Published:Updated:

``சிவகார்த்திகேயன் அண்ணா மாதிரி எந்த நடிகரும் இவ்ளோ கேரிங்கா இருந்ததில்லை!'' - டான்ஸர் பிந்து

பிரபுதேவா, டான்ஸர் பிந்து
News
பிரபுதேவா, டான்ஸர் பிந்து

`என்னை ஒரு அண்ணனா நினைச்சுக்கங்க. மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைனா தயங்காம கேளுங்க’னு சொன்னார். இதுவரைக்கும் எந்த நடிகரும் இவ்வளவு கேரிங்கா இருந்தது இல்லை.’

நடிகர்களுக்குப் பின்னால் ஆடும் குரூப் டான்ஸர்களில் பலர், தங்களது முகம் ஆடியன்ஸுக்கு ரீச்சாக வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு, அந்த நடிகருடன் தனியாக ஆடும் வாய்ப்பு கிடைத்தால், அது அதிர்ஷ்டம்தானே. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம், டான்ஸர் பிந்துவுக்கு மூன்று முறை கிடைத்திருக்கிறது. பிரபுதேவா, லாரன்ஸ், தனுஷ் எனப் பல நடிகர்களோடு ஹிட் பாடல்களில் ஆடியிருக்கிறார் பிந்து. அவரை சந்தித்துப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டான்ஸராக வேண்டும் என்கிற ஆசை எப்போது வந்தது..?

dancer bindhu
dancer bindhu

``சின்ன வயசுல இருந்தே நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஃபேமிலில எதாவது ஃபங்ஷன் வந்துச்சுன்னா வீட்டுல இருக்கிற குட்டீஸ் எல்லாரையும் ஆட வைப்பாங்க. அதுல நானும் என் அக்காவும் செமயா ஆடுவோம். அப்போ இருந்தே டான்ஸ் மேல ரொம்ப ஆர்வம். 8-வது படிக்கும்போது, கலா மாஸ்டரோட டான்ஸ் கிளாஸில் சேர்ந்தேன். கலா மாஸ்டர் பண்ண ஈவென்ட்ஸ், டிவி ஷோக்களில் ஆடியிருக்கேன். `வல்லவன்’ படம்தான் நான் டான்ஸ் ஆடின முதல் படம். அதுல சிம்பு சாரோட ஓப்பனிங் பாட்டுல நிறைய பசங்க ஆடியிருப்பாங்க. அதுதான் நான் டான்ஸ் ஆடிய முதல் பாடல். இந்தப் படத்துக்கு அப்புறம் 10-வது படிக்கிற வரைக்கும் டிவி ஷோக்களில் மட்டும்தான் ஆடிட்டு இருந்தேன். அப்பறம் பப்ளிக் எக்ஸாம் வந்தனால, டான்ஸுக்குக் கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு படிப்பைப் பார்க்கப் போயிட்டேன். 12-வது படிக்கும்போது, என்னால டான்ஸ் ஆடாம இருக்க முடியலை. அதனால, எங்க அப்பா, அம்மாகிட்ட சண்டை போட்டு படிப்பைப் பாதியிலே நிப்பாட்டிட்டு, சினிமா டான்ஸர்ஸ் யூனியன்ல கார்ட் வாங்கிட்டேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினிமா டான்ஸரானதுக்குப் பிறகு எந்தப் பாடலில் ஆடியன்ஸ் உங்களை நோட் பண்ண ஆரம்பிச்சாங்க..?

``சினிமா டான்ஸர் கார்ட் எடுத்ததும் நான் ரகுராம் மாஸ்டர்கிட்ட சேர்ந்தேன். அப்போ நான் ஜூனியரா இருந்தனால, பின்னாடி நின்னுதான் ஆடிட்டு இருந்தேன். வெளில தெரிய ஆரம்பிச்ச பாட்டுனா அது `சேட்டை’ படத்தோட `நீதான்டி ஒஸ்திப் பொண்ணா' பாட்டுதான். அந்தப் பாட்டுல பிரேம்ஜிகூட ஆறு பொண்ணுங்க ஆடுவோம். அதுல பிரேம்ஜியோட ரைட் சைடுல நான் ஆடிட்டு இருப்பேன். அந்தப் பாட்டைப் பார்த்துட்டுத்தான் நிறைய பேர் என்கிட்ட கேட்க ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் `லாலா கட சாந்தி’ பாட்டுல இருந்து வரிசையா நிறைய பாட்டுல ஆடியன்ஸ் என்னை நோட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க."

Prabhu Deva and dancer Bindhu
Prabhu Deva and dancer Bindhu

`` `குலேபகாவலி’ படத்தோட `குலேபா’ பாட்டுல பிரபுதேவா மாஸ்டரோடு ஆடுனதுக்கு அப்பறம்தான், நிறைய பேர் என்னைப் பாராட்டினாங்க. அந்தப் பாட்டோட ரிகர்சல்ல பிரபு மாஸ்டர் அந்த `விக்கலு விக்கலு’ ஸ்டெப்பை ஆடிட்டு இருந்தார். அதைப் பார்த்ததுல இருந்தே எனக்கு அதை ஆடிப்பார்க்கணும்னு தோணுச்சு. நானும் ஆடி ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டேன். எல்லா க்ரூப் டான்ஸர்களும் ஆடிட்டு இருந்தப்போ, பிரபு மாஸ்டர் என்னை மட்டும் கூப்பிட்டு அந்த ஸ்டெப்பை ஆடச் சொன்னார். நான் நல்லா ஆடினதும் என்னையே மாஸ்டரோடு ஆடுறதுக்கு செலக்ட் பண்ணிட்டாங்க. ரிகர்சலுக்கு அடுத்த நாள் பாட்டோட ஷூட் இருந்துச்சு. `எப்போடா மாஸ்டரோடு ஆடப்போறோம்’னு பதற்றமாவும் பயமாவும் உட்கார்ந்துட்டு இருந்தேன். லன்ச்சுக்கு அப்புறம்தான் அந்த ஷாட்டை எடுத்தாங்க. ஒரே டேக்ல ஓகே பண்ணுனதும் அங்க இருந்த எல்லாருமே பாராட்டுனாங்க. படம் ரிலீஸானதுல இருந்து இப்போ வரைக்கும் பல பேர் அந்தப் பாட்டுக்காகப் பாராட்டிட்டு இருக்காங்க.’’

அந்தப் பாராட்டுகளில் மறக்க முடியாதது எது..?

``மறக்க முடியாத பாராட்டுன்னா, அது சிவகார்த்திகேயன் அண்ணாவோட பாராட்டுதான். `குலேபகாவலி’ படம் ரிலீஸான சமயத்தில்தான் `சீமராஜா’ படத்துக்கான ஷூட்டிங் நடந்துச்சு. ஸ்பாட்டில் என்னைப் பார்த்ததுமே சிவா அண்ணா கூப்பிட்டார். `மாஸ்டர்கூட சேர்ந்து கலக்கியிருக்கீங்க’னு சொன்னார். `நம்மளும் அதே மாதிரி ஒரு பாட்டுல ஆடுவோம்'னு சொன்னார். `சீமராஜா’ ஷூட்டிங் முடிச்சிட்டு நான் சென்னைக்கு வந்ததும் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. அதைக் கேள்விப்பட்டதும், என் நம்பர் வாங்கி எனக்கு போன் பண்ணார் சிவா அண்ணா. `என்னை ஒரு அண்ணனா நினைச்சுக்கங்க. மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைனா தயங்காம கேளுங்க’னு சொன்னார். இதுவரைக்கும் எந்த நடிகரும் இவ்வளவு கேரிங்கா இருந்தது இல்லை. அவர் இப்படிச் சொன்னதும், நான் ரொம்பவே எமோஷனலாகிட்டேன். இந்த அனுபவத்தை என்னால மறக்கவே முடியாது.’’

`குலேபகாவலி’ படத்துல பிரபுதேவாகூட ஆடுனமாதிரி, `காஞ்சனா - 3’ படத்துல லாரன்ஸ்கூட ஆடின அனுபவம் எப்படி இருந்துச்சு?

dhanush and dancer bindhu
dhanush and dancer bindhu

`` `காஞ்சனா-3’ படத்துக்கு முன்னாடியே `சிவலிங்கா’ படத்துல லாரன்ஸ் மாஸ்டருக்கு அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணுனேன். அந்தச் சமயத்தில் நான் கொஞ்சம் குண்டா இருந்தேன். `நீங்க கொஞ்சம் வெயிட் குறைச்சிட்டா டான்ஸ் பண்றது நல்லா தெரியும்’னு மாஸ்டர் சொன்னார். நானும் வெயிட் குறைச்சதுக்கு அப்பறம், லாரன்ஸ் மாஸ்டரோடு வொர்க் பண்ணணும்னு காத்திட்டு இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ’காஞ்சனா - 3’ படத்தோட வாய்ப்பு வந்துச்சு. அந்தப் பாட்டுலேயும் லாரன்ஸ் மாஸ்டரோடு தனியா ஆடுற மாதிரி ஒரு ஷாட் கிடைச்சது. தமிழ் சினிமாவுல டான்ஸ் ஐகானா இருக்கிற மாஸ்டர்ஸ்கூட அடுத்தடுத்து ஆட வாய்ப்பு வந்ததை, எனக்குக் கிடைச்ச பாக்கியம்னுதான் சொல்லணும். அதேமாதிரி, சமீபத்தில் ரிலீஸான `பட்டாஸ்’ படத்துலேயும் `சில் ப்ரோ’ பாட்டுல தனுஷ் சாரோடு ஆடியிருப்பேன். அதுவும் மறக்கமுடியாத அனுபவம்தான்.’’

இப்போ எந்த மாஸ்டர்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருக்கீங்க?

``சாண்டி மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்ட் கோரியோகிராஃபரா இருக்கேன். இப்போ தனுஷ் சார் நடிக்கிற `கர்ணன்’ படத்தோட ஷூட்டிங் போயிட்டு இருக்கு. அதுலதான் வொர்க் பண்ணிட்டு இருக்கோம். அதுபோக, பல மாஸ்டர்ஸோட பாடல்களில் டான்ஸும் பண்ணிட்டு இருக்கேன்.’’