Published:Updated:

`அவரையும் தெரியாது; அவர் கதையும் தெரியாது' - 'கோமாளி' கதை விவகாரம் குறித்து இயக்குநர்

உ. சுதர்சன் காந்தி.

சங்கத்துலேயும் என் கதையுடைய ஒரு காப்பி இருக்கு. அதை அவங்க படிச்சுப் பார்த்தாலே புரியும்!

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

'கத்தி'யில் தொடங்கி 'சர்கார்' வரை தமிழ் சினிமாவில் சில பெரிய படங்களுக்கே தொடர்ந்து கதைத் திருட்டு விவகாரம் நடந்துகொண்டே வருகிறது. எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பித்த இந்த விவகாரம், நீதிமன்றங்கள் வரைகூட சென்றிருக்கிறது.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

அந்த வகையில், அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடித்துள்ள 'கோமாளி' படத்துக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் கதை தன்னுடையது எனக் கிருஷ்ணமூர்த்தி என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, 'கோமாளி' படத்துடைய இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் பேசினோம்.

அப்போது, ``அவர் எனக்கு யாருன்னே தெரியாது. அவருடைய கதையும் எனக்குத் தெரியாது. என் படத்துடைய புரொமோஷனையும் வெளியில சுத்துற செய்திகளையும் பார்த்துட்டு இது அவருடைய கதைனு நினைச்சிருக்கலாம். 'கோமாளி' கதையை 'முகேஷ்'ங்கிற பெயர்ல எழுத்தாளர் சங்கத்துல நான் பதிவு பண்ணியிருக்கேன். அதைப் படிச்சுப் பார்த்தா அவருக்கே ஒரு தெளிவு கிடைக்கும்னு நினைக்கிறேன். எழுத்தாளர் சங்கத்துக்கு நான் முறையா பதிலளிக்கலைனு சொல்றாங்க.

 கோமாளி
கோமாளி

ஆனா, நான் எல்லாத்துக்கும் சரியாதான் பதிலளிச்சிட்டிருக்கேன். 'நீங்க வரத் தேவையில்லை. உங்க அசிஸ்டென்ட்கிட்டகூட கதைச் சுருக்கத்தைக் கொடுத்து அனுப்புங்க'னு சங்கத்துல கேட்டாங்க. அதையும் நான் முறையா பண்ணிட்டேன். 'அவர் என்னுடைய அசோஸியேட்தான்'னு அவர்கிட்டயும் எழுதி வாங்கிக்கிட்டாங்க. சங்கத்துக்கு நானே வர்றேன்னு சொன்னேன். ஆனா, அவங்கதான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சங்கத்துலேயும் என் கதையுடைய ஒரு காப்பி இருக்கு. அதை அவங்க படிச்சுப் பார்த்தாலே அவருக்கு இருக்கிற சந்தேகங்கள் எல்லாம் தெளிவாகி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சிடும்னு நினைக்கிறேன்" என்று முடித்தார்.