Published:Updated:

`சும்மா கிழி' தர்பார் சிங்கிள்... மக்கள் ரியாக்ஷன் என்ன? #Darbar #SurveyResults

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் வரும் பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் 'தர்பார்' படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. இது குறித்து ஒரு சர்வே கேட்கப்பட்டது.

தர்பார்
தர்பார்

2020 பொங்கல் அன்று வெளியாகவிருக்கும் 'தர்பார்' படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி' நேற்று வெளியாகியுள்ளது. ரஜினியின் 'பேட்ட' படத்துக்கு இசையமைத்த அனிருத், அந்தப் படத்தில் 'மரண மாஸ்' பாடல் எழுதிய விவேக் என்று அதே காம்போ இந்தப் பாட்டுக்கும் இணைந்து பணியாற்றியிருக்கிறது.

'தர்பார்' படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான ஆதித்ய அருணாசலத்துக்கு மாஸ் ஓப்பனிங் பாடலாக வரவிருக்கும் இந்தப் பாடலை ரஜினியின் ஆஸ்தான `ஓப்பனிங் சாங்' பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை இந்தப் பாடலில் பூர்த்தி செய்திருக்கிறதா 'தர்பார்' டீம்? மக்களின் பதில் என்ன?

'சும்மா கிழி' தர்பார் சிங்கிள்... உங்க முதல் ரியாக்ஷன் என்ன? #VikatanPoll

- வேற லெவல்

- கேட்க கேட்க பிடிக்கும்

- பெட்டரா இருந்திருக்கலாம்

- மாஸு மரணம்தான் பெஸ்ட்

இந்தக் கேள்வியை விகடன் தளத்திலும், ட்விட்டரிலும் கேட்டிருந்தோம்.

இதற்கு வாசகர்கள் எப்படிப் பதிலளித்துள்ளனர்?

`சும்மா கிழி' தர்பார் சிங்கிள்... உங்க முதல் ரியாக்ஷன் என்ன? #Darbar #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் வாசகர்கள் 59 % பேர் 'வேற லெவல்' என்று பதிலளித்துள்ளனர். அந்த சர்வேயில் ஒவ்வொரு விடைகளும் பெற்ற சதவிகிதம்...

#Darbar #VikatanPoll
#Darbar #VikatanPoll

- இதே கேள்வி, இதே ஆப்ஷன்களுடன் ட்விட்டரில் கேட்கப்பட்டது. அதில் அதிகபட்சமாக 47.5 % பேர் 'வேற லெவல்' என்ற ஆப்ஷனையே தேர்ந்தெடுத்து உள்ளனர். இதில் ஒவ்வொரு ஆப்ஷன்களும் பெற்ற சதவிகிதம்...

#Darbar #VikatanPoll
#Darbar #VikatanPoll

- இது மட்டுமன்றி, விகடன் தளத்திலும் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதற்குப் பதிலளித்த வாசகர்களில் அதிகபட்சமாக 38.6 % பேர் 'பெட்டரா இருந்திருக்கலாம்' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆப்ஷன்களும் பெற்ற சதவிகிதம்...

#Darbar #VikatanPoll
#Darbar #VikatanPoll

மொத்தத்தில் விகடனின் ட்விட்டர் மற்றும் வெப்சைட் மூலமாக ஒவ்வொரு ஆப்ஷனுக்கும் கிடைத்த சதவிகிதம் இதுதான். இதில் 44.93 % பேர் 'வேற லெவல்' என்றும் 26.73 % பேர் 'பெட்டரா இருந்திருக்கலாம்' என்றும் தெரிவித்துள்ளனர்.

#Darbar #VikatanPoll
#Darbar #VikatanPoll

வாசகர்கள் பகிர்ந்த சில சுவாரஸ்ய கமென்டுகள்

இதுபோல பல சுவாரஸ்யமான சர்வேக்களுக்கு விகடனுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

`நான் தாண்டா இனிமேலு....வந்து நின்னா தர்பாரு..!'- எஸ்.பி.பி - ரஜினி காம்போவில் `தர்பார்' சிங்கிள்