Published:Updated:

``ஏன் நடிக்கலைன்னு கேட்டா, ஒரு பதில் சொல்வார் பாருங்க வடிவேலு!'' - பாண்டு

பாண்டு
பாண்டு

"காமெடிகளில் டபுள் மீனிங் வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும் என் காமெடிகளில் அப்படி உபயோகித்தது இல்லை. காமெடி எப்போதும் ரசிக்கக்கூடிய ஒன்றாக மட்டும்தான் இருக்க வேண்டும்."

பிசினஸ்மேனாக இருந்த பாண்டுவுக்கு சினிமா வாய்ப்பு எப்படி வந்தது?

`` `பில்லா’ன்னா அஜித் கோட்... `பிகில்’ல என்ன தெரியுமா?!'' - அனுவர்தன் ஷேரிங்ஸ்

"எங்க குடும்பம் முழுக்கவே பிசினஸ்தான் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நடிகர் பிரபு எங்க குடும்ப நண்பர். அவருக்கு என்னோட பேச்சு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி என்கிட்ட `நீங்க இருக்கிற இடமே கலகலன்னு இருக்கு'ன்னு சொல்வார். என் முதல் படமான `என் உயிர் கண்ணம்மா'வில் நடிக்க அவர்தான் காரணம். அதுக்குப் பிறகு, பிசினஸோடு சேர்ந்து நடிப்பும் தொடர்ந்து வந்திடுச்சு!"

`முதல் மரியாதை' படத்துக்குப் பிறகு `சிங்கம்' படத்துல `சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி' வசனம் நல்லா வொர்க் அவுட் ஆகியிருந்தது. அந்த வசனம் படத்தில் இடம்பெற்ற சூழலைச் சொல்லுங்களேன்!

பாண்டு
பாண்டு

" 'முதல் மரியாதை' படத்துல அந்த வசனம் சோகமான ஒரு காட்சியில வரும். `சிங்கம்' படத்தின் காமெடி டிராக்ஸ் எல்லாத்தையும் நடிகர் விவேக்தான் எழுதினார். ஆனா, என் கேரக்டரை மட்டும் இயக்குநர் ஹரி திரைக்கதையிலேயே வெச்சிருந்தார். இந்த வசனமும் அதுல இருந்ததுதான். முதல்ல நான் இந்த வசனம் படத்துக்கு வேண்டாம்னு சொன்னேன். ஹரிதான் `வொர்க் அவுட் ஆகும் சாா்... நீங்க பண்ணுங்க'ன்னு சொன்னாா். அவர் சொன்ன மாதிரியே இந்த வசனத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்!"

அஜித் - விஜய் இருவரின் ஆரம்பகால சினிமாக்களில் நீங்கள் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளீர்கள். அவர்களைப் பற்றி?

அஜித்
அஜித்

"'தல' அஜித்தும், `தலைவர்' எம்.ஜி.ஆரும் ஒரேமாதிரி! ரெண்டுபேரும் நல்ல கலர். அதேமாதிரி தனக்கு எது தேவை, தன்னோட குறை என்ன என்பதைச் சிந்தித்து செயல்படும் நடிகரா இருக்கார், அஜித். நடிப்புத் திறமை அவர்கிட்ட கொட்டிக்கிடக்கு. நடிக்கும்போது அவர் நடிப்பு ஒருமாதிரியும், திரையில பார்க்கும்போது வேறமாதிரியும் இருக்கும்... அதுதான் அவர் தற்போது இருக்கும் உச்சத்துக்குக் காரணம். தவிர, எம்.ஜி.ஆரை நான் ஷூட்டிங் ஸ்பாட்ல வேடிக்கை பார்த்திருக்கேன். லைட்டிங்ல தகதகன்னு மின்னுற அவரோட கலர், அஜித்துக்கு அப்படியே இருக்கு! எம்.ஜி.ஆரை நான் பார்த்திருக்கேன், அஜித்கூட நான் நடிச்சிருக்கேன். இவ்வளவுதான் வித்தியாசம்.

விஜய்
விஜய்

தளபதி விஜய், ஷூட்டிங் ஸ்பாட்ல எதையுமே கவனிக்காத மாதிரியே இருப்பார். ஆனா, ஒவ்வொருத்தரையும் உள்வாங்கிப்பார். அமைதியா இருக்கிறதுதான் அவரோட அழகு!"

டபுள் மீனிங் காமெடிகள் பற்றி உங்கள் கருத்து?

"காமெடிக் காட்சிகளில், வசனங்களில் டபுள் மீனிங் வைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நானும் என் காமெடிகளில் அப்படிப் பயன்படுத்தியது கிடையாது. காமெடி எப்போதும் ரசிக்கக்கூடிய ஒன்றாக மட்டும்தான் இருக்க வேண்டும்."

வடிவேலு
வடிவேலு

காமெடிக் களத்தில் உங்களோடு சமகாலத்தில் வளர்ந்து வந்தவர், வடிவேலு. சமீபமாக அவரைத் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. இதுபற்றி அவரிடம் பேசியிருக்கிறீர்களா?

"வடிவேலு மிகச் சிறந்த கலைஞன். அவர் கண்டிப்பா மறுபடியும் வந்து நடிக்கணும். நான் அவர்கிட்ட பலமுறை இதைப் பற்றிப் பேசியிருக்கேன். அவரும், `பண்ணுவோம்ணே... பண்ணுவோம்ணே!'ன்னு சொல்றார். பார்ப்போம்!"

உங்களுடைய பாடிலாங்குவேஜை மிகவும் ரசிக்கும் நடிகர் யார்?

`அவன் கண்டிப்பா வரணும்!’ வடிவேலு பற்றி விவேக்

"பொதுவாக எல்லா நடிகரும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தா, என்னோட சின்ன சின்ன ரியாக்‌ஷன்களைப் பண்ணிக்காட்டச் சொல்வாங்க. ஆனா, என் நெருங்கிய நண்பர் பிரபுதேவா மட்டும் என்னோட `வணக்கம்' சொல்ற ஸ்டைலை பண்ணச் சொல்லிக் கேட்டது, அதுதான் இப்போ பயங்கர ஃபேமஸ்!"

இவை தவிர, `பிசினஸ்மேன் டு நடிகரான கதை', தனக்கு இருந்த பவர், தனக்காக வாதாடி ஒரு வழக்கை வெற்றிபெற வைத்த சாருஹாசன்... எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், பாண்டு. அவருடைய முழுமையான பேட்டியை இந்த வீடியோ இணைப்பில் பார்க்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு