Published:Updated:

``விஜயகாந்த் மாதிரி பேசச்சொல்லி ஜெயலலிதாவும், சசிகலாவும் வயிறு வலிக்க சிரிச்சாங்க!" - சிங்கமுத்து

சிங்கமுத்து

`` `ப்ரண்ட்ஸ்' படத்தில் நேசமணி கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால்தான் நன்றாக இருக்கும் என நான்தான் அவரிடம் பேசினேன்'' என்கிறார், சிங்கமுத்து.

``விஜயகாந்த் மாதிரி பேசச்சொல்லி ஜெயலலிதாவும், சசிகலாவும் வயிறு வலிக்க சிரிச்சாங்க!" - சிங்கமுத்து

`` `ப்ரண்ட்ஸ்' படத்தில் நேசமணி கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால்தான் நன்றாக இருக்கும் என நான்தான் அவரிடம் பேசினேன்'' என்கிறார், சிங்கமுத்து.

Published:Updated:
சிங்கமுத்து

வடிவேலு என்றாலே நிச்சயம் சிங்கமுத்துவும் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு வடிவேலுடனான அத்தனை படங்களிலும் ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்தவர். இடையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நிறைய படங்களில் வடிவேலு நடிக்கமாட்டேன் என்று சொல்வார். உடனிருக்கும் நாங்கள்தான் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைப்போம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், `ப்ரண்ட்ஸ்' படத்தில் நேசமணி கேரக்டர், `23-ஆம் புலிகேசி' போன்றவற்றைச் சொல்லலாம்.

சிங்கமுத்து
சிங்கமுத்து

`ப்ரண்ட்ஸ்' படத்தில் நேசமணி கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால்தான் நன்றாக இருக்கும் என நான்தான் அவரிடம் பேசினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, `23-ஆம் புலிகேசி'யில் நடிக்க ஆர்வமில்லாமல் இருந்தார். `எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய ஹீரோக்கள்தான் இதுவரை மன்னர் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு காமெடி நடிகனுக்கு சினிமாவில் அப்படியொரு வாய்ப்பு அமைந்ததே இல்லை. இந்தப் பெருமை உன்னைப் போன்ற ஒரு காமெடி நடிகனுக்குக் கிடைக்கட்டுமே' என்றேன். அதன் பிறகுதான் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இன்னொரு விஷயம் தெரியுமா, வடிவேலு எந்தப் படத்தில் நடித்தாலும், தன்னுடைய கேரக்டரை வேறுயாரும் பண்ணிடமுடியாத அளவுக்கு நடித்திருப்பார். அப்படி ஒரு திறமையான ஆள்.

அப்படி வெறித்தனமாக நடித்து முடித்திருந்தாலும், ஷூட்டிங் முடிந்த இரவுகளில் அவருடைய புலம்பல்களைக் கேட்டிருக்கேன். `இந்தப் படம் நல்லா வந்திடுமா, ஹிட் அடிக்குமா' என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார். நானும், `படம் நல்லா ரீச் ஆகும். கவலைப்படாதே' என சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆரம்பத்தில் நான் வாங்கிய சம்பளம் 2,000 ரூபாய், அவர் வாங்கிய சம்பளம் 1,500. போகப் போக அடுத்தடுத்த படங்களுக்கு இரண்டு, மூன்று மடங்கு... என ஒரு வருடத்திலேயே பணக்காரர் ஆனார்.

சிங்கமுத்து
சிங்கமுத்து

நான் அவருக்கு எலுமிச்சம்பழம் கொடுத்து ஆசீர்வதிப்பேன். அவருக்கும், எனக்குமான பிரச்னைகளுக்குப் பிறகு என்னிடம் ஆசீர்வாதம் பெறுவதில்லை'' என்றவரிடம், சில கேள்விகளைக் கேட்டேன்.

`` `சிங்கமுத்து' என்கிற பெயர் எப்படி வந்தது?''

``சிங்கமுத்து அய்யனார் எங்க குல தெய்வம். புதுக்கோட்டையில் அந்தக் கோயில் இருக்கு. அந்தச் சாமி நினைவா, எனக்கு சிங்கமுத்து எனப் பெயர் வந்தது.''

``விஜயகாந்த் மாதிரி மிமிக்ரி பண்ணீங்களே.. இப்போதும் அது தொடர்கிறதா?''

``அம்மா இருந்தபோது, விஜயகாந்த் வாய்ஸை விளையாட்டாகப் பேசப்போய், ஜெயலலிதாவும், சசிகலாவும் என்னை அழைத்து மறுபடியும் பேசிக்காட்டச் சொல்லி வயிறு வலிக்க சிரிச்ச கதையெல்லாம் நடந்திருக்கு. அதற்குப் பிறகுதான் ஜெயா டிவி-யில் `நல்லா சொல்றாங்கையா டீட்டெயிலு' நிகழ்ச்சியை நானும், போண்டா மணியும் சேர்ந்து செய்தோம்.''

``கமல், ரஜினி அரசியல் பற்றி உங்கள் கருத்து?''

``கமல்ஹாசன் சிறந்த ஹீரோ. மக்களுக்குப் பிடிக்கும்படியான தர்மகாரியங்களில் ஈடுபடவில்லை. கடந்த ஒன்றரை வருடமாகத்தான் மக்களுக்காகப் பேசுகிறார். அவர் தனது 30 வயதில் உடம்பில் தெம்பு இருக்கும்போது அரசியலில் இறங்கியிருக்க வேண்டும். 60 வயதுக்கும்மேல் ஆகியிருக்கும் இந்த நிலையில் அவர் மக்களுக்காக உழைத்தால், சந்தோஷம்தான்.

அதேபோல, ரஜினி அரசியலுக்கு வரலாம் என்றுதான் இருந்தார். அதற்குள் கமல் என்கிற நடிகர் குறுக்கிட்டுவிட்டார். இப்போது நோட்டம் விடுறார். படம் ரிலீஸாகும்போது மட்டும் அரசியலுக்கு வருவதாகப் பரபரப்பாகப் பேசுவார். நடிகர் பட்டாளம் வரும்போது, நாமும் அவர்களில் ஒருவராக இருக்கிறோமே என்பதால் இன்னும் அரசியலுக்கு வராமல் இருக்கிறார்.''

``தே.மு.தி.க-வில் பிரேமலதாவின் செயல்பாடுகள்?''

சிங்கமுத்து
சிங்கமுத்து

``விஜயகாந்தைவிட பிரேமலதா பேச்சாற்றல் உள்ள ஆளாகத்தான் நான் பார்க்கிறேன். விஜயகாந்த் நூற்றுக்கணக்கான படங்களில் பேசிய வசனங்களையா இனி பேசப்போறாங்க. பத்து பக்கம் என்றாலும், மனப்பாடம் பண்ணாமல் பேசக்கூடியவர். அவர் நேரமோ என்னவோ, உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அதனால், அந்தப் பொறுப்பை எடுத்துச் செய்கிறார், பிரேமலதா. எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, ஜெயலலிதா ஊர் முழுக்கப் பிரசாரம் செய்ததுபோல, இப்போது பிரேமலதா கட்சியை வழிநடத்துகிறார்.''

``அ.தி.மு.க தலைமையில் இரண்டு பேருக்கும் இடையில் பிரச்னைகள் இருப்பதாகச் செய்திகள் வருகிறதே?''

சிங்கமுத்து
சிங்கமுத்து

``ஒருத்தர் முதல்வராக இருந்திருந்தால், இந்தப் பேச்சுக்கள் வராது. இரண்டு பேர் இருப்பதால் இப்படியான பேச்சுகள் வரத்தான் செய்யும்.''

``படங்களில் உங்களை மீண்டும் எப்போது பார்க்கலாம்?''

``வரிசையாக மூன்று படங்கள் வரப்போகுது. இன்னும் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். தம்பி, தங்கச்சி என 19 பேரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்தது. சென்னைக்கு வந்து அரிசி மண்டி வைத்து, திருச்சியில் வேலை பார்த்து, கன்டக்டராக இருந்து, ஒருவரது அறிமுகத்தால சினிமாவுக்குள் வந்தேன். அந்த வகையில், சினிமா என்னுடைய பத்தாவது அவதாரம். இப்போது, ஆன்மிகச் சொற்பொழிவும் பண்றேன். அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் என மேடையில் பேச ஆரம்பித்தால், என் பேச்சு நீண்டுகொண்டே இருக்கும்'' எனச் சிரித்தார், சிங்கமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism