Published:Updated:

``அஞ்சலியை மேடம்னு கூப்பிடாததுக்கு ஜெய் என்ன பண்ணார் தெரியுமா?'' - புலம்பும் `போஸ்டர்' நந்தகுமார்!

போஸ்டர் நந்தகுமார் - ஜெய்

"இதே நிலைதான் அவரை வைத்து படம் எடுத்த அனைத்து இயக்குநருக்கும் நடந்திருக்கும். இந்தப் படத்தின் மூலம் பெரும் நஷ்டம். இனிமேல் வாழ்நாளில் சினிமாவே தயாரிக்கக் கூடாது எனும் அளவுக்கு என்னை விரக்தியடைய வைத்து வெறுப்பேற்றிவிட்டார் நடிகர் ஜெய்.'' - `போஸ்டர்' நந்தகுமார்

``அஞ்சலியை மேடம்னு கூப்பிடாததுக்கு ஜெய் என்ன பண்ணார் தெரியுமா?'' - புலம்பும் `போஸ்டர்' நந்தகுமார்!

"இதே நிலைதான் அவரை வைத்து படம் எடுத்த அனைத்து இயக்குநருக்கும் நடந்திருக்கும். இந்தப் படத்தின் மூலம் பெரும் நஷ்டம். இனிமேல் வாழ்நாளில் சினிமாவே தயாரிக்கக் கூடாது எனும் அளவுக்கு என்னை விரக்தியடைய வைத்து வெறுப்பேற்றிவிட்டார் நடிகர் ஜெய்.'' - `போஸ்டர்' நந்தகுமார்

Published:Updated:
போஸ்டர் நந்தகுமார் - ஜெய்

'மெட்ராஸ்' படம் வரும்வரை 'போஸ்டர்' நந்தகுமார் என்பதுதான் இவரது அடையாளம். சென்னை முழுக்க போஸ்டர்கள் ஒட்டுவதில் இவரது நிறுவனம்தான் நம்பர் 1. 'மெட்ராஸ்' படம் மூலம் சினிமாவில் நடிகரானவர், தயாரிப்பாளர், விநியோகஸ்தராகவும் இயங்கினார். 'பலூன்' படத்துக்குப் பிறகு சினிமா தயாரிப்பைவிட்டே வெளியேறிவிட்டார் நந்தகுமார். அதற்கான காரணம் குறித்து அவரிடம் பேசினோம்.

நந்தகுமார்
நந்தகுமார்

''1950-ல் எங்க அப்பா ஆரம்பிச்சு வெச்ச போஸ்டர் தொழிலை நானும் என் மகனும் இப்போ கவனிச்சிட்டு வர்றோம். முன்னெல்லாம் 25 துண்டுகளை (BIT) வெச்சு போஸ்டர் ஒட்டுவோம். எல்லோரும் பிரமிச்சுப் பார்ப்பாங்க. ஆனா, இப்போ 6 துண்டுகள்கொண்ட போஸ்டர் மட்டுமே அடிக்கிறதுக்கும் ஒட்டுறதுக்கும் அனுமதி கொடுக்குறாங்க. சிவாஜி சார் நடிச்ச `பாலும் பழமும்' படத்தை 1982-ல் ஒரு பிரின்ட் 3 ரூபாய் வீதம் 10 தியேட்டர்களில் 10 பிரின்ட் வாங்கி போஸ்டர் அடிச்சி ரிலீஸ் பண்ணோம். அந்தக் காலகட்டத்துலேயே 40,000 ரூபாய் வரை லாபம் கிடைச்சது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு இப்படித்தான் பிரமாண்டமான முறையில் போஸ்டர் ஒட்டுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஜினி சார் நடிப்பில் வெளியான`சிவாஜி' படத்துடைய ஆடியோ விழாவை திங்கள்கிழமை நடத்தினாங்க. நாங்க சனிக்கிழமையே அந்த விழாவுடைய போஸ்டர்களை சென்னை முழுக்க பிரமாண்டமா ஒட்டிட்டோம். ரஜினி சாரும் ஷங்கர் சாரும் ஊர் முழுக்க ஒட்டியிருந்த போஸ்டர்களைப் பார்த்திருக்காங்க. உடனே ஏவி.எம் சரவணன் சார்கிட்ட சொல்லி என்னைப் பாராட்டினார் ரஜினி சார்.

பொதுவா சினிமா போஸ்டருக்கும் சுவருக்கும் இருக்கிற தொடர்பு மாதிரிதான் எனக்கும்`மெட்ராஸ்' படத்துக்கும் சம்பந்தம் இருக்கு. என்னுடைய பாடி லாங்குவேஜைப் பார்த்துட்டு `நடிச்சே ஆகணும்'னு இரஞ்சித் சார் சொன்னார். நடிச்சேன். அப்புறம் `கபாலி' படத்துல ரஜினி சாரோடு பழகுற வாய்ப்பு கிடைச்சது. நாங்க ரெண்டு பேரும் மணிக்கணக்கா உட்கார்ந்து பேசிட்டிருப்போம். 1980-களில் ரஜினி சாருக்கு தூங்குறதுக்கே நேரம் கிடைக்காதாம். அப்போ விமான போக்குவரத்தும் அதிகமா இல்லாததனால எங்க போனாலும் கார்லதான் போவாராம். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூங்குறதே அபூர்வம்னு சொன்னார் ரஜினி சார். இந்த மாதிரி பல விஷயங்கள் பேசினோம்.

வழக்கமா எல்லோரும் ரஜினி சார்கூடதான் போட்டோ எடுத்துக்க ஆசைப்படுவாங்க. ஆனா, ரஜினி சாரோ என் குடும்பத்தினருடன் போட்டோ எடுக்கணும்னு கேட்டிருந்தார். காலையில 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எங்களை வரச் சொல்லியிருந்தார். டிராஃபிக்ல அரை மணி நேரம் லேட் ஆகிடுச்சு. நாங்க வர்ற வரைக்கும் காத்திருந்து எங்களைச் சந்திச்சதுக்கப்புறம்தான் ஷூட்டிங் போனார். வழக்கமா 9 மணிக்கு படப்பிடிப்புன்னா 8 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்துடுவார் ரஜினி சார். இதை `கபாலி' ஷூட்டிங்கில் நான் கண்கூடாகப் பார்த்தேன்.

ஜெய் - அஞ்சலி
ஜெய் - அஞ்சலி

இதை நான் ஏன் சொல்றேன்னா, ரஜினி சார் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். சினிமாவுக்கு வந்து 44 வருடங்கள் ஆகிடுச்சு. அவரே ஷூட்டிங் நேரத்துக்கு முன்னாடியே ஸ்பாட்டுக்கு வந்துடுவார். ஆனா, `பலூன்'னு நான் ஒரு படத்தை தயாரிச்சி ஜெய்கிட்ட பட்ட பாடு இருக்கே... என் ஜென்மத்துக்கும் அதை நான் மறக்க மாட்டேன். அந்தப் படத்துக்கான ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்தது. ஸ்பாட்ல ஜெய்க்கும் அஞ்சலிக்கும் அவங்க கேட்ட மாதிரி தனித் தனியா வசதிகள் செய்துகொடுத்தோம். ஆனா, அது எல்லாமே கடைசில தேவையில்லாத ஆடம்பர செலவா போயிடுச்சு. தயாரிப்பாளருடைய பணத்தை வீணடிக்கிறதில் ஜெய் போல் ஒரு நடிகனை நான் பார்த்ததேயில்லை.

தினமும் 100 பேருக்கு மேல அந்தப் படத்துக்காக வேலை பார்த்தோம். ஒரு நாள் தெரியாத்தனமா அஞ்சலிக்கு சீன் சொல்லும்போது அவங்க பேரைச் சொல்லி கூப்பிட்டுட்டார் இயக்குநர் சினிஷ். ஜெய்க்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. `நீங்க எப்படிப் பேரைச் சொல்லி கூப்பிடலாம். மேடம்னுதானே கூப்பிடணும்'னு கண்டபடி சத்தம் போட்டார்.

ஜெய் - அஞ்சலி
ஜெய் - அஞ்சலி

அடுத்த நாள் `பலூன்' பட யூனிட்டே கொடைக்கானல் மலையில் ஷூட்டிங்குக்காகக் காத்திருக்க, யார்கிட்டயும் சொல்லாம ஜெய்யும் அஞ்சலியும் சென்னைக்குப் போயிட்டாங்க. மொத்த யூனிட்டும் பதறிப்போனோம். இப்படித்தான் `பலூன்' பட புரொமோஷனிலும் கலந்துக்க மாட்டேன்னு அடம்பிடிச்சார். இதே நிலைமைதான் அவரை வெச்சு படம் எடுத்த எல்லா இயக்குநருக்கும் நடந்திருக்கும். இந்தப் படத்தின் மூலமா எனக்குப் பெரிய நஷ்டம். இனிமேல் வாழ்நாள்ல சினிமாவே தயாரிக்கக்கூடாதுங்கிற அளவுக்கு என்னை விரக்தியடைய வெச்சு வெறுப்பேத்திட்டார் ஜெய்'' என்கிறார் `போஸ்டர்' நந்தகுமார்.

`போஸ்டர்' நந்தகுமாரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜெய் தரப்பிடம் விளக்கம் பெற நாங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இது தொடர்பாக, ஜெய் தரப்பில் பதிலளித்தால் பரிசீலனைக்குப் பின் அதைப் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.