Published:Updated:

`` `கண்ணான கண்ணே’ பாட்டு டியூன் இதுவே இல்ல!’’ - டி.இமானின் ‘விஸ்வாசம்’ ரகசியம்

தாட்சாயணி
ஜெ.வேங்கடராஜ்
டி.இமான்
டி.இமான்

தனது கரியர் குறித்து இசையமைப்பாளர் டி.இமான் கொடுத்த பேட்டி...

தமிழ் சினிமா இளம் இசையமைப்பாளர்களில் தவிர்க்கமுடியாத சக்தியாக திகழும் டி.இமானை சந்தித்தேன்.

நீங்க ஒரு இசையமைப்பாளராக உங்க பெற்றோர்கள் எந்த அளவுக்கு உறுதுணையா இருந்தாங்க..?

14 வருடங்களுக்குப் பிறகு இணையும் அஜித்-ஏ.ஆர்.ரஹ்மான்; அஜித் 60-ன் இசை எப்படி இருக்கும்?

"கண்டிப்பா அவங்க இல்லைன்னா இன்னைக்கு நான் இங்க இல்லை. அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே என்னை இசைத்துறையில கொண்டு வரணும்னு ஆசை. இதுக்கிடையில எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் `எதுக்கு சினிமால்லாம்’னு ஆட்சேபனை தெரிவிச்சப்போ, `என் பையன் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு’னு சொல்லுவாங்க. கூடவே இறை நம்பிக்கையையும் எனக்குள்ளே விதைச்சாங்க. அவங்களோட இந்த வளர்ப்பு முறையாலதான் என்னால தண்ணி, சிகரெட்ன்னு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாம, முழுக்க முழுக்க இசையில மட்டுமே கவனம் செலுத்த முடியுது.’’

ரொம்பச் சின்ன வயசுலேயே வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்களாமே..?

டி.இமான்
டி.இமான்

``ஆமா, எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே சர்ச்ல வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் எக்மோர் டான் போஸ்கோ ஸ்கூல்ல படிச்சப்போ அங்கே நிறைய வாய்ப்புகள் கிடைச்சுது. அந்தக் காலகட்டத்தை என் வாழ்க்கையில மறக்கமுடியாத `கோல்டன் பீரியட்’னு சொல்லலாம். நடிகர்கள் சிபி, விக்ரம் பிரபு, ஷக்தி இவங்கள்லாம் என்னோட ஸ்கூல்மேட்ஸ். ஏழாவது, எட்டாவது படிக்கும்போதே பேரன்ட்ஸ் டே, டீச்சர்ஸ் டேனு ஸ்கூல்ல எந்த நிகழ்ச்சின்னாலும் என்னைதான் கீபோர்டு வாசிக்கக் கூப்பிடுவாங்க. அப்போவே நான் ரொம்ப குண்டா வேற இருந்ததால என் முகம் எல்லோருக்கும் ஈஸியா பரிச்சயமாச்சு. அந்த அனுபவங்கள் மூலமாத்தான் ஒன்பதாவது படிக்கும்போது இசையமைப்பாளர் ஆதித்யன் மற்றும் மகேஷ் மகாதேவனோட இசைக்குழுவுல இணைந்து வாசிக்க முடிஞ்சுது.'’

நிறைய விளம்பரப்படங்களுக்கு இசையமைத்த அனுபவம்..?

"என்னோட ஆரம்பகாலத்துல நிறைய விளம்பரப்படங்களுக்கு இசையமைச்சுக்கிட்டு இருந்தேன். குறிப்பா இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி கூட சேர்ந்து நிறைய விளம்பரங்களுக்கு இசையமைச்சேன். இன்னும் சொல்லப்போனா என்னோட `இமான் சவுண்ட் ஃபேக்டரி’ நிறுவனத்தோட ஆரம்ப நிலையில அவங்கதான் ஒரு முக்கியமான எரிபொருளா இருந்தாங்க. எப்படியும் மாசத்துக்கு ஒரு மூணு விளம்பரமாவது கொடுத்துடுவாங்க. அது மூலமாத்தான் என்னோட தேவைகளை பார்த்துக்கவும் ஸ்டூடியோவை நடத்தவும் முடிஞ்சுது. அப்போ அவங்க கொடுத்த சப்போர்ட் ரொம்பப் பெருசு.

அவங்களோட சேர்ந்து நாங்க விளம்பரம் பண்ணாத கடையே ரங்கநாதன் தெருவுல இல்லைன்னு சொல்லலாம். இதுல ஆச்சர்யம் என்னன்னா அந்த விளம்பரங்கள்ல சில, இன்னும் டிவியில ஓடிக்கிட்டிருக்கு. உதாரணத்துக்கு `சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்’ விளம்பர இசை நான் பண்ணதுதான்.'’
டி.இமான்

உங்க முதல் படம் `காதலே சுவாசம்’ ரிலீஸ் ஆகாதது பத்தி..?

டி.இமான்
டி.இமான்

"எனக்கு சீரியல் வாய்ப்பு தந்த குட்டி பத்மினி, டைரக்ட் பண்ண படம்தான் `காதலே சுவாசம்’. முதல் படம்ங்கிறதால ஹரிஹரன், சித்ரா, சோனு நிகாம்னு ரொம்ப பார்த்துப் பார்த்து அந்த ஆல்பத்துல முன்னணி பாடகர்களை பாட வெச்சிருந்தேன். `சொக்குதே... காதல் சொக்குதே..’ உள்ளிட்ட அந்தப் பட பாடல்கள் எல்லாம் ரொம்ப பெரிய ஹிட் ஆச்சு. ஆனா, எதிர்பாராத விதமா படம் ரிலீஸ் ஆகலை. இதுல என்ன வேடிக்கைன்னா நிறைய பேர் அந்தப் பாடல்களைக் கேட்டிருப்பாங்க. ஆனா யாருக்கும் அது என் பாட்டுன்னு தெரியாது. என் மனைவியே கல்யாணத்துக்குப் பிறகு, `ஹேய் நான் இந்தப் பாட்டெல்லாம் முன்னாடியே ரொம்ப ரசிச்சுக் கேட்டிருக்கேன்பா.. ஆனா உங்க பாட்டுன்னு தெரியாது’னு சொன்னாங்க. பின்னாடி அந்தப் பாடல்களை வேற வேற ஆல்பங்களுக்கு யூஸ் பண்ணிக்கலாமேன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. அது அந்தப் படத்துக்குதான்னு விட்டுட்டேன்.’’

`தமிழன்’ பட அனுபவம் எப்படி இருந்தது..?

"அந்தப் படத்துல வாலி, வைரமுத்து ரெண்டு ஜாம்பவான்களோட சேர்ந்து வேலைபார்த்தது மறக்கமுடியாது. ரெண்டு பேருமே என்னை ரொம்ப உற்சாகப்படுத்துனாங்க. `ஹாட்டு பார்ட்டி’ பாட்டு எழுதுறப்போ வாலி சார்கிட்ட நான், `சார் முதல் வரி ஹாட்டு பார்ட்டி’னு இருந்தா நல்லாயிருக்கும் சார்னு சொன்னதுக்கு அவர், `என்னடா தமிழன்னு டைட்டில் வெச்சுக்கிட்டு ஹாட்டு பார்ட்டி கேக்குற’னு கிண்டல் பண்ணார்.
டி.இமான்

நம்ம பாட்டை எப்படி படமாக்குறாங்கன்னு பார்க்குறதுக்காக `உள்ளத்தை கிள்ளாதே’ பாட்டு ஷூட்டிங்கிற்குப் போயிருந்தேன். அப்போ பிரியங்கா சோப்ரா காஸ்டியூம் டிசைன்படி ஒரு ப்ளூ கலர் சட்டையை அவங்க தன்னோட இடுப்புல கட்டியிருக்கணும். ஆனா அந்தச் சட்டை திடீர்னு காணாமப் போயிருக்கு. அவங்க அதுக்காக எங்கெங்கேயோ தேடிக்கிட்டு இருந்திருக்காங்க. அன்னைக்குன்னு பார்த்து நான் ப்ளூ கலர் சட்டை போட்டுட்டு போய்ட்டேன். உடனே என்னோட சட்டையைக் கேட்டு வாங்கி, பிரியங்கா சோப்ராகிட்ட கொடுத்துட்டாங்க. இன்னைக்கும் நீங்க அதைப் பார்க்கலாம். அந்தப் பாட்டு மட்டுமில்லை, பிரியங்கா சோப்ரா இடுப்புல இருக்குற சட்டையும் என்னோடதுதான்.'’

உங்க சமீபத்திய ஹிட் `கண்ணான கண்ணே’ பாட்டோட ரீச் பத்தி..?

"பொதுவா எனக்கு உணர்வுபூர்வமான பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இந்தப் பாட்டும் நான் நினைச்ச மாதிரி மிகப்பெரிய ஹிட் ஆச்சு. முதல்ல இந்த சிச்சுவேஷனுக்காக நான் போட்ட பாட்டு வேற. அந்தப் பாட்டு டைரக்டர் சிவாவுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அந்தப் பாட்டை எடுத்துக்கிட்டு ஷூட் பண்றதுக்கும் போயிட்டாங்க. ஆனா எனக்கு இன்னும் பெட்டரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணிக்கிட்டே இருந்துச்சு. சிவாவுக்கு போன் பண்ணி, `நீங்க அந்தப் பாட்டுல பிக்ஸ் ஆகிக்காதீங்க. நான் உங்களுக்கு வேற ஒண்ணு தர்றேன்’னு சொன்னேன். அந்தப் பாட்டுதான் `கண்ணான கண்ணே’ இந்த விஷயத்துல சிவாவுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். எனக்கான சுதந்திரத்தை அவர் கொடுத்தார். அந்தப் பாட்டை நிறைய பேர் அவங்களோட வாழ்க்கையோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. டிக்டாக், வீடியோ ஸ்டேட்டஸ், கவர் வெர்சன்ஸ்னு அவங்களோட பாட்டா அதை எடுத்துக்கிட்டாங்க. இதுக்கு முன்னாடி `கண்ணம்மா’ பாட்டுல நடந்த அந்த மேஜிக் அப்படியே இந்தப் பாட்டுக்கும் நடந்தது.'’

அடுத்த கட்டுரைக்கு