பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வசூல் வரலாறுகளை உடைக்கும் பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்னியின் செல்வன்

சாதனை

‘பொன்னியின் செல்வன்’ பல இயக்குநர் களின் கனவு சினிமா; கடந்த 70 ஆண்டு களுக்கும் மேலாக வயது வித்தியாசம் இன்றி, தலைமுறைகளைத் தாண்டி வாசகர்களை ஈர்த்துவரும் காவியம். எதிர்பார்த்ததுபோலவே, திரையிலும் பல சாதனைகளைப் படைத்திருக் கிறது ‘பொன்னியின் செல்வன் - 1’.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா எனப் பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு செப்டம்பர் 30 அன்று உலகம் முழுவதும் திரைகளில் வெளியானது. நாவல் வடிவத்தில் படிக்கும் அனைவரையும் கட்டிப்போடும் ‘பொன்னியின் செல்வன்’, திரையில் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்ற ஆவலே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

வசூல் வரலாறுகளை உடைக்கும் பொன்னியின் செல்வன்!

எதிர்பார்ப்பை எகிறச் செய்த புரொமோஷன்...

‘பொன்னியின் செல்வன்’ (பி.எஸ்-1) படத்துக்கு இத்தகைய வரவேற்பு இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான் என்றாலும், படத்தின் புரொமோஷன் வேலைகளை படக்குழுவினர் எந்த வகையிலும் குறைத்துக்கொள்ளவில்லை. எந்தெந்த மொழிகளில் எல்லாம் வெளியாகிறதோ, அந்தந்த மொழி மக்களை படத்தின் நட்சத்திரங்கள் சென்று சந்திக்கும் நிகழ்வுகள் தவறாமல் நடந்தன. ‘பி.எஸ்-1’ வெளியாவதற்கு முன் தஞ்சாவூரில் ஆரம்பித்து, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பயணித்தது மட்டுமல்லாமல் துபாய் வரையிலும் சென்று ரசிகர்களைச் சந்தித்தது படக்குழு. இதுபோக தொலைக்காட்சி ஊடகங்களில் பிரத்யேக படக்குழு சந்திப்பு, நேர்காணல்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா எனப் படத்துக்கு அனைத்து விதமான புரொமோஷன்களும் சிறப்பாக நடந்தன. அதன் பிரதிபலிப்பு ஒரு வாரத்துக்கு அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்.

நாவல் to சினிமா...

ஐந்து பாகங்கள் கொண்ட நாவலாக எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வனை’ மணிரத்னம் இரண்டு பாகம் சினிமாவாக 180 நாள்களிலேயே எடுத்து முடித்துவிட்டார் என்பதே மிகப் பெரிய ஆச்சர்யம் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். இதுபோன்ற வரலாற்றுக் காவியங்களைச் சினிமாவாக உருவாக்குவதில் பல சவால்கள் உள்ளன. என்னதான் இப்போது பல நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து கைகொடுத்தாலும், இது போன்ற பல முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் போன உதாரணங்களும் இந்திய சினிமாவில் உள்ளன.

ஆனால், ‘பி.எஸ்-1’ வெளியான அன்றே அந்தக் கேள்விக்குப் பதிலும் கிடைத்துவிட்டது என்றே சொல்லலாம். திரைக்கதை, நடிகர்கள் தேர்வு, காட்சிப்படுத்திய விதம், பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றன.

வசூல் வரலாறுகளை உடைக்கும் பொன்னியின் செல்வன்!

இணையத்தில் விவாதம்...

அதே சமயம் புராணங்களை, அரசியல் நிகழ்வுகளை, தனிநபர்களின் சுயசரிதைகளை கற்பனை கலந்து திரைப் படமாக்குவதில் கைதேர்ந்த இயக்குநரான மணிரத்னம் கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’ சிறப்பாகவே படமாக்கி யிருக்கிறார் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுடன் இப்படத்தை ஒப்பிட்டு பேசிவருகிறது. இப்படி பொன்னியின் செல்வன் குறித்த பேச்சு தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருந்துகொண்டே இருக்கிறது.

சரியான சமயத்தில் ரிலீஸான படம்...

பொன்னியின் செல்வன் குறித்து வரும் வாதம், எதிர்வாதம் விமர்சனங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வந்த விடுமுறை தினங்கள் படத்துக்குப் பாசிட்டிவ்வாக அமைந்தது. குடும்பத்தினர் சகிதமாக தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்க்கிறார்கள். இதுவரை தியேட்டர் பக்கமே வராத வயது முதிர்ந்தவர்கள்கூட புத்தகத்தில் படித்து வியந்த காவியத்தைத் திரையில் பார்க்க ஆவலுடன் வந்திருக்கிறார்கள்.

இதனால் உலகம் முழுவதும் சுமார் 3,150 திரை அரங்குகளில் படம் வெளியான முதல் நாள் அன்றே ரூ.82.50 கோடி வசூலைக் குவித்தது. ஆனாலும், ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் அளவுக்கு முதல் நாள் வசூல் இல்லை. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாக்களிலும் முதல் நாள் வசூலில் 2.0, கபாலி, பீஸ்ட் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில்தான் ‘பி.எஸ்-1’ உள்ளது.

ஆனால், அடுத்தடுத்த நாள் களில் படம் குறித்த பேச்சும் விமர்சனங்களும் தொடர்ந்து பார்வையாளர்களைத் தியேட் டர்களுக்கு அழைத்து வந்திருக் கின்றன. எனவே, ‘பி.எஸ்-1’ அதிக நாள்கள் திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடுவதற் கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.

வசூல் வரலாறுகளை உடைக்கும் பொன்னியின் செல்வன்!

கமலின் ‘விக்ரமை’த் தோற்கடித்தது...

ஐந்து நாள்களில் (கட்டுரை எழுதப்படும் நேரம் வரை யிலான நிலவரப்படி) ரூ.270 கோடியைத் தாண்டி வசூல் ஆகியுள்ளது. தமிழ் சினிமாக் களில் மிக வேகமாக ரூ.100 கோடி வசூலை எட்டிய திரைப் படம் என்ற சாதனையையும் ‘பி.எஸ்-1’ படைத்துள்ளது.

கூடவே அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் சினிமா என்ற சாதனையையும், இங்கிலாந்தில் கமலின் ‘விக்ரம்’ படம் பெற்ற வசூலைக் காட்டிலும் அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமை யையும் ‘பி.எஸ்-1’ பெற்றுள்ளது. தென் இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டுமென கணிக்கப் பட்டிருந்தது.

ஆனால், தமிழகத்தில் மட்டுமே ரூ.108 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல, கணித்தபடியே வெளிநாடு களில் மட்டுமே இப்படம்ரூ.102 கோடி வசூலைக் குவித்துள்ளது.

முதல் பாகத்திலேயே ரூ.500 கோடி வசூல்...

இந்தப் படம் இரண்டாம் வார இறுதியில் ரூ.350 கோடி வசூலை எட்டிவிடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. ‘பி.எஸ்-1’ முதல் பாகம் மட்டுமே நிறைவாக ரூ.500 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படு கிறது. இது தவிர, ஓ.டி.டி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ரூ.125 கோடிக்குப் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை எனக் கணிசமான விற்பனை வருவாயும் இருக்கிறது.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்தையும் அதிக பட்சமாக ரூ.500 கோடி வரை யிலான பொருள் செலவில் படமாக்கியிருக்கிறார்கள். அதன்படி பார்க்கையில், இரண்டு பாகத்தின் தயாரிப்புச் செலவை முதல் பாகத்திலேயே எடுத்துவிட்டது. இரண்டாம் பாகத்தின் விற்பனை முழுவதுமே படக் குழுவினருக்கு லாபம்தான் என்று சொல்லலாம். முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததுடன், இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் முதல் பாகத்தின் நிறைவு அமைந்திருக்கிறது. இரண்டாம் பாகம் 2023-ல் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மொத்த விற்பனையை அதிகரிக்கச் செய்யும்...

‘பி.எஸ்-1’ வசூல் குறித்து சினிமா தயாரிப்பாளர் கஸாலி இப்படி சொன்னார்... “பி.எஸ்-1’ படத்தின் வெற்றி அப்படத்தோடு மட்டுமே நிற்கப்போவதில்லை. ‘பாகுபலி’ தந்த வெற்றிதான் அதுபோன்ற பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களை எடுப்பதற்கான முன் உதாரணமாக அமைந்தது. அதுபோல, ‘பி.எஸ்-1’ படத்தின் வெற்றி தொடர்ந்து வரலாற்று காவியங்களைப் படமாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இதன்மூலம் தமிழ் சினிமாவின் விற்பனையும் அதிகரிக்கும். இப்போது தமிழ் சினிமா ஆண்டு விற்பனை ரூ.2,500 கோடியாக இருக்கிறது. ‘பி.எஸ்-1’ வெற்றியும் அதைத் தொடர்ந்து உருவாகப்போகும் வரலாற்று சினிமாக்களின் உருவாக்கமும் சாத்தியமானால், தமிழ் சினிமாத் துறையின் ஆண்டு விற்பனை ரூ.5,000 கோடியை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.

‘‘பி.எஸ்-1’-க்குக் கிடைத்துள்ள வெற்றி, ‘பி.எஸ்-2’-வுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. மணி சார், அடுத்த தமிழ்ப் புத்தாண்டில் ‘பி.எஸ்-2’-வை எதிர்பார்க்கலாமா..?