Published:Updated:

`இந்த 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' நான் பண்ணல - `நீயா 2' சொதப்பல் பற்றி கலா மாஸ்டர்

வே.கிருஷ்ணவேணி

பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், ஜெய், கேத்ரீன் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி போன்றவர்களுக்கு பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் படத்திற்கு வருகிறார்கள் போல. இந்தப் படத்தில் `ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' ரீமேக் பாடலுக்கான கோரியோகிராஃபர் கலா மாஸ்டர்.

கலா மாஸ்டர்
கலா மாஸ்டர்

``நீயா 2' படம் 2017ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. என்ன பிரச்னைனு தெரியல. இத்தனை வருஷம் தாமதம் ஆகிடுச்சு. நான் அந்தப் படத்தில், நீயா படத்தில் இடம்பெற்ற `ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடலுக்கு கோரியோகிராஃப் பண்ணேன். அந்தப் பாட்டு முடிந்த பிறகு ஹாஸ்பெட்டலில் அட்மிட் ஆனேன். காரணம் அங்கிருந்த பூச்சிகள். ஆந்திரா தலக்கோணத்தில்தான் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் நடந்தது.

கலா மாஸ்டர்
கலா மாஸ்டர்

நாங்க பார்த்த லொகேஷனில் ஏற்கெனவே, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணானு என நிறைய பேருடைய படத்திற்கு வேலை பார்த்திருக்கிறேன். அதனால் அந்த இடம் எனக்கு நன்கு பரிட்சயமான இடம். அங்கிருக்கும் மரங்கள் பாம்பு வடிவத்தில் இருக்கும். நான் வரலட்சுமிக்குப் பாம்பு டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன். நிறைய லிஃப்டிங் ஷாட் இருந்தது. அதனால் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் பயந்துகொண்டேதான் இருந்தேன். எந்த நேரத்தில் வரலட்சுமி விழுந்திடுமோங்கிற பயம் உள்ளுக்குள்ள இருந்தது''.

''அந்த பாட்டு முடிந்தப் பிறகு ஹாஸ்பெட்டலில் அட்மிட் ஆனேன். காரணம் அங்கிருந்த பூச்சிகள்''.
கலா மாஸ்டர்

``காலையில் ஐந்து மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிடுவோம். ஏன்னா, மதியம் இரண்டு மணிக்கெல்லாம் லைட்டிங் போயிடும். அதுக்குள்ள ஷூட் பண்ணி முடிக்கவேண்டும். இரண்டரை நாள்கள் அந்தப் பாட்டுக்கு மட்டும் ஷூட் பண்ணோம். நான் ஷூட் பண்ண பாட்டு இப்போ ரிலீஸ் ஆகியிருக்கிற `ஒரே ஜீவன்..' பாட்டு அல்ல. நான் கோரியோகிராஃப் பண்ண பாட்டு இதைவிட நல்லா இருந்துச்சு.

அந்தப் பாட்டுக்குத்தான் லிப் மூவ்மென்ட் எல்லாம் கொடுத்திருந்தோம். கடைசி நேரத்தில் இந்தப் பாட்டைப் போட்டுட்டாங்க. கண்டிப்பாக நாங்க முன்பு போட்டிருந்த பாட்டு மட்டும் ரிலீஸ் ஆகியிருந்தா அது ஹிட் அடித்திருக்கும். பட்ஜெட், நேரமின்மை, சிஜி வேலைகளுக்காக இந்தப் பாட்டை மாத்திட்டாங்க. ஆரம்பத்தில் மானஸ் வரலட்சுமிகூட ஆட பயந்தார். வரலட்சுமி கொடுத்த தைரியத்தில் அழகாக ஆடியிருப்பார் மானஸ். படம் பற்றிய ஃபீட் பேக் இன்னும் எனக்கு வரல. நான் படம் பார்த்துட்டுச் சொல்றேன்' என்றார் கலா மாஸ்டர்.