Published:Updated:

இனிமேல் தமிழ் சினிமாவில் யாரையும் கலாய்க்கக்கூடாதா..!? - ‘கோமாளி’ சர்ச்சையின் அலசல்

Rajinikanth - Jayam Ravi

சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின.

இனிமேல் தமிழ் சினிமாவில் யாரையும் கலாய்க்கக்கூடாதா..!? - ‘கோமாளி’ சர்ச்சையின் அலசல்

சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின.

Published:Updated:
Rajinikanth - Jayam Ravi

தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்திலும் எவர்கிரீன் டாப்பிக்காக இருப்பது 90'ஸ் குழந்தைகளின் வாழ்வியல். அதைத் தூண்டும் வகையான ஏதோவொரு நினைவுகளைக் கடக்கும்போது மொத்த 90'ஸ் நினைவுகளும் மின்னலென வெட்டிச் செல்லும். ஸ்கூலில் ஆரம்பித்து 90'ஸ் நினைவுகளைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அப்போதிருந்த சூழல், தற்போது அப்படியே நேரெதிராக மாறிவிட்டது. முக்கியமாக வளர்ந்த சூழலும், டெக்னாலஜியும் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டன. அப்படியான ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு டீனேஜ் சிறுவன், 16 வருடங்கள் கோமாவிலிருந்து மீண்டு எழுந்த பின், தற்கால உலகத்தை எப்படிப் பார்க்கிறான்; உலகத்தின் மீதான அவனுடைய பார்வை எப்படி உள்ளது என்பதுதான் ’கோமாளி’ படத்தின் ஒன்லைனாகத் தெரிகிறது.

Jayam Ravi
Jayam Ravi
Comali

இந்த எவர்கிரீன் நினைவுகளில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதும் எபிக்கான ஒன்றுதான். நடிகராக எப்போதோ அவர் தன்னை நிரூபித்துவிட்டாலும் அரசியலுக்கு வருவது குறித்து எல்லா முறையும் ஏப்ரல் ஃபூல் செய்துவிடுகிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. இதைக் கலாய்க்கும் விதமாகத்தான் 'கோமாளி' படத்தின் டிரெய்லரில் அந்த இறுதிக் காட்சியானது இடம்பெற்றிருந்தது. இவ்வளவு ஏன்? தீவிர, ரஜினிகாந்த் ரசிகர்கள்கூட இதை ஆமோதித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிரெய்லரில் குறிப்பிட்ட அந்தக் காட்சியைக் கண்ட ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தனர். ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். #நாளைய_தமிழகம்_ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்டாக்கினர். இதைத் தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷுக்குப் போனில் அழைத்த கமல்ஹாசன், "'கோமாளி’ படத்தில் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை குறித்த காட்சி எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்த்தின் நண்பராகவும் சக அரசியல்வாதியாகவும் கமல்ஹாசனுக்கு இப்படியொரு ஆதங்கம் வந்திருக்கும்போல. இதைக் கமல்ஹாசனின் மேனேஜர், அவரது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, படத்தில் அந்தக் காட்சியை நீக்கிவிட்டதாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனும் பத்திரிகையாளர்களிடம் கூறினர்.

தயாரிப்பாளரும் இயக்குநரும் இது தொடர்பாக விளக்கமளித்த பின், படத்தின் நாயகன் ஜெயம் ரவியும் ட்விட்டரில் இதற்கு விளக்கமளித்திருந்தார். அதில், ‘’என்னுடைய இத்தனை வருட நடிப்பு அனுபவத்தில் இதுவரை எந்த பிரச்னைகளிலும் நான் சிக்கியதில்லை. நான் பார்க்கும் வேலைக்கு நேர்மையாகவும் சுத்தமாகவும் உள்ளேன். குறிப்பிட்ட சில கற்பனைக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போதுகூட என்னுடைய அளவை நான் தாண்டியதில்லை. திரைத்துறையிலிருக்கும் சக நடிகர்களோடு நட்போடும் இணகத்தோடும்தான் இருக்கிறேன். 'கோமாளி' படத்தின் டிரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த பின் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு நான் படக்குழுவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இருப்பினும் ரஜினிகாந்த் குறித்து இடம்பெற்ற அந்தக் காட்சிக்கு அவரது சில ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். அது பாசிட்டிவ் எண்ணத்தோடுதான் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது. சக ரசிகர்களைப்போல் நானும் அவரது அரசியல் வருகைக்காக காத்திருக்கிறேன். அவருடைய படங்களையும் ஸ்டைலையும் பார்த்து வளர்ந்தவன்தான் நானும். அப்படி இருக்கையில் அவரை எப்படி எங்களால் அவமதிக்க முடியும்? இவற்றையெல்லாம்விட, 'கோமாளி' டிரெய்லரைப் பார்த்த பின் எங்களுக்குப் போனில் அழைத்த ரஜினி சார், 'டிரெய்லர் ரொம்ப தனித்துவத்தோட இருக்கு'னு சொல்லிப் பாராட்டினார். இருப்பினும் சில ரசிகர்களுக்கு அது அதிருப்தி அளித்திருப்பதால், குறிப்பிட்ட அந்தக் காட்சியைப் படத்திலிருந்து நீக்கிவிடுறோம். நன்றி" எனச் சொல்லியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'முன்னொரு காலத்தில் சினிமாவில் நடித்தவர்கள்தானே தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஆளுமையானார்கள். அப்படிப்பட்ட சிம்மாசனத்தில் சூப்பர் ஸ்டாரையும் அமர்த்திப் பார்க்கலாமே' என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் ஆசையாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சில தீவிர ரசிகர்கள், 'ரஜினிகாந்த் அந்த அறிக்கையை வெளியிட்டது 2017-ல். படத்தில் 2016 என்று குறிப்பிட்டுள்ளது. இது பெரிய லாஜிக் மிஸ்டேக்' என்று தங்களது கருத்துகளையும் முன் வைக்கிறார்கள். எப்படியிருந்தாலும் அதில் சொல்லியிருப்பது ஒரு ரசிகனின் ஆதங்கமும்தானே!

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

விஜய் நடிப்பில் வெளிவந்த 'சர்கார்' படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகளுக்குப் பிரச்னைகள் ஏற்பட்ட பின், 'தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு படத்தின் காட்சியை நீக்கக்கோரி வழியுறுத்துவது சரியில்லை' என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். உண்மையில், சென்சார் ஆகியிருக்கிறதோ இல்லையோ, பொது சமூகத்தை அச்சுறுத்தாத எதையும் நீக்கச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தற்போது ’கோமாளி’ படத்துக்கும் கிட்டதட்ட இதே பிரச்னைதான் ஏற்பட்டிருக்கிறது. ரஜினியின் வழியில் பயணிக்கும் அவரது ரசிகர்கள் அந்தக் குறிப்பிட்ட காட்சியை நீக்கச் சொல்லி வலியுறுத்துவது சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல.

எல்லாவற்றையும் தாண்டி அது ஒரு சினிமா, அது ஒரு படைப்பு. முன்புதான் சில மறைமுக அரசியல் கேலிகளும் தாக்குதல்களும் இருந்தால் அந்தப் படத்தை தடை செய்துவிடுவார்கள். ஒரு காலகட்டத்துக்கு மேல் கலாய் என்பது சுதந்திரமாகிவிட்டது. பொதுவெளி கருத்து சுதந்திரத்தைப்போல் சினிமாவும் சுதந்திரமாகிவிட்டது. ஆனால், தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவம் அந்த சுதந்திரத்தை முற்றிலும் பாதித்துவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்தச் சர்ச்சையில் உங்களின் கருத்து என்ன? கீழே பதியுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism