Published:Updated:

நல்லவேளை, ராஜீவ் மேனன் நடிக்கலை!

ரத்னவேலு
பிரீமியம் ஸ்டோரி
ரத்னவேலு

48 மணி நேரம் கொடுங்க, யோசிச்சுச் சொல்றேன்’னு சொல்லிட்டு அப்புறம், ஓகே சொன்னேன்.”

நல்லவேளை, ராஜீவ் மேனன் நடிக்கலை!

48 மணி நேரம் கொடுங்க, யோசிச்சுச் சொல்றேன்’னு சொல்லிட்டு அப்புறம், ஓகே சொன்னேன்.”

Published:Updated:
ரத்னவேலு
பிரீமியம் ஸ்டோரி
ரத்னவேலு

மக்கு ரத்னவேலு... திரைத்துறைக்கு ‘Randy’. ‘சேது’ போன்ற யதார்த்தப் படங்கள், ‘எந்திரன்’ போன்ற டெக்னிக்கல் படங்கள், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ போன்ற பீரியட் படங்கள் என எல்லா ஜானரிலும் கேமரா கண்கள் மூலம் கதை சொல்பவர் ரத்னவேலு. ‘இந்தியன் -2’-ல் பிஸியாக இருந்தவருக்கு கொரோனா கொஞ்சகாலம் ஓய்வுகொடுத்திருக்கிறது. அவரிடம் பேசினேன்.

ரத்னவேலு
ரத்னவேலு

``பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சு முடிச்சவுடனே ராஜீவ் மேனன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். 40 விளம்பரங்களுக்கு மேல வேலை செஞ்சேன். அப்போதான் அவரை ‘பாம்பே’ படத்துக்காக மணிரத்னம் கூப்பிட்டார். திடீர்னு ‘ராஜீவ், நீயே இந்தக் கதையில ஹீரோவா நடி’ன்னு சொன்னார். நானும் ஆர்.டி.ராஜசேகரும் ‘மணி சார் படத்துல வேலை செய்ய முதல்முறை வாய்ப்பு கிடைச்சிருக்கு. இவரை ஹீரோவா போட்டுட்டாங்கன்னா நமக்கு இதுல வேலை செய்ய வாய்ப்பு கிடைக்காதே’ன்னு பேசிக்கிட்டோம். ராஜீவ் சார் ‘நோ’ சொன்னவுடன் அர்விந்த்சாமி படத்துக்குள்ள வந்தார். இந்த ஒரு படம்தான் நான் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணினேன். ஆனா, பத்துப் படத்துல வேலை செஞ்ச அனுபவம் கிடைச்சது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நல்லவேளை, ராஜீவ் மேனன் நடிக்கலை!

‘`முதல் படம்?’’

‘`பிலிம் இன்ஸ்டிட்யூட்ல என்கூட படிச்ச நண்பர் நாகராஜன், சரத்குமார் சாரை வெச்சு ‘அரவிந்தன்’னு ஒரு படத்தை ஆரம்பிச்சார். அதுக்கு முன்னாடி ட்ரெயிலர் ஷூட் பண்ண என்னைக் கூப்பிட்டார். அந்த ட்ரெய்லரைப் பார்த்துட்டு ‘சரத்குமார் சாரும் தயாரிப்பாளர் சிவா சாரும் உன்னையே படத்துக்கும் ஒளிப்பதிவு பண்ணச் சொல் றாங்க. எனக்கும் அதே எண்ணம்தான்’னு நாகராஜன் சொன்னார். ‘இந்த அளவு பெரிய பட்ஜெட் படத்துல வேலை செய்யத் தயாரா இருக்கேனான்னு தெரியலை. 48 மணி நேரம் கொடுங்க, யோசிச்சுச் சொல்றேன்’னு சொல்லிட்டு அப்புறம், ஓகே சொன்னேன்.”

நல்லவேளை, ராஜீவ் மேனன் நடிக்கலை!

‘`ஷங்கர், பாலா, கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார்... உங்ககிட்ட இவங்களுடைய கதை சொல்லல் எப்படியிருக்கும்?’’

“ `எந்திரன்’ கதையை ஷங்கர் சார் ஆறரை மணி நேரம் சொன்னார். ரஜினி சார் இப்படிப் பார்க்குறார், ஐஸ்வர்யா ராய் இப்படி நடந்து வராங்க, இந்த இடத்துல சிஜி வொர்க் பண்ணுறோம்னு சொன்னார். அப்பவே சினிமா பார்த்த மாதிரி இருந்தது. ஸ்பாட்ல அன்னிக்கு என்ன பண்ணப்போறோம்னு தெளிவா ஷாட் டிவிஷன், ஷாட் ரேஞ்ச்னு பேப்பர்ல எழுதிட்டு வந்திடுவார். செட்ல வந்து பார்த்துக்கலாம்னு வரமாட்டார்.

பாலா விரிவா சொல்லமாட்டார். ஓப்பனிங், இது இன்டர்வல், இது க்ளை மாக்ஸ்னு மேலோட்டமா சொல்லுவார். அவர் என்ன எடுக்கப்போறார்னு அடிப்படையை மட்டும் தெரிஞ்சுக்கிட்டு வொர்க் பண்ண ஆரம்பிச்சுடுவேன். நிறைய சுதந்திரம் இருக்கும். ஆர்ட்டிஸ்ட்கிட்ட இருந்து அற்புதமான நடிப்பை வாங்கிடுவார்.

கெளதம் ஒரு மணி நேரத்துல கதை சொல்லிடுவார். ‘முதல் டேக்தான் யதார்த்தமா இருக்கும்... அதுல ஒரு மேஜிக் நடக்கும்’னு நம்புவார். ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்கூட பயணிக்கும்போதும் ஒவ்வொரு ஃபீல் வரும்னு நம்புவார். கே.எஸ்.ஆர் சார் விஷுவலைத் தாண்டி கதாபாத்திரங்களுக்கும் வசனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். சில இடங்களில் ‘இது உங்களுக்கான இடம். புகுந்து விளையாடுங்க’ன்னு நமக்கு சுதந்திரமும் கொடுப்பார். அவர் குழந்தை மாதிரி. ஆனா, அவரைப் புரிஞ்சுக்கலைனா வொர்க் பண்ண முடியாது.”

‘` ‘எந்திரன்’ மாதிரி ஒரு பெரிய படம் பண்ணிட்டு, அடுத்து உடனே ‘ஹரிதாஸ்’ மாதிரி ஒரு சின்ன பட்ஜெட் படம் எப்படிப் பண்ணுனீங்க?’’

‘` ‘ஹரிதாஸ்’ பண்ணுனதுக்குக் காரணம், அந்தக் கதையில இருந்த யதார்த்தம். பொருளாதார ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் ரொம்பப் பெருசா வொர்க் பண்ணிட்டு அப்படியே இங்க வந்தேன். BMW-ல போய்ட்டு, ஆட்டோல போற மாதிரி இருந்தது. நான் இதைத்தான் விரும்பினேன். ரெண்டு வருஷம் கிரீன் மேட், வி.எஃப்.எக்ஸ், அனிமேஷன்னு பார்த்துட்டு, இதுல லைவ்லியா எடுக்கிறது ரிலாக்ஸா இருந்தது. எனக்கு நல்ல பெயரும் வாங்கிக்கொடுத்தது.”

ரத்னவேலு, கெளதம் மேனன்
ரத்னவேலு, கெளதம் மேனன்

‘`சிரஞ்சீவியோட கம்பேக் படமான ‘கைதி’ ரீமேக்ல நீங்கதான் கேமரா. அவரோட வொர்க் பண்ணுன அனுபவம் எப்படியிருந்தது?’’

“பத்து வருஷம் கழிச்சு சினிமாவுல நடிக்க வர்றார். மக்கள் ஏத்துப்பாங்களான்னு அவருக்கு நிறைய சந்தேகம் இருந்தது. ‘நீங்க அப்படியேதான் இருக்கீங்க சார். உங்க நிறம், ஸ்டைல் எல்லாமே அப்படியேதான் இருக்கு. நான் பார்த்துக்கிறேன் சார்’னு அவர்கிட்ட சொன்னேன். மேக்கப் டெஸ்ட் பண்ணினோம். டிஐ எல்லாம் இல்லாமல் போட்டோவுல அவரைப் பார்த்ததும் கூட இருந்தவங்களும் ‘20 வருஷம் இளமையா இருக்கீங்க’ன்னு சொன்னாங்க. உடனே என்னைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டார். ‘ரங்கஸ்தலம்’ பண்ணி முடிச்சவுடன், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்துல வொர்க் பண்ணக் கூப்பிட்டார். ‘இது என் கனவுப் படம். 15 வருஷமா இதைப் பண்ணணும்னு நினைச்சுட்டு இருக்கேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைன்னு முடிவு பண்ணிப் பண்ணுறோம். நீங்கதான் வொர்க் பண்ணணும்’னு அவரே கேட்டார். ரொம்ப நல்ல அனுபவம்.”

‘` ‘எந்திரன்’ பார்த்துட்டு அமீர்கான் பாலிவுட்டுக்குக் கூப்பிட்டார்னு கேள்விப்பட்டோம். ஏன் பாலிவுட்டுக்குப் போகலை?’’

“நிறைய வெற்றிகளை தமிழ், தெலுங்குல பார்த்துட்டேன். நல்ல சம்பளம் தராங்க. ஒளிப்பதிவாளருக்கான மரியாதை பாலிவுட்டை விட தென்னிந்தியாவுல அதிகமா இருக்கு. ‘சேது’ பண்ணுனபோதே சல்மான் கான் பட வாய்ப்பு வந்தது. குடும்பத்தையெல்லாம் விட்டுட்டு அங்க போய் பேச்சுலர் வாழ்க்கை வாழ விரும்பலை. ஓ.டி.டி வந்த பிறகு, நம்ம படம் எல்லோருக்கும் போய்ச்சேருது. பாலிவுட்ல தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஆதிக்கம் இருக்கு. நம்ம ஊர்ல ஒளிப்பதிவாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், ஆர்ட் டைரக்டர்கள்னு எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கு. இது என் கருத்து. தவறாகக்கூட இருக்கலாம்.”

நல்லவேளை, ராஜீவ் மேனன் நடிக்கலை!

‘`உங்களுக்குக் கிடைச்ச மிகப்பெரிய பாராட்டு?’’

“பாலு மகேந்திரா சார் ‘வாரணம் ஆயிரம்’ பார்த்துட்டு ரொம்ப நேரம் போன்ல பேசினார். ‘ஹரிதாஸ்’ பார்த்துட்டு ‘எல்லா ஜானரையும் நல்லா கையாளுற... ஹேட்ஸ் ஆப்’னு சொல்லிட்டு எல்லாப் பத்திரிகையாளர்கள் முன்னாடியும் ‘I’m a great fan of you Randy’ன்னு சொன்னார். அவர் வாய்ல இருந்து இப்படியொரு வார்த்தை, எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பரிசா பார்க்குறேன்.”