Published:Updated:

நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார்!

தார்மிக் லீ

மாரடைப்பு காரணமாக இன்று காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார் கிரேஸி மோகன். அதன் பின் சரியாக 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Crazy Mohan
Crazy Mohan

'தமிழ் சினிமா தவிர்க்க முடியாத கலைஞர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களில் ஆரம்பித்து பல படங்களுக்கு கதையும் வசனமும் எழுதியுள்ளார். முக்கியமாக கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். உடல்நலக் குறைவால் இன்று காலை 11 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி மதியம் 2 மணியளவில் காலமானார்.

Crazy Mohan
Crazy Mohan

பள்ளியில் படிக்கும்போதே நாடகங்களில் அதீத ஆர்வம் கொண்டவர், கிரேஸி மோகன். பல நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறார். அதன் பிறகு திரைத்திரையிலும் கால் பதித்த கிரேஸி மோகன், பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஆரம்பித்து, 'மைக்கேல் மதனகாமராஜன்', 'சதி லீலாவதி', 'அவ்வை சண்முகி', 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்' போன்ற பல படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியிருக்கிறார். தவிர, ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' படத்திலும் பணியாற்றியிருக்கிறார். இவரின் நாடகங்களில் நடித்து, சினிமாவுக்குள் வந்தவர்தான் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிரமான சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதன் பின் சரியாக மதியம் 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி இவரது உயிர் பிரிந்தது. திரைத் துறையைச் சேர்ந்த பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.