Published:Updated:

"த்ரிஷாவுக்குப் பிடிக்காத காஸ்ட்யூம், ஃபிட் தனுஷ், வெஸ்டர்ன் சசிகுமார்..." - உத்ரா மேனன் ஷேரிங்ஸ்

காஸ்ட்யூம்
காஸ்ட்யூம்

அதேபோல, த்ரிஷாவின் தோற்றத்தையும் மாற்றிப்பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால், இவற்றில் எதிலும் த்ரிஷாவுக்கு உடன்பாடே இல்லை. ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் சம்மதிக்கவைத்தோம்.

கௌதம் மேனன் திரைப்படங்களின் எமோஷனல் வசனங்கள் மட்டுமல்ல, கதாநாயகர்களின் காஸ்ட்யூம்களும் பேசப்படும். 'சால்ட் அண்ட் பெப்பர்' ஸ்டைலில் முதன்முதலில் நாம் அனைவரும் ரசித்துப் பார்த்த அஜித்தின் 'காப்' கெட் அப் முதல், விரைவில் வெளியாகவிருக்கும் 'துருவ நட்சத்திரம்' விக்ரமின் 'ரஃப்' ஸ்டைல்வரை அனைத்தும் மக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடிக்கும்.

Uthara Menon
Uthara Menon
"ஹாய் கௌதம்... உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க...!?" சிம்ரன் சீக்ரெட்ஸ்

'ஹேமானிகா', 'லீலா ராமன்' என இவர் திரைப்பட கதாநாயகிகளின் எக்ஸ்ட்ரா அழகுக்கு அவர்களின் ஸ்மார்ட் ஆடைகளும் காரணம். இப்படி இந்த அழகியலுக்கெல்லாம் காரணமாக இருப்பவர், கௌதம் மேனனின் சகோதரி, காஸ்ட்யூம் டிசைனர் உத்ரா மேனன். படபடவெனப் பேச ஆரம்பித்தவரோடு ஒரு சின்ன சாட்.

உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?

Gautham Menon with his Mother
Gautham Menon with his Mother

என் அம்மா. அவங்க எப்போதுமே எளிமையான புடவைகள்தான் உடுத்துவாங்க. ஆனால், அதை அவங்க கேரி பண்ணுற விதம் அனைவரையுமே திரும்பிப் பார்க்கவைக்கும். அந்தக் காலத்திலேயே விதவிதமான ஸ்டைலில் வித்தியாசமான பிளவுஸ் தைத்து உடுத்தினாங்க. செயின், கண்ணாடி, வளையல் என தலை முதல் பாதம்வரை எல்லாமே ஆடைக்கு மேட்ச்சாகத்தான் இருக்கும். அம்மாவைப் பார்க்கிறவங்க, அவங்களோட நிறைவான ஃபேஷன் சென்ஸை பாராட்டாமல் போகமாட்டாங்க. இப்படி அம்மாவை தினமும் பார்த்து வளர்ந்ததால், அவங்களோட தாக்கம் எனக்குள் இருந்திருக்கலாம்னு நினைக்கிறேன்.

உங்களின் பர்சனல் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் என்ன?

Uthara Menon
Uthara Menon

எனக்கு, 'பொஹீமியன்' தோற்றம் ரொம்பப் பிடிக்கும். ஆனால், என் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் என்னோட ஜோலா பேக்தான். இந்தப் பை இல்லாமல் நான் வெளியில் எங்கேயும் போக மாட்டேன். எவ்வளவு பெரிய விழாவாக இருந்தாலும் காதி குர்தா, ஜீன்ஸ், ஜோலா பேக்... எனக்கு இவை மட்டும் போதும்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ்... மாஸ் ஹீரோக்களை மாற்றிய மேக் ஓவர் படங்கள்!

முதல் ஆடை வடிவமைப்பு மற்றும் பட வாய்ப்பு பற்றி?

பள்ளியில் படிக்கும்போது, ஃபேஷன் ஷோ போட்டிகளில் பங்குபெற்றிருக்கிறேன். அப்போது ஒருமுறை, 'காதி கிராமோத்யோக் ஃபேஷன் ஷோ'வில் கலந்துகொள்வதற்காக முதன்முறையாக நானும் என் அக்காவும் சேர்ந்து, 'ஆஃப்-ஷோல்டர் கவுன்' ஒன்றை வடிவமைத்தோம். அதற்காக முதல் பரிசும் வாங்கினேன். அந்த நேரத்தில், வடிவமைப்பின் மேல் அவ்வளவாக ஈர்ப்பில்லை. மாடலிங் துறையில்தான் அதிக கவனம் செலுத்தினேன். நிறைய விதவிதமான ஆடைகள் உடுத்தும்போதெல்லாம், பல எண்ணங்கள் மனதில் தோன்றும். அப்படித் தோன்றியதுதான் நிறங்களைப் பற்றிய சிந்தனை. 'மேற்கத்திய நிறங்களை ஏன் இங்கு கொண்டுவரக்கூடாது' என்ற எண்ணம்தான் ஆடை வடிவமைப்பிற்கான என் முதல் படி.

Ennai Arindhaal
Ennai Arindhaal

பிறகு, ஒரு ஸ்டில் ஷூட் பண்ணுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ரிக்லீஸ், ஷாரன் பிளைவுட், ஜி.ஆர்.டி ஜுவல்லரி போன்ற நிறைய விளம்பரப் படங்களில் ஸ்டைலிஸ்ட்டாக வேலைபார்த்தேன். ஒருமுறை என் கணவர் தயாரிப்பில், என் அண்ணன் இயக்கிய 'மிரிண்டா' விளம்பரத்துக்கு முதன்முறையாக ஆடை வடிவமைத்தேன். இதற்கு அப்புறம்தான் அண்ணா அவருடைய அடுத்த திரைப்படத்துக்கு ஆடை வடிவமைக்க முடியுமா என என்னைக் கேட்டார். அப்படி அமைந்ததுதான் 'என்னை அறிந்தால்' படம்.

முதல் திரைப்பட அனுபவம்?

Trisha from Ennai Arindhaal
Trisha from Ennai Arindhaal

மறக்கவே முடியாதது. த்ரிஷாவின் 'ஹேமானிகா' கதாபாத்திரத்திற்கான காஸ்ட்யூம் தேர்வுக்காக, ஒரு நாள் முழுவதும் துணிக்கடையில்தான் நேரத்தைச் செலவிட்டோம். எப்போதும் இருக்கிற பரதநாட்டியம் அவுட்ஃபிட்டைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற முடிவோடுதான் கடைக்குள்ளேயே போனேன். பிரொகேட், காஞ்சி காட்டன் போன்ற துணிவகையில் இண்டோ-வெஸ்டர்ன் ஸ்டைல் ஆடைகளை உருவாக்கினோம். அதேபோல, த்ரிஷாவின் தோற்றத்தையும் மாற்றிப்பார்க்கலாம் என்று தோன்றியது. ஆனால், இவற்றில் எதிலும் த்ரிஷாவுக்கு உடன்பாடே இல்லை. ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் சம்மதிக்கவைத்தோம். படம் வெளியானதும் த்ரிஷா ரொம்ப ஹேப்பி. எங்கள் உழைப்பு வீண் போகவில்லை என நினைக்கிறேன்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' பயணம் எப்படி இருந்தது?

Enai nokki paayum thottaa
Enai nokki paayum thottaa

அது ஒரு நீண்ட பயணம். தனுஷுக்கு கல்லூரி மாணவர் தோற்றம். தனுஷ் இதுபோன்ற கதாபாத்திரத்தில் அதிகம் நடிக்காததால், அவருக்கு அந்தத் தோற்றம் கொண்டுவருவது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. 1920-ல் பயணிக்கிற சின்ன பாகம் ஒன்று இந்தப் படத்தில் இருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் ஆராய்ச்சி வேலைகள் செய்தோம். மெல்லிய ஸ்ட்ரைப் பேட்டர்ன், வெயிஸ்ட்கோட், ஃபார்மல் பேன்ட் மற்றும் சட்டை, தொப்பி, வித்தியாசமான ஷூ என நிறைய அழகான விஷயங்கள் இந்தச் சின்ன பீரியட் பகுதியில் இருக்கு. மேகா கதாபாத்திரம் ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும். அவருக்கு, வெவ்வேறு காட்சிகளுக்கு ஏற்ப வித்தியாச துணி வகைகளில் க்ளாஸியாக வடிவமைத்திருக்கிறோம்.

ஆடை தேர்வுகளில் தனுஷ் எப்படி?

ENPT
ENPT

தனுஷ் செட்டில் இருக்கிறாரா என்றே தெரியாது. அவ்வளவு அமைதியான மனிதர். உடையில் ஏதாவது மாற்றம் தேவைப்பட்டால் மட்டுமே பேசுவார். அவரைப் பொறுத்தவரை 'ஃபிட்' சரியாக இருக்க வேண்டும். மற்றபடி எதுவும் சொல்ல மாட்டார்.

சசிகுமாருக்கு ஆடை வடிவமைத்த அனுபவம் எப்படி இருந்தது?

Sasikumar
Sasikumar

சசிகுமாருக்கு எளிமையான ஸ்டைல்தான். ஆனால், நிச்சயம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். அவருக்காக வெஸ்டர்ன் - கேஷுவல் வகை ஆடைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இதுபோன்ற ஆடைகளை அவர் அதிகம் உபயோகிக்காததால், அவருக்கு ஏராளமான ட்ரையல் பார்த்தோம். மக்களுக்கு இந்த லுக் பிடிக்கும் என நம்புகிறேன்.

உங்கள் வேலைகளில் கௌதம் தலையிடுவது உண்டா?

நிச்சயம் இல்லை. அவருக்கான குழுவைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர்கள்மேல் முழு நம்பிக்கை வைத்துவிடுவார். இரண்டு மூன்று மீட்டிங்குகள் இருக்கும். அப்போதே படத்திற்குத் தேவையான எல்லா விஷயங்களையும் தெளிவாகச் சொல்லிவிடுவார். அதன்பிறகு எதுவும் சொல்லவே மாட்டார். அவர் சொன்னதை எந்த அளவுக்கு புரிந்துகொண்டு செய்கிறோமோ அதுதான் அவுட்புட். சில சமயம், நடிகர்களுக்கு அவர் சொல்கிற சில விஷயங்கள் பிடிக்காது. அதைச் சரிசெய்ய, நடிகருக்குப் பிடிக்கிற மாதிரியும், அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியும் வடிவமைக்க, எனக்கும் நடிகர்களுக்கும்தான் வாக்குவாதங்கள் வரும். அண்ணா எதிலுமே தலையிட மாட்டார்.

`அஜித் ஃபேன்ஸ் அட்வைஸ், சூர்யா ஜீன்ஸ், கார்த்தி ஹேர் ஸ்டைல்’- காஸ்ட்யூமர் பூர்ணிமாவின் ஃபேஷன் டிப்ஸ்

உடன் வேலைசெய்யும்போது, கௌதமிடம் நீங்கள் உணரும் ப்ளஸ், மைனஸ் என்ன?

Gautham and Uthara Menon
Gautham and Uthara Menon
மீண்டும் மீண்டும் சிக்கல் - என்னதான் ஆச்சு `எனை நோக்கி பாயும் தோட்டா'வுக்கு?!

ப்ளஸ் என்றால், ஒரே குடும்பம் என்பதால் எங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒருவருக்கொருவர் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அண்ணாவோடு வேலை செய்யும்போது, முழு சுதந்திரத்தை உணர்வேன். மைனஸ், கௌதம் அதிகமாகப் பேசமாட்டார். 'பிடிச்சிருக்குனு அமைதியா இருக்காரா, இல்ல பிடிக்கலைனு அமைதியா இருக்காரா' என்றே தெரியாது. ஆனால், அமைதி அவருடைய இயல்பு. அதை மாற்ற முடியாதுதானே. எனினும், எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகச் சொன்னால் நானும் கூடுதல் நம்பிக்கையோடு இன்னும் சிறப்பாக வேலைகளைச் செய்வேன் டியர் அண்ணா!

அடுத்த கட்டுரைக்கு