Published:Updated:

``நான் சொன்னபடி ரம்பாவுக்கு மூணாவதா ஆண் குழந்தை பிறந்தது!'' - டான்ஸ் மாஸ்டர் கலா

கலா மாஸ்டர் - ரம்பா
கலா மாஸ்டர் - ரம்பா

"தாய் ஸ்தானத்துல இருந்து ரம்பாவுக்கு வளைகாப்பை நடத்தினேன். நான் சொன்னதுபோல ரம்பாவுக்கு மூணாவதா ஆண் குழந்தைப் பிறந்தான்."

பிரபல நடன இயக்குநர் கலாவும், நடிகை ரம்பாவும் நெருங்கிய தோழிகள். சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் கனடா நாட்டுக்குச் சென்றிருந்தார் கலா. அங்கு வசிக்கும் நடிகை ரம்பாவுடன் கலா குடும்பத்தினர் பல்வேறு இடங்களுக்கு அவுட்டிங் சென்றிருக்கின்றனர். அந்தப் படங்களை நமக்கு அனுப்பிய கலா மாஸ்டர், ரம்பாவுடனான நட்பைப் பகிர்ந்துகொண்டார்.

கலா மாஸ்டர் - ரம்பா
கலா மாஸ்டர் - ரம்பா

``நான் நடன இயக்குநராக வேலை செய்த ஒரு தெலுங்குப் படத்தில் ரம்பா நடித்தார். அப்போ ரம்பா ரொம்பச் சின்னப் பொண்ணு. சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, நல்லா டான்ஸ் ஆடுவாங்க. தொடர்ந்து இருவரும் நிறைய தெலுங்குப் படங்கள்ல வேலை செய்தோம். தமிழிலும் இணைந்து பணியாற்றினோம். சினிமாவுல வேலை செய்றப்போ, பேசிப் பழகுறதுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். நட்சத்திரக் கலைநிகழ்ச்சிகள் பலவற்றில் நான் நடன இயக்குநராக வேலை செய்திருந்தேன். அந்நேரங்களில் ரம்பாவுடன் அரட்டையடிக்கவும், பழகவும் அதிக நேரம் கிடைச்சுது. இதனால் எங்க நட்பு பலமாச்சு.

நடுவராக சில கமென்ட்ஸ் சொன்னோம்னு கடமைக்கு வேலை செய்றது ரம்பாவின் வழக்கமல்ல. ஒவ்வொரு எபிசோடு பத்தியும் முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு, அதுக்கு நிறைய பயிற்சி எடுத்துகிட்டுதான் வருவார் ரம்பா.
கலா மாஸ்டர்

ஒருமுறை நடிகர் பிரசாந்த் ஏற்பாடு செய்த கலைநிகழ்ச்சி மலேசியாவில் நடந்துச்சு. அதில் டான்ஸ் கத்துக்க ரம்பா கொடுத்த உழைப்பும், ஈடுபாடும் அதிகம். `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் ரம்பாவை நடுவராகப் பணியாற்ற நான் கேட்டப்போ, உடனே ஒப்புகிட்டாங்க. நடுவராக சில கமென்ட்ஸ் சொன்னோம்னு கடமைக்கு வேலை செய்றது ரம்பாவின் வழக்கமல்ல. ஒவ்வொரு எபிசோடு பத்தியும் முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு, அதுக்கு நிறைய பயிற்சி எடுத்துகிட்டுதான் வருவார் ரம்பா. `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் பல சீஸன்களில் அவர் நடுவரா வேலை செய்தார். ரம்பாவின் கல்யாணம் திருப்பதியில் நடந்தப்போ, எல்லா வேலைகளையும் முன்நின்று சந்தோஷமா நான் செய்தேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

கலா மாஸ்டர் மற்றும் ரம்பா குடும்பத்தினர்
கலா மாஸ்டர் மற்றும் ரம்பா குடும்பத்தினர்

கனடாவில் வசிக்கும் ரம்பாவைச் சந்தித்துப் பேசியது குறித்துப் பகிர்கிறார், கலா. ``தன் வாழ்க்கையில நடக்கும் நல்லது, கெட்டது எல்லாத்தையும் உடனடியாக என்கிட்ட சொல்லிடுவார் ரம்பா. அந்த அளவுக்கு எங்க நட்பு பலமானது. ரம்பாவுக்கு குழந்தை மனசு. யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்க மாட்டார். அவருக்கு நான் கூடப்பிறக்காத அக்கா மாதிரி.

ரெண்டாவது முறையா ரம்பா கர்ப்பமான விஷயத்தை என்கிட்டதான் முதலில் சொன்னார். அப்போ நிறைய வேலைகள் இருந்ததால உடனடியா ரம்பாவைப் பார்க்க என்னால போக முடியலை. அதனால என்மேல அவருக்குப் பயங்கர கோபம். அப்புறம் அவரைச் சமாதானப்படுத்தினேன். ரம்பா கனடாவில் வசிக்கிறாங்க. அவர் சென்னை வந்தாலும், நான் கனடா போனாலும் நிச்சயம் சந்திச்சிக்குவோம். ஒருமுறை நான் கனடா போனபோது ரம்பாவைச் சந்திக்க முடியலை. அப்போதும் என்மேல ரம்பாவுக்குக் கோபம். அந்த அளவுக்கு என்மேல் ரம்பாவுக்கு அதீத அன்பு. அதனால கனடா போகும்போதெல்லாம் ரம்பாவுடன் நிச்சயம் நேரம் செலவிடுவேன்.

ரம்பாவின் வளைகாப்பு
ரம்பாவின் வளைகாப்பு

ரம்பா மூணாவது முறையா கர்ப்பமானபோதும் என்கிட்ட சொன்னார். `நீங்க எப்போ கனடா வர்றீங்க?'னு என்கிட்ட கேட்டார். நான் கனடாவில் இருக்கும் நாளில் வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தாங்க. நானும் சென்னையிலிருந்து வளையல் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை வாங்கிட்டுப்போனேன். வளைகாப்பின்போது சர்ப்ரைஸா என் நண்பர்ளை டான்ஸ் பர்ஃபாமன்ஸ் பண்ண வெச்சேன். நானும் டான்ஸ் ஆடினேன். தாய் ஸ்தானத்துல இருந்து ரம்பாவுக்கு வளைகாப்பை நடத்தினேன். நான் சொன்னதுபோல ரம்பாவுக்கு மூணாவதா ஆண் குழந்தைப் பிறந்தான்.

கனடாவில் என் டான்ஸ் வகுப்பு செயல்படுது. அதைக் கவனிச்சுக்க அவ்வப்போது கனடாவுக்குப் போவேன். அதனாலதான் சமீபத்திலும் கனடா போயிருந்தேன். இரு குடும்பத்தினரும் நிறைய இடங்களுக்குச் சுத்திப்பார்க்கப் போனோம். ரம்பாவின் கணவர் இந்திரன் மனைவியையும் குழந்தைகளையும் சிறப்பா பார்த்துக்கிறார்.

கலா மாஸ்டர் மற்றும் ரம்பா குடும்பத்தினர்
கலா மாஸ்டர் மற்றும் ரம்பா குடும்பத்தினர்

ரம்பா சூப்பரா சமைப்பாங்க. குடும்ப பொறுப்புகளையும் நல்லா செய்வார். ரம்பாவின் குடும்ப வாழ்க்கை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்குது. இதேபோல எல்லாக் காலமும் ரம்பா மகிழ்ச்சியுடன் வாழணும்னு என்பதுதான் என் ஆசை" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு