Published:Updated:

`அந்த எண்ணத்தையெல்லாம் பொய்யாக்கிட்டுத்தான் சிவசாமியா மாறினார் தனுஷ்!' - அக்கா கார்த்திகா

குடும்பத்தினருடன் கார்த்திகா

தனுஷின் சகோதரி மருத்துவர் கார்த்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தம்பியின் கடின உழைப்பு குறித்து நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து கார்த்திகாவிடம் பேசினோம்.

`அந்த எண்ணத்தையெல்லாம் பொய்யாக்கிட்டுத்தான் சிவசாமியா மாறினார் தனுஷ்!' - அக்கா கார்த்திகா

தனுஷின் சகோதரி மருத்துவர் கார்த்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தம்பியின் கடின உழைப்பு குறித்து நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து கார்த்திகாவிடம் பேசினோம்.

Published:Updated:
குடும்பத்தினருடன் கார்த்திகா

2019-ம் ஆண்டுக்கான 67-வது தேசிய விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. இதில் `அசுரன்' படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு விருது அறிவிக்கப்பட்டதும். அவரின் சகோதரி மருத்துவர் கார்த்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தம்பியின் கடின உழைப்பு குறித்து நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து கார்த்திகாவிடம் பேசினோம்.

அசுரன் படப்பிடிப்பில்...
அசுரன் படப்பிடிப்பில்...

``நான் தனுஷோட ஃபேன். அவர் நடிக்கும் எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திடுவேன். இரண்டாவது முறையா தேசிய விருதை வாங்குறார்னு நினைக்கும்போது ரசிகையாக மட்டுமல்லாமல் அக்காவாகவும் அவரின் வெற்றி கூடுதல் சந்தோஷத்தைக் கொடுக்குது. ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கும் தனுஷுக்கும் மூணு வயசுதான் வித்தியாசம். அதனால் ரெண்டு பேரும் எப்போதுமே க்ளோஸாதான் இருப்போம். 20 வருஷங்களுக்கு முன்னாடி நான் பார்த்த தனுஷுக்கும் இப்போ இருக்குற தனுஷுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்த வித்தியாசத்தையும் வளர்ச்சியையும் அவரின் கடின உழைப்புதான் அவருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்ப காலத்தில் நிறைய கேலி, கிண்டல்களுக்கு உள்ளானார். ஆனா, எதையுமே பெரிசா எடுத்துக்காம தன்னுடைய வேலையையும் நூறு சதவிகிதம் திருப்தியா பண்ணணும்னு நினைப்பார். `அசுரன்' படத்துல தனுஷ் கமிட் ஆனதும். படத்தின் கதையை எங்ககிட்ட ஷேர் பண்ணார். மூணு குழந்தைகளுக்கு அப்பா ரோலில் நடிக்க முடியுமா? அவரின் முகம் நிஜ வயசைக் காட்டிக் கொடுத்துடாதாங்கிற பயம் இருந்துச்சு. எல்லாருடைய எண்ணத்தையும் பொய்யாக்கிட்டு சிவசாமியா கண்ணு முன்னாடி நின்னார் தனுஷ்.

கார்த்திகா
கார்த்திகா

`அசுரன்' படம் பார்க்க தியேட்டருக்குப் போயிருந்தேன். முதல் சீன்லேயே எனக்கு தனுஷ் முகம் மறந்துபோச்சு. அவ்வளவு சூப்பரா பண்ணியிருந்தார். படம் பார்த்துட்டு பேச வார்த்தைகள் இல்லாம அரை மணிநேரம் அழுதேன். அப்படியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்க படம் முடியும் வரை தனுஷ் சிவசாமியாவே வாழ ஆரம்பிச்சார். அவரின் வாய்ஸ் மாடுலேஷன், நடை, தோற்றம்னு நிறைய மெனக்கெட்டார். அசுரன் படத்துல சிவசாமிக்கு காரைப்பல்; பல்லுக்கு நடுவில் இடைவெளி இருக்கும். அந்தப் பல்லை எங்க அக்காவும், பல் மருத்துவருமான விமலா கீதாதான் தயார் செய்து கொடுத்தாங்க. எத்தனையோ நாள் அது உடைஞ்சு தனுஷ் வாயில் இருந்து ரத்தம் வடிஞ்சுருக்கு ஆனா, அவரு அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டது இல்ல. அலட்டிக்காம அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்துட்டு இருப்பார்.

அசுரன் பட ஷூட்டில் இருந்தபோது, ஐஸ்வர்யா அவர் கூடவே கோவில்பட்டியில் இருந்தாங்க. நாங்க எல்லாருமே அடிக்கடி வீடியோ கால் பண்ணி பேசுவோம். வீடியோ காலில் பேசும்போதே சிவசாமி பேசுற மாதிரிதான் அமைதியா பேசுவார். இப்படி அவர் எடுத்துக்கிட்ட சின்னச் சின்ன முயற்சிகள்தான் தேசிய விருது வரை கொண்டு போயிருக்கு. ஷூட்டிங்குக்காக இப்போ அமெரிக்கா போயிருக்கார். விருது அறிவிச்சதும் போனில்தான் பேசிக்கிட்டோம்.

விருதுகளையும் விமர்சனங்களையும் மண்டையில் ஏத்திக்காம தொடர்ந்து வித்தியாசமான ரோல்கள்ல நடிக்கிறதுலதான் அவருடைய முழுக் கவனமும் இருக்கு" என்றார் கார்த்திகா.