Published:Updated:

`ஜகமே தந்திரம்': ஈழ அரசியல்தான் புரியாது... கார்த்திக் சுப்புராஜுக்கு கேங்ஸ்டர் கதையுமா தெரியாது?!

ஜகமே தந்திரம்

தியேட்டரில்தான் ரிலீஸாக வேண்டும் எனப் பலரும் போர்க்கொடி தூக்கிய படம். நெட்ஃப்ளிக்ஸில் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகியிருக்கிறது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'?

`ஜகமே தந்திரம்': ஈழ அரசியல்தான் புரியாது... கார்த்திக் சுப்புராஜுக்கு கேங்ஸ்டர் கதையுமா தெரியாது?!

தியேட்டரில்தான் ரிலீஸாக வேண்டும் எனப் பலரும் போர்க்கொடி தூக்கிய படம். நெட்ஃப்ளிக்ஸில் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகியிருக்கிறது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'?

Published:Updated:
ஜகமே தந்திரம்
சுருளி மதுரையில் பார்ட் டைமாக பரோட்டா கடை நடத்திவரும் தாதா. கேஷுவலாக அவர் செய்த ஒரு கொலையால், அவரின் திருமணம் நிற்கிறது. உயிருக்கும் ஆபத்து வந்து சேர்கிறது. இதனால் கிடைத்த வாய்ப்பில் இங்கிலாந்தில் ஒரு மாதம் கன்சல்டன்ட் கேங்ஸ்டராக வேலைப் பார்க்கக் கிளம்புகிறார். அங்கு நடக்கும் அந்த ஊர் அரசியலும் தெரியாமல், ஈழ அரசியலும் புரியாமல் அவர் செய்யும் விஷயங்களும் அதன் பின் வரும் பிரச்னைகளும்தான் கதை.

நம் உள்ளூர் தாதா சர்வதேச அளவில் இறங்கி அலப்பறை செய்தால் எப்படியிருக்கும் என 'ரகிட ரகிட' சொல்லும் ரகளையான ஒன்லைன் பிடித்தவர்கள், அந்த ஒன்லைன் மட்டுமே போதும் என நினைத்ததுதான் ஆசம் என சொல்லவேண்டியதை ஆயாசமாக மாற்றிவிட்டது. மொத்த பாரத்தையும் தனுஷின் நடிப்பின் மீதும், டெக்னிக்கல் விஷயங்களின் மீதும் இறக்கி வைத்துவிட்டு லாஜிக்கே இல்லாமல் ஓரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். டாரன்டினோ ஸ்டைலில் முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இன்ட்ரோ வைத்துத் தொடங்கும் படம், இடையில் ஒரு சில இடங்களில் மட்டுமே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆண்டு, 'கர்ணன்' படம் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனுஷ் மீண்டும் 'மாரி' டைப் படத்துடன் வந்திருக்கிறார். சுருளியாக 'கேங்ஸ்டர்' மோடில் சரவெடியாக வெடித்திருக்கிறார். அது ஒரு சில இடங்களில் சற்றே ஓவர் ஆக்டிங்காக தெரிந்தாலும், படம் முழுவதையும் தாங்குவது என்னவோ அவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மட்டும்தான். பரோட்டா கடை சண்டை, முதன் முதலாக இங்கிலாந்து வந்ததும் லண்டன் தாதா பீட்டருடன் நடக்கும் உரையாடல், ஜோஜூ ஜார்ஜின் கோட்டையிலேயே அவருடன் டீல் பேசும் காட்சி எனப் பல காட்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்லும்படி சிறப்பாகவே செய்திருக்கிறார். அதிலும் அந்த டீல் பேசும் காட்சி கட்டே இல்லாமல் நீண்டுகொண்டே போவதில் தனுஷின் நடிப்பும், வசன உச்சரிப்பும்... செம மாஸ் ப்ரோ!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரள தேசத்திலிருந்து ஜோஜூ ஜார்ஜ்ஜையும், ஐஸ்வர்யா லக்ஷ்மியையும் இறக்கியிருக்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு தமிழில் விஷாலின் 'ஆக்ஷன்'தான் முதல் படம் என்றாலும் இதில்தான் சற்றே நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. ஈழத்து தமிழில் கதைத்துக்கொண்டு ஒரு நெடிய பின்கதை கொண்டிருக்கும் அவரின் கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.

ஜோஜூ ஜார்ஜுக்கு 'வடசென்னை' ராஜன் போன்றதொரு ஸ்கோப் கொண்டிருக்கும் கதாபாத்திரம். ஆனால், தேவையான அளவு ஸ்க்ரீன் பிரசன்ஸும் இல்லாமல், அவரின் அரசியலையும் தெளிவாகப் பேசாமல் ஒரு சாதாரண குணச்சித்திர பாத்திரமளவிற்கு மட்டுமே அதை சுருக்கியிருப்பதால், பிற்பாதி படத்தின் ஓட்டத்தில் காணாமல் போகிறார். முக்கியமானதொரு அரசியலை முன்னெடுக்கும் அவரின் செயல்களைப் பிற்பாதியில் வெறும் வசனங்களால் மட்டுமே கடந்துபோக வைத்திருப்பது பெரும் சறுக்கல்.

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ பீட்டராக டெரர் காட்டியிருக்கிறார். கலையரசன், வடிவுக்கரசி, ஷரத் ரவி தங்களின் பாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சௌந்தரராஜா, பாபா பாஸ்கர் படத்தில் வந்துபோயிருக்கிறார்கள்.

இரண்டு ஹிட்டான பாடல்கள் இடம்பெறவில்லை என்றாலும் பின்னணி இசையில் ரகளை செய்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். தனுஷுக்குப் பிறகு படத்தின் ஹீரோ என்றால் அது ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாதான். பெரும்பாலும் திரையை நிறைக்கும் சிவப்பு, மஞ்சள் ஒளிக்கோர்வைகள், கட்டாகாத நெடிய ஷாட்கள், ஒரே கோணத்தில் பலமுறை ட்ராவலாகும் ஷாட்கள் என ரூம்போட்டு யோசித்துக் கலக்கியிருக்கிறார்கள்.

''தமிழ் பேசறவங்க தமிழ்நாடு மட்டும்தானா?'', ''போரைத் தொடங்கத்தான் முடியும், ஆனால் முடிக்க முடியாது'' போன்ற ஒரு சில வசனங்கள் ஈர்க்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல்பாதியில், ஈழத்து அரசியல் சூழலும், போரின் தாக்கமும் புரியாமல் நகரும் காட்சிகள் சர்ச்சையைக் கிளப்பினாலும், பிற்பாதியில் அதை அப்படியே மாற்றியமைக்க முயன்றிருக்கிறார்கள். ஈழத்து வலியைச் சொல்லும் காட்சி அமைப்புகள், 'தேய்பிறை' பாடல் போன்றவைதான் படத்தின் மைலேஜைக் கூட்டியிருக்கின்றன. ஆனால், ஈழம் குறித்த பதிவுகள், தமிழ் சினிமாவின் அடுத்த 'விவசாய' டெம்ப்ளேட் ஆகிவிடுமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. போர் வரலாற்றை, அம்மண்ணின் அரசியலை, இயக்குநர்கள் வெறும் சென்டிமென்ட் கோணத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், தெளிவான சித்தாந்தங்களுடன் அதை அணுகுவது உலகத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

அரசியலை ஒரம்வைத்துவிட்டு ஒரு கேங்ஸ்டர் சினிமாவாக இதை அணுகினாலும் ஆயிரம் லாஜிக் ஓட்டைகள். தமிழ்நாட்டு கேங்ஸ்டர் படங்களில்தான் போலீஸ் வரவே வராது என்றால், இங்கிலாந்திலுமே அப்படித்தானா?!

ஹீரோ எத்தனை பேரை வேண்டுமானாலும் சுடுவார், ஒரே ஷாட்டில் அவர்கள் இறந்துவிடுவார்கள். ஆனால், ஹீரோவை மட்டும் சுடவே முடியாது. சுட்டாலும் அவர் சாக மாட்டார். காலங்காலமாக நம் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் இதுதான். ஆனால், சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்திய கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குநர்களே இந்த கோதாவில் குதிப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. மாஸுனாலும் பார்த்து பண்ணுங்க பாஸு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism