Published:Updated:

`நான் தாண்டா இனிமேலு....வந்து நின்னா தர்பாரு..!'- எஸ்.பி.பி - ரஜினி காம்போவில் `தர்பார்' சிங்கிள்

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தர்பார் படத்தின் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ஷூட்டிங் தொடர்பான சில ஸ்டில்ஸ்கள் வெளியானது. இதனையே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. தர்பார் படத்தின் பாடல்கள், டீசர்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தர்பார் படத்தின் ‘சும்மா கிழி’ பாடல் இன்று வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. எஸ்.பி.பி இந்த பாடலை பாடியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது. தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்க சும்மா கிழி பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.