Published:Updated:

வாணிஶ்ரீயின் மகன் உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா?

வாணிஸ்ரீ

வாணிஸ்ரீயின் கணவர் கருணாகரன் நம்மிடம் ஏன் பொய் சொன்னார் என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. அதன்பிறகு நாம் கருணாகரனைத் தொடர்பு கொண்ட போதெல்லாம், நம் அழைப்பை அவர் ஏற்கவேயில்லை.

வாணிஶ்ரீயின் மகன் உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா?

வாணிஸ்ரீயின் கணவர் கருணாகரன் நம்மிடம் ஏன் பொய் சொன்னார் என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. அதன்பிறகு நாம் கருணாகரனைத் தொடர்பு கொண்ட போதெல்லாம், நம் அழைப்பை அவர் ஏற்கவேயில்லை.

Published:Updated:
வாணிஸ்ரீ

நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய் வெங்கடேஷ் கார்த்திக்கின் திடீர் மரணம் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

அபிநய் இறந்த மறுநாள் காலையில் அவரின் தந்தை கருணாகரனிடம் நாம் பேசியபோது, ``மகன் திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார்" என்றார் அவர். கூடவே, தன்னுடைய குடும்பத்தில் தொடர்ந்து இப்படிச் சிறுவயதில் மாரடைப்பால் இறப்பது நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், அடுத்த சில மணிநேரங்களிலேயே அபிநய் வேட்டியில் தூக்கிட்டுக் கொண்டதாகச் செய்தியும், தரையில் வேட்டி முடிச்சோடு கிடத்தப்பட்ட அவரது உடலின் புகைப்படமும் வெளியே வந்தன.

கருணாகரன் ஏன் பொய் சொன்னார் என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. அதன்பிறகு நாம் கருணாகரனைத் தொடர்புகொண்ட போதெல்லாம், நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

அபிநய் வெங்கடேஷ் கார்த்திக்
அபிநய் வெங்கடேஷ் கார்த்திக்

இப்போது, இறந்து போன அபிநய் குறித்து `கடந்த சில வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்தார்’, `மதுவுக்கு அடிமையாக இருந்தார்’ என்கிற ரீதியில் சில தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

ஆனால், வாணிஸ்ரீக்கு மிக நெருக்கமான ஒரு நடிகையிடம் நாம் பேசியபோது, ``அபி ரொம்ப புத்திசாலிப் பையன். ஸ்போர்ட்ஸ்ல, குறிப்பா கிரிக்கெட்ல நல்ல ஆர்வம். ஸ்போர்ட்ஸ் மெடிசின் சீட்டுக்கு அவ்ளோ போட்டி இருந்தது. தன்னுடைய திறமையாலயே அந்த சீட்டை வாங்கினான். என்கிட்ட அடிக்கடிப் பேசுவான். அவனுக்கு மன அழுத்தம்கிறதெல்லாம் ரொம்ப அதிகமான பேச்சு'' என்றார்.

வாணிஸ்ரீ குடும்பத்தை நன்கு அறிந்த நண்பர்கள் சிலரோ வேறு மாதிரியான சில விஷயங்களைச் சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பணம்தாங்க பிரச்னை. நுங்கம்பாக்கத்துல கோடிக்கணக்குல விலைபோகுற வீடு இருக்கு. திருக்கழுக்குன்றம் வீடும் அரண்மனை மாதிரி இருக்கும். சில வருடங்களுக்கு முன்னாடி சென்னை சூளைமேட்டுலகூட கோடிகள்ல ஒரு இடத்தை இந்தக் குடும்பம் விலைக்கு வாங்கினாங்க.

அந்தப் பையன் தன்னுடன் படிச்ச பொண்ணை லவ் பண்ணிக் கல்யாணம் முடிச்சப்பவே வீட்டுல பயங்கர எதிர்ப்பு. வாணிக்கு அந்தக் கல்யாணத்துல கொஞ்சம்கூட இஷ்டமில்லை வாணிஸ்ரீ அவ்வளவு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனா, அபிநய் பிடிவாதமா இருந்ததால அந்தக் கல்யாணம் நடந்துச்சு.

இப்ப திடீர்னு அந்தப் பையன் இறந்துட்டான்ங்கிற நியூஸ். எட்டு மாசத்துல ஒரு குழந்தையும் 4 வயசுல ஒரு குழந்தையும் இருக்கற நிலையில ஒருத்தருக்கு எப்படித் தூக்குப்போட்டு தற்கொலை செஞ்சுக்க மனசு வரும்னு தெரியலை. அதுவும் போக அந்தப் பையன் டாக்டர். எதுவுமே நம்புற மாதிரி இல்லை.

இவ்ளோ நாளும் ஆனூர் பங்களாவுக்குப் போகாம இருந்த வாணிஸ்ரீ இப்ப பையன் இறந்த பிறகு அந்தப் பங்களாவுக்குப் போயிட்டதா தெரியுது. இப்ப அந்தப் பையனோட மனைவி பிள்ளைகள் எங்க இருக்காங்கன்னும் யாருக்கும் தெரியலை’’ என்றார்கள்.

வாணிஶ்ரீ
வாணிஶ்ரீ
Photo (File): Vikatan

மகன் இறந்தது குறித்துக் கேள்விப்பட்டு துக்கம் விசாரிப்பதற்காக வாணிஸ்ரீயிடம் பேசிய சிலரிடம் ரொம்பவும் இயல்பாகவே பேசினாராம் வாணிஸ்ரீ. ``விதி முடிஞ்சுடுச்சு... போயிட்டான்'' என்று சொல்லியிருக்கிறார்.

வாணிஸ்ரீயிடம் பேசலாம் என அவரது மொபைல் எண்ணில் தொடர்புகொண்டோம். நம் அழைப்பை எடுத்து சில விநாடிகள் நன்றாகப் பேசியவர், ``உங்களுக்கும் உங்க பையனுக்கும் இடையில் சொத்துப் பிரச்னையா?'' எனக் கேட்டதும், ``நான் அவங்க வீட்டு வேலைக்காரி பேசுறேன். உங்களுக்கு வேற வேலை இல்லையா...'' என்றவர், தொடர்ந்து சில தகாத வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

அபிநய் மரணம் குறித்து திருக்கழுக்குன்றம் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``அபிநய் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான் எங்களது முதல்கட்ட விசாரணை முடிவு. மற்றபடி நாங்கள் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றவரிடம் ``இறந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் ஏன் இன்னும் மருத்துவ அறிக்கை வரவில்லை'' எனக் கேட்டோம். ``பொதுவாக 10 நாள்களுக்குள் வந்துவிடும். இப்போது கொரோனா பிரச்னையால் கொஞ்சம் தாமதமாகிறது. விரைவில் வந்துவிடும். அந்த அறிக்கை வந்ததும் தகவல் சொல்கிறோம்'' என்றார்கள்.