Published:Updated:

நெகிழ்ந்த தனுஷ், மெருகேறும் சமந்தா, ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆண்ட்ரியா! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

சோஷியல் மீடியா ரவுண்டப்
சோஷியல் மீடியா ரவுண்டப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundUp

உலக செவிலியர்கள் தினம் இன்று. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது இக்கட்டான சூழலில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் தங்கள் வாழ்த்துகளைப் பிரபலங்கள் பலரும் தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், சிவகார்த்திகேயன், அபிஷேக் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் செவிலியர்களுக்குத் தங்கள் நன்றியைப் பதிவிட்டுள்ளனர்.

அதில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ‘இந்த நாள் செவிலியர்களின் பணிகளைக் கொண்டாடுவதற்கும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்குமான நாள். நம்முடைய உடல்நலத்திலும் பாதுகாப்பிலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பாதுகாப்பவர்கள் அவர்கள். நம்முடைய பாதுகாவலர்கள்’ என உணர்ச்சிமயமான வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார். வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் டிபி-யையும் மாற்றியுள்ளார், சச்சின்.

மாதவன்
மாதவன்

‘ஆட்டோகிராஃப்’, ‘வரலாறு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. தற்போது தமிழில் ‘கோப்ரா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துவருகிறார். நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், ஆங்கர் என பிஸியாக வலம் வந்தவர், தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.

‘அன்னையர் தின’த்துக்காக குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் கனிகா. ’இயக்கம் எனக்கு புது அனுபவம். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். வருங்காலத்திலும் என்னை இயக்குநராகப் பார்க்கலாம்’ என மகிழ்ச்சியோடு தம்ஸ் அப் காட்டுகிறார் கனிகா.

View this post on Instagram

What day is it 🌓

A post shared by Trish (@trishakrishnan) on

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் 2002-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் தனுஷ். திரைத்துறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, சோஷியல் மீடியாவில் #18YrsOfKTownPrideDHANUSH என்ற ஹேஷ்டேக்கில் தங்களது அன்பை வெளிப்படுத்தி, அதை ட்ரெண்டிங்கில் வைத்திருந்தனர். திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளை தனுஷுக்கு பதிவு செய்திருந்தனர். ரசிகர்களது அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனாவால் பல தொழில்கள் முடக்கப்பட்டிருந்தன. தற்போது, பல நிபந்தனைகளுடன் தொழில்கள் தொடங்குவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், லாக்டெளனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமாத்துறையும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைச் செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நேற்றிலிருந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ‘மாஸ்டர்’, ‘டாக்டர்’, ‘பென்குயின்’, ‘பூமி’, ‘சூர்ப்பனகை’ உள்ளிட்ட தடைபட்டு நின்ற பல பெரிய ஸ்டார் படங்களும், வெப்சீரிஸ்களின் டப்பிங், எடிட்டிங், கிராஃபிக்ஸ் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லாக்டெளன், பலருக்கும் பலவித அனுபவங்களையும் புது விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் தந்திருக்கிறது. அந்த வகையில், பல பிரபலங்கள் கற்றுக்கொண்ட புது விஷயங்களையும், பழைய நினைவுகளையும் தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுவருகின்றனர். சமீபத்தில் பார்வதி, சாய்பல்லவி உள்ளிட்டோர் தங்களது சிறு வயது புகைப்படங்களைப் பதிவிட, மறுபக்கம் சமந்தா தன் நடிப்பை மெருகேற்ற ஆன்லைன் கோர்ஸில் பயிற்சி எடுப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இப்படி பிரபலங்களின் புதுப்புது அப்டேட்ஸ், இந்த நேரத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாகவும் பிரபலங்களின் மறுபக்கத்தைத் தெரிந்துகொள்ளும்படியாகவும் இருந்தது.

அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா, லாக்டெளனால் இப்போது செஃப் அவதாரம் எடுத்துள்ளார். யோகா, இசை, பாட்டு, குறும்படங்கள் என தனது நேரத்தை செலவிட்டு வந்தவர், தற்போது சமையல் பக்கம் கவனம் செலுத்திவருகிறார். ‘லாக்டெளனுக்கு முன்பு வரை காஃபி மட்டும்தான் போடத் தெரியும். ஆனா இப்போ, நான் மாஸ்டர் செஃப்’ என்பது ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டேட்மென்ட். சமீபத்தில் கேக் ஒன்றை பேக் செய்தவர், அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, ‘சமையல் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்’ என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘பாகுபலி’ படத்தில் பல்வாதேவனாக தனது நடிப்பால் பலரது மனம் கவர்ந்தவர், நடிகர் ராணா டகுபதி. தெலுங்கில் பிஸியான நடிகராக வலம் வரும் இவரது நடிப்பில், தமிழில் ‘காடன்’ படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், தனது ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்துள்ளார் ராணா.

View this post on Instagram

And she said Yes :) ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனர் மேஹா பஜாஜுடன் காதலில் இருப்பவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருடன் இருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு