Published:Updated:

சினிமா விமர்சனம்: கோமாளி

Jayam Ravi
பிரீமியம் ஸ்டோரி
News
Jayam Ravi

90’ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜியாவுக்காக ஒரு படமெடுத்தால் அதுதான் ‘கோமாளி.’

ள்ளி இறுதியாண்டில் தனக்குப் பிடித்த பெண்ணிடம் காதலைச் சொல்லச் செல்லும்போது விபத்துக்குள்ளாகி, கோமாவில் விழுகிறார் ஜெயம் ரவி. ஒன்றில்லை, இரண்டில்லை, 16 ஆண்டுகள்! அதன்பின் கண் விழித்துப் பார்த்தால் உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது. தன் வாழ்க்கையில் தொலைத்த 16 ஆண்டுகளை நினைத்து வருந்தி... மீண்டு... தட்டுத் தடுமாறி செட்டிலாகி, காதலில் விழுந்து என அத்தனை களே பரங்களையும் காமெடி கலந்த கதையாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
சினிமா விமர்சனம்: கோமாளி

கடந்த சில படங்களாக சீரியஸ் ரோல்களில் லேண்ட் ஆகிவந்த ஜெயம் ரவிக்கு இது ‘கலகல’ டேக் ஆஃப்! மொத்தமாய்ச் சேர்த்து வைத்து ரவுண்டு கட்டி அடிக்கிறார். ‘பழசு... புதுசு’ என பேலன்ஸ் செய்த விதம் அழகு! தனி ஒருவனுக்குத் தளபதியாக யோகிபாபு. காட்சிக்குக் காட்சி சீட்டுக்கடியில் வெடி கொளுத்திப் போடும் அவர் ஒருசில இடங்களில் குணச்சித்திர ஏரியாவையும் தொட்டுப் போகிறார். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் எனச் சொல்லுமளவிற்கு இருவரும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

comali
comali

காஜல்... வித்தியாசமான கதையின் வழக்கமான ஹீரோயின். சம்யுக்தா ஹெக்டே, வினோதினி, ஆர்.ஜே ஆனந்தி ஆகியோருக்கு காஜலைவிட அதிக ஸ்கோப் இருப்பதால் ஈஸியாக ஓவர்டேக் செய்துவிடுகிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார், ராமர், அகஸ்டின் எனத் திரையில் தோன்றுபவர்கள் எல்லாம் தங்கள் பங்கிற்கு சிரிப்பு மீட்டரை ஏற்றி வைக்கிறார்கள்.

காமெடியில் மட்டுமே முக்கியத்துவம் செலுத்தியதால் கேமரா, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் பைபாஸ் பேருந்துகள்போலக் கடந்து போகின்றன. ‘ஹிப்ஹாப்’ ஆதி புதிதாக ட்யூன்கள் யோசிப்பது அவருக்கும் நல்லது, தமிழ் சினிமாவிற்கும் நல்லது!

தமிழ்ப்பட வரலாற்றில் காமெடி ஜானரில் எந்தப் படமும் லாஜிக்கோடு வந்ததாக சரித்திரமே இல்லை. கோமாளியும் அப்படியே! ரஜினி பற்றிய சர்ச்சைக் காட்சியை நீக்கியதை வைத்தே காமெடி செய்வது, டெக்னால ஜியை டெக்னால ஜியாலேயே கிண்டல டிப்பது என காமெடி ஏரியாவில் புகுந்து விளை யாடுகிறார் இயக்குநர் பிரதீப். ஆனால், கடைசி 20 நிமிடங்கள் வான்ட டாகத் திணித்த எமோஷனல் எபிஸோடு போலத் துருத்திக்கொண்டி ருப்பதுதான் படத்தில் பிரச்னை.

‘அட, கேக்கவே நல்லா இருக்கே’ என ஒன்லைனே எதிர்பார்ப்பை ஏற்றியது சரிதான். ஆனால், இறுதியில் வரும் பழக்கப்பட்ட முடிவை மட்டும் மாற்றியிருந்தால் கோமாளி இன்னும்கூடக் கொண்டாடப்பட்டிருப்பான்.