Election bannerElection banner
Published:Updated:

``ஜோதிகாவும், நயன்தாராவும் தப்பு இருக்கான்னு தேடித்தேடிப் பார்ப்பாங்க!'' - தீபா வெங்கட்

தீபா வெங்கட்!
தீபா வெங்கட்!

" ’சித்தி’ எனக்கு ஒரு பிரேக் குடுத்த சீரியலும் கூட. ஷூட்டிங் ஸ்பாட்ல யார் கூடவும் பேசாம அமைதியா புக் படிச்சுட்டு இருப்பேன். அதனாலயே நான் ரொம்பத் திமிரா இருக்கேன்னு சிலர் நினைச்சுப்பாங்க."

சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா என கோலிவுட்டின் லீடிங் லேடீஸ் பலர் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான குரல் ஒன்றுதான். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தீபா வெங்கட். நடிகை, ரேடியோ ஜாக்கி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என தீபா எப்போதும் பிஸி. அவரிடம் பேசினேன்.

தீபா வெங்கட்
தீபா வெங்கட்
``விஜயகாந்த் சார் எனக்கு செம ஸ்பெஷல்... ஏன்னா?'' - ரீல் வில்லன், ரியல் ஹீரோ கதை சொல்லும் சோனு சூட்!

லாக்டெளன் நாள்கள் எப்படி போயிட்டிருக்கு?

தீபா வெங்கட்!
தீபா வெங்கட்!

”வீட்டைத்தாண்டி எங்கேயும் போக முடியல. குழந்தைகளைப் பாத்துக்குறது, வீட்டு வேலைகள் செய்யறதுன்னு நான்தான் இப்போ ஆல்ரவுண்டர். உண்மையைச் சொல்லணும்னா, இதுக்கு முன்னாடி என்ன வேலை பண்ணிட்டு இருந்தோம்னு யோசிக்க வேண்டியதா இருக்கு. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் ஆரம்பிச்சதும், இப்போ லீட்ல இருக்க நடிகை ஒருத்தருக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு வந்தது. கொரோனாவுக்கு முன்னாடின்னா ‘எந்த ஸ்டூடியோ, எப்போ வரணும்?’னுதான் கேட்பேன். ஆனா, இப்போ நிலைமை அப்படியே தலைகீழ மாறிடுச்சே. வீட்ல குழந்தைகள் இருக்கறதால வேலை விஷயமா கூட வெளிய போயிட்டு வர்றதுக்கு பயமா இருக்கு. எப்படி ஹேண்டில் பண்ணப்போறேன்னு தெரியலை. பசங்க கூட ஃப்ரெண்ட்ஸைப் பார்க்க வெளிய போலாமான்னு கேக்குறதுக்குப் பதிலா, வீடியோகால் பண்ணட்டான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாத்தையும் மொத்தமா புரட்டிப் போட்ருக்கு இந்த லாக்டெளன்.”

இப்போ டிவி-க்கள்ல 90'ஸ் ஹிட் நிகழ்ச்சிகளை திரும்ப ஒளிபரப்புறதை எப்படி பார்க்குறீங்க?

'சித்தி’
'சித்தி’

“உண்மையைச் சொல்லணும்னா, நமக்கு முன்ன இருந்ததை விட இப்போ ஸ்கிரீன் டைம் அதிகம் ஆகிடுச்சு. நம்மகூட சேர்ந்து குழந்தைகளும் அதுக்குப் பழகுறாங்க. அதனால முடிஞ்ச அளவுக்கு சோஷியல் மீடியா, டிவி இதெல்லாம் நான் தவிர்த்துடறேன். ஆனா, இந்த லாக்டெளன்ல ‘சித்தி’ சீரியல் திரும்பப் போடுறதால எனக்கு நிறைய மெசேஜ் வருது. பசங்களும் என்னை சீரியல்ல பார்த்துட்டு, ‘அம்மா, நீ குட்டிப்பொண்ணா இருக்க, முடி நீளமா இருக்கு’னு எக்சைட் ஆகுறாங்க. என் கரியரோட ஆரம்பத்துல நான் பண்ணின மேஜர் ரோல் ‘சித்தி’ல வர்ற கேரக்டர்தான். நான் யார் கூடவும் சீக்கிரம் மிங்கிள் ஆக மாட்டேன். என் கேரக்டர் மாதிரியே அமைதியான பாட்டு பாடிட்டுருக்கிற ஒரு பொண்ணு கேரக்டர்தான் ‘சித்தி’லயும் இருக்கும். ஆனா, அப்போ அதுக்கான ரெஸ்பான்ஸ் சரியா இருந்ததால என் கேரக்டரை இன்னும் டெவலப் பண்ணாங்க. இத்தனை வருஷம் கழிச்சும் அந்த கேரக்டருக்கு அதே அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்குறது சந்தோஷமா இருக்கு. ’சித்தி’ எனக்கு ஒரு பிரேக் கொடுத்த சீரியலும் கூட. ஷூட்டிங் ஸ்பாட்ல யார்கூடவும் பேசாம அமைதியா புக் படிச்சுட்டு இருப்பேன். அதனாலயே நான் ரொம்ப திமிரா இருக்கேன்னு சிலர் நினைச்சுப்பாங்க. ஆனா, உண்மை என்னன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.”

சிம்ரன், ஜோதிகா, சினேகா, நயன்தாரான்னு நிறைய ஹீரோயின்ஸ்க்கு டப்பிங் பேசியிருக்கீங்க. உங்களுக்கு யார் ரொம்ப ஃபேவரிட்? டப்பிங்காக கிடைச்ச பெரிய பாராட்டு?

Jyothika
Jyothika

”இவங்கன்னு இல்லை. எல்லா நடிகைகளுக்குமே ரொம்பப் பிடிச்சுதான் டப்பிங் பண்ணுவேன். ஆனா, சிலர் மட்டும்தான் ரொம்ப சின்சியரா அந்த கேரக்டருக்கு நியாயம் பண்ணியிருப்பாங்க. அவங்களுக்கு டப் பண்ணும்போதுதான் எனக்கு சந்தோஷமா இருக்கும். அதே சமயம் கொஞ்சம் பதற்றமாவும் இருக்கும். ஏன்னா, சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்காலாம் அவங்களுடைய கேரக்டரை ரொம்ப உணர்ந்து நடிச்சிருப்பாங்க. அதைக் கெடுத்துடாம, டப்பிங்ல நல்லா பண்ணணும்னு நினைப்பேன். அப்படி சமீபத்துல நயன்தாராவுடைய ‘அறம்’, ஜோதிகாவுடைய ‘ராட்சசி’ ரொம்பப் பிடிச்சிருந்தது. ஜோதிகாவும், நயன்தாராவும் டப்பிங் முடிஞ்சதுமே எப்படி வந்திருக்கு, தப்பு எதுவும் இருக்கான்னு பூதக்கண்ணாடி வெச்சு தேடித்தேடிப் பார்க்கக் கூடியவங்க (சிரிக்கிறார்). அதனால, ஜோதிகா, நயன்தாரா அனுஷ்காலாம் ஸ்பெஷல் எனக்கு. அவங்க எனக்கு கால் பண்ணி, சின்ன கரெக்‌ஷன்ஸ் சொல்றது, நல்லா பண்ணினதைப் பாராட்டுறதுன்னு வேலைல அவ்வளவு டெடிகேட்டடா இருப்பாங்க. அதேமாதிரி, ‘மயக்கம் என்ன’ படத்துல ரிச்சாக்கு டப் பண்ணது ரொம்பப் பிடிக்கும். எப்படியோ என் நம்பர் தேடி கண்டுபிடிச்சு வாங்கி, ரிச்சா கால் பண்ணி, ‘ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருந்தேன். நானே டப் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாமப் போயிருச்சு. நானே பேசியிருந்தா கூட இவ்வளவு சிறப்பா வந்துருக்காது’னு பாராட்டினாங்க. அதை மறக்கமுடியாது.”

நடிப்புக்கு பிரேக் விட்டுட்டீங்களா?

தீபா வெங்கட்!
தீபா வெங்கட்!

”சீரியல்கள் பண்ணிட்டு இருக்கும்போது நிறைய படங்கள் பண்றதுக்கான வாய்ப்புகளும் வந்தது. ஆனா, இங்க சீரியலுக்கே டேட்ஸ் சரியா இருந்ததால, படங்கள் பெருசா பண்ண முடியலை. படங்களை விட சீரியல்கள் எனக்கு கம்ஃபர்ட்டாவும் இருந்தது. ஆனா, ஒரு கட்டத்துல சீரியல்கள் எனக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. திரும்பத் திரும்ப அதே விஷயங்களைத்தான் பண்ணிட்டு இருக்காங்கன்னு தோணுச்சு. சரின்னு ஒரு பிரேக் எடுத்தேன். அந்த பிரேக் அப்படியே பழகிடுச்சு. அதுவுமில்லாம வேற வேலைகளும் வந்துச்சு. இப்ப சீரியல்களை எடுத்துப் பார்த்தீங்கன்னாகூட, மேக்கப் செட்டுனு பிரமாண்டமா மாறியிருக்கே தவிர கதை எனக்கு அதே பழைய ஃபார்மேட்குள்ள இருக்க மாதிரிதான் தோணுது. டப்பிங் போகும்போது, இப்பவும் நடிக்கிறதுக்கான வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா, திரும்ப நடிக்க வர ஐடியா இப்போதைக்கு இல்லை. நடிப்பை விட டப்பிங் எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு.”

நடிப்புத்துறையில உங்களுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்?

தீபா வெங்கட்!
தீபா வெங்கட்!

”நான் முன்னாடியே சொன்ன மாதிரி யார் கூடவும் சீக்கிரம் மிங்கிள் ஆக மாட்டேன். என்னுடைய நண்பர்கள் வட்டம் ரொம்ப சின்னது. தேவதர்ஷினி எனக்கு ரொம்ப க்ளோஸ்.”

``இதுல ஸ்பெஷல்னு கேட்டா விஜய் சாரைத்தான் சொல்வேன்; ஏன்னா?'' - தேவதர்ஷினி

உங்களை மிஸ் பண்ற ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?

தீபா வெங்கட்!
தீபா வெங்கட்!

”நன்றியைத் தவிர வேற என்ன... நடிப்பை விட்டு வெளிய வந்து ரொம்ப வருஷமாச்சு. இப்பயும் நான் எங்க போனாலும், என்னை அடையாளம் தெரிஞ்சு வந்து பேசும்போது சர்ப்ரைஸா இருக்கும். அந்த அன்புக்கு ரொம்ப நன்றி.”

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு