்பைச் செய்தவர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற சினிமாக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ராஜேஷ் யாதவ்

``மழைக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் படங்களில் நிச்சயம் மழைக்காட்சி இருக்கும். அந்த நேரங்களில் எல்லாம் செயற்கை மழையைக் காட்டிலும் இயற்கையான மழையே வந்து என்னை மிரட்டும். ஒரு காட்சியைப் படம் பிடிக்கும்போது ஏற்படும் நெருக்கடியைவிட மழையை எதிர்கொள்ளும்போது அதிகம் அழுத்தம் வரும்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் `லீ’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். இயற்கையான வெளிச்சத்தில் காட்சிகளைப் படம்பிடித்தேன். அந்தப் படத்துக்காக அண்ணாசாலையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு, அதற்கான வேலைகளைச் செய்துமுடித்தபோது மழை வந்துவிட்டது. ஷூட்டிங் நடத்த முடியவில்லை. பிறகு, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையிலுள்ள நியூ காலேஜ் அருகே உள்ள மேம்பாலம் இருந்த இடத்துக்கு யூனிட்டை மாற்றினோம்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், பிரபு சாலமன்
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், பிரபு சாலமன்
ராஜேஷ் யாதவ்
அந்த நேரத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். 'ஐயா எதற்காக அழைத்தார். முதல்வர் நம்மைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?' என்று எனக்குள் நிறைய கேள்விகள். விடை தெரியாமல் தவித்துப்போய்விட்டேன்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்

மழைக்கு ஒதுங்குவதற்காக லைட்ஸ் அனைத்தையும் அந்த பிரிட்ஜ்மீது ஏற்றிவைத்திருந்தோம். ஆனால், அங்கேயும் மழை கொட்டித் தீர்த்தது. நாங்கள் எடுத்துச் சென்ற கார் அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துவிட்டது. மின்சாரமும் போய்விட்டது. யூனிட்டில் இருந்த எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தோம். எனக்கு பிரஷர் ஏறிக்கொண்டேபோனது.

அதைப் புரிந்துகொண்ட இயக்குநர் பிரபுசாலமன் `சரி... மழையிலேயே படப்பிடிப்பை நடத்தலாம்’ எனக் கூறினார். அந்த மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த லைட்ஸ் அனைத்தையும் ஆன் செய்து, மழையிலேயே காட்சிகளை எடுத்தோம். இப்படி அந்தப் படம் முழுக்க சவாலான காட்சிகள் நிறைந்திருந்தன. `லீ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து, படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.

ராஜேஷ் யாதவ்
ராஜேஷ் யாதவ்

அந்தப் படத்தை அப்போது முதல்வராக இருந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்குப் போட்டுக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில் அவர் படம் பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் பிரின்ட் போட வேண்டிய வேலை இருந்ததால் நான் பிரசாத் லேபுக்குக் கிளம்பிவிட்டேன். அங்கே இருக்கும்போது ராமநாராயணன் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. `தம்பி... உங்களை ஐயா பார்க்கணும்ங்கிறார், உடனே கிளம்பி வாங்க’ என்றார். நான் திரும்பி வரும்போது படத்தின் இன்டர்வெல் முடிந்து மீண்டும் ஆரம்பித்துவிட்டது.

அந்த நேரத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். 'ஐயா எதற்காக அழைத்தார், முதல்வர் நம்மைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?' என்று எனக்குள் நிறைய கேள்விகள். விடை தெரியாமல் தவித்துப்போய்விட்டேன். எப்போது படம் முடியும் என்றிருந்தது. அப்போது ஏற்பட்ட மன அழுத்தத்தை ஒருவரியில் சொல்ல முடியாது. பிறகு ஒரு வழியாகப் படம் முடிந்து ஐயா வெளியே வந்ததும், ‘எங்கய்யா கேமராமேன்?’ என்று கேட்டதும், என் அழுத்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. அவர் முன்னால் போய் நின்றேன்.

கலைஞர் கருணாநிதியுடன்  ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
கலைஞர் கருணாநிதியுடன் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ராஜேஷ் யாதவ்

ஐயா தன் பக்கத்தில் என்னை நிறுத்தி, `ஒரு இங்கிலீஷ் படம் மாதிரி எடுத்துருக்கய்யா... பிரமாதம்' என்று சொல்லி பாராட்டினார். 5 நிமிடம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இது நிஜம்தானா என்று புரியாமல், வியப்பிலேயே அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்தப் படம் உங்கள் பகுதியில் எடுத்தது அய்யா...' என்று அவரிடம் சொன்னேன். இதை அருகிலிருந்தவர்களிடம் சந்தோஷமாகச் சொல்லிச் சிரித்தார். அந்த இடமே கலகலப்பாகிவிட்டது.

பெரும்பாலும் படங்களில் மழைக் காட்சிகளின்போது பாத்திரங்களின் முன்புறம் மட்டும் மழை பெய்துகொண்டிருக்கும். பின்புறம் பார்த்தால் மழையே இருக்காது. இந்த மாதிரி விஷயங்கள் `மழை’ படத்தில் இருக்கக் கூடாது என்று நினைத்து, இயக்குநர், தயாரிப்பாளரோடு சேர்ந்து நிறைய மெனக்கெட்டேன்.

மழை’ பட படப்பிடிப்பு
மழை’ பட படப்பிடிப்பு
ராஜேஷ் யாதவ்

அந்தப் படத்தில் இடம்பெறும் `நீ வரும்போது...’ பாடலை ரெயின் எஃபெக்ட்டில் எடுக்க முடிவு செய்தோம். அதற்காக ரயில் நிலையம் முழுவதையும் ஈரமாக்கினோம். ஏழு இடங்களில் மழை பெய்வதற்கான மெஷின்களைப் பொருத்தினோம். இதற்காக வெளிநாட்டிலிருந்து குழாய்களை வரவழைத்து, பாடலைப் படம் பிடித்தோம். அந்தக் காட்சியை ஷூட் பண்ணும்போது சவாலாக இருந்தது. நிறைய மன அழுத்தத்துக்கு உள்ளானேன்.

என்னுடைய ஒவ்வொரு படத்திலும், மழைக்கும் எனக்கும் நல்லதும் கெட்டதுமாக ஒரு கெமிஸ்ட்ரி தொடர்ந்து வந்திருக்கிறது. அதன் ரகசியம் இன்னும் எனக்குப் புரிபடவில்லை.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாலு மகேந்திரா சார் பாராட்டினார். அத்துடன் நிற்காமல் அவர் இயக்கிய ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியைப் போட்டுக் காட்டினார். மழையை அவர் எடுத்தது குறித்தும் விளக்கினார். அதன்பின் மழை தந்த மனஅழுத்தம் எல்லாம் என்னிடமிருந்து பறந்தே போய்விட்டது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ராஜேஷ் யாதவ்

`சென்னை 28 பார்ட்-2' படத்தில் கிரிக்கெட் காட்சிகள் நிறைய இருக்கும். டி.வி-யில் மேட்ச் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு அப்படியே படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் வர வேண்டும் என்பதற்காக நிறைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காட்சிகளை எடுத்தேன். படத்தில் முதல் பகுதியில் காட்டப்படும் கிரிக்கெட் மைதானம் வறட்சியாக இருக்கும். இரண்டாம் பகுதியில் மேகம் திரண்டு மைதானத்தில் மழைபெய்வதுபோல காட்சி எடுக்கத் திட்டம்.

ஏற்கெனவே எடுத்த காட்சியுடன் இணைக்க வேண்டும் என்பதால் மேகத்தை கிராபிக்ஸ் செய்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். அந்தக் காட்சியை எடுக்க வேண்டிய சூழல் வந்தபோது இயற்கையாகவே கருமேகம் சூழ்ந்து, கனமழை பெய்து உதவியது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்

இப்படி என்னுடைய ஒவ்வொரு படத்திலும் மழைக்கும் எனக்கும் நல்லதும் கெட்டதுமாக ஒரு கெமிஸ்ட்ரி தொடர்ந்து வந்திருக்கிறது. அதன் ரகசியம் இன்னும் எனக்குப் புரிபடவில்லை.

அண்மையில்தான் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் `பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக ஹெலிகாப்டரில் 40,000 அடிக்கு மேலே பறந்தபடியே ஒரு காட்சியைப் படமாக்கினேன். ரொம்ப சவாலான காட்சி. அதை முடித்துவிட்டு, கார் சேஸிங் காட்சியைப் படமாக்கினோம்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்
ராஜேஷ் யாதவ்

ஒரு கார் மற்றொரு கார் மீது மோத வேண்டும். அப்படியாக, பறந்து வந்த கார் சற்று தடுமாறி என் கேமராவை உரசியபடி சென்றது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் அன்று நான் விபத்தில் சிக்கியிருப்பேன். இப்படி ஒவ்வொருநாள் படப்பிடிப்பும் எனக்குச் சவாலானதாகவும் மனஅழுத்தம் தரக்கூடியதாகவும்தான் இருக்கும். ஆனாலும் அந்த நேரத்துக்கு அதை எதிர்கொண்டுவிடுவேன். பிறகு, அந்தப் படம் தரும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அதை மறக்கடித்துவிடும்” என்கிறார் ராஜேஷ் யாதவ்.