தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை!
இந்தப் படம் முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதையைக் கொண்டது என்பதால் முன் தயாரிப்பு பணிகள் நடந்துவருகின்றன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படப்பிடிப்பு, வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் துவங்க உள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மலையாளப் படங்களில் நடித்துவரும் இவர், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துவருகிறார்.

கடந்த ஆண்டு மாயநதி, இந்த ஆண்டு வரதன் என ஹிட் படங்களில் நடித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர், ஐஸ்வர்ய லட்சுமி.
கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதையைக் கொண்டது என்பதால், தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. கேங்ஸ்டர் கதையை அடிப்படையாகக் கொண்ட படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.