Published:Updated:

` இது அரேஞ்டு மேரேஜ் பிரதர்...!' நடிகர் சதீஷுக்கு டிசம்பரில் டும் டும் டும்

நடிகர் சதீஷ், பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார். அதில், `எதிர்நீச்சல்', `கத்தி', `ஆம்பள', `பைரவா', `ரெமோ' போன்ற படங்கள் முக்கியமானவை. 

சதீஷ்
சதீஷ்

`தமிழ் படம்' மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் சதீஷ். `மதராசப்பட்டினம்', `எதிர் நீச்சல்', `மான் கராத்தே' ஆகிய படங்களில் ஆரம்பித்து தற்போது `சிக்ஸர்' வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இவருக்குத் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது.

சினிமாவில் நடிக்க வருவதற்குமுன் கிரேஸி மோகனுடன் 8 வருடங்கள் பணியாற்றிய இவர், சிவா நடிப்பில் வெளியான `தமிழ் படம்' மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகத் தன்னை அடையாளம் காட்டத் தொடங்கினார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர், விஜய், விஷால், தனுஷ், பிரபுதேவா எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அதில், `எதிர்நீச்சல்', `கத்தி', `ஆம்பள', `பைரவா', `ரெமோ' போன்ற படங்கள் முக்கியமானவை.

சதீஷ்
சதீஷ்

எல்லா பேட்டிகளிலும் இவர் நடிக்கும் படங்களைப் பற்றி கேட்கப்படுகிறதோ இல்லையோ, டெம்ப்ள்டேட்டாக இவரிடம் கேட்கப்படும் கேள்வி, `எப்போ கல்யாணம்?'. அதற்கு விடை தரும் விதமாக நேற்று இவருக்கு நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டது. இதையடுத்து, அவரை போனில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். இதற்காக நன்றி சொன்னவர், தனக்கு டிசம்பர் மாதம் திருமணமாகப் போவதையும் புதுமாப்பிளை டோனிலே சொன்னார்.

``என்ன ப்ரதர், லவ் மேரேஜா?'' எனக் கேட்டதற்கு, ``அதெல்லாம் இல்ல ப்ரதர். வீட்டுல பார்த்த பொண்ணைத்தான் கல்யாணம் பண்றேன். அரேஞ்டு மேரேஜ்தான்'' என்றார்.

`100% காதல்', `4ஜி', `அருவம்' உள்ளிட்ட பல படங்கள், இவர் நடிப்பில் வெளிவரக் காத்திருக்கின்றன.