Published:Updated:

``கொரோனா வைச்சு செஞ்சுருச்சு!" - `தாராளபிரபு' இயக்குநர் கிருஷ்ணா

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

ஏப்ரல் முதல் வாரத்துல பாதிப்பு குறைஞ்சு நிலைமை சீரானா, படத்தை ரீ-ரிலீஸ் பண்ணத் திட்டம் வச்சிருந்தோம். ஆனா, இப்ப நிலைமை தலைகீழாகிடுச்சு.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளிவந்துள்ள ஃபீல் குட் படங்களில் 'தாராளபிரபு'வும் ஒன்று.

இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து
இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து

'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக், எட்டு இசையமைப்பாளர்கள், ஸ்பெர்ம் டோனேஷன் என 'தாராள பிரபு' படம் ரிலீஸுக்கு முன்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் வெளியான பிறகு 'நல்லாருக்குப்பா' என ஃபேமிலி ஆடியன்ஸிடமிருந்து தம்ஸ் அப் வர, படம் குறித்தான கேள்விகளுடன் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்துவைச் சந்தித்தோம்.

முதல் படமே ரீமேக் பண்ண காரணம் என்ன?

Director shoojit
Director shoojit

"இந்தப் படத்துடைய தயாரிப்பாளர், 'விக்கி டோனர்' கதையை நிறைய இயக்குநர்கள்கிட்ட சொல்லி எதுவும் செட் ஆகாம, என்கிட்ட வந்தார். உண்மையைச் சொல்லணும்னா, நான் இந்தப் படத்தோட இயக்குநர் சுஜித்தோட பெரிய ரசிகன். அதனால அவரோட கதையை இயக்கறதுக்கான வாய்ப்பு எனக்கு வரும்போது எப்படி வேண்டாம்னு சொல்வேன்."

தமிழ் சினிமாவுக்கு 'ஸ்பெர்ம் டொனேஷன்'ங்கற கான்செப்ட் புதுசு. அதைப் படமா எடுக்கும்போது தயக்கம் இருந்ததா?

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

"ரசிகர்களுக்கு இதை எப்படி எடுத்துட்டுப் போக போறேன்னுதான் எண்ணம் ஓடிட்டு இருந்ததே தவிர, இந்த கான்செப்ட்டை எடுத்து பண்ணப் போறோம்கிற தயக்கமே இல்லை. 'விக்கி டோனர்' அளவுக்கு இல்லாம, படத்தை ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் ஏத்த மாதிரி பண்ணணும்கிறதுல தெளிவா இருந்தேன். அது கரெக்ட்டா வொர்க்கவுட் ஆகியிருக்கறதுலையும் சந்தோஷம். அதேபோல, 'ஸ்பெர்ம் டொனேஷன்' கான்செப்ட் இன்னும் நிறைய பேருக்கு சரியான விதத்துல போய் சேரதுக்கான வாய்ப்பா இந்தப் படம் இருக்கும்னும் தெரியும். அதனால, எந்தவிதமான தயக்கமும் இந்தக் கதைல எனக்கு வரலை."

விவேக், ஹரிஷ்கல்யாண் கதைக்குள்ள வந்தது எப்படி?

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

"இந்தப் படம் கமிட் ஆகறதுக்கு முன்னாடியே வேற ஒரு கதைக்காக ஹரிஷ்கிட்ட பேசிட்டிருந்தேன். அப்போ, இந்தக் கதை இயக்குறதுக்கான வாய்ப்பு வந்தது. கதைக்கு ஹரிஷும் பொருத்தமா இருந்ததால, அவரையே கமிட் பண்ணிட்டோம். டாக்டர் கதாபாத்திரத்துக்கு யார் சரியா இருப்பாங்கனு டிஸ்கஸ் போயிட்டிருந்தப்ப என்னோட ரைட்டர் விவேக் சார் சரியா இருப்பார்னு சொன்னார். விவேக் சாரும் ஸ்கிர்ப்ட்டைப் படிச்சதும், 'கண்டிப்பா பண்ணறேன்'னு சொல்லிட்டார். படம் எல்லாம் முடிஞ்சு அவுட்புட் பார்த்துட்டு'ரீமேக் மாதிரியே இல்ல கிருஷ்ணா, நல்லா பண்ணியிருக்கீங்க'ன்னு சொன்னது எனக்கு சந்தோஷம்."

படத்துக்கு எட்டு இசையமைப்பாளர்கள் ஏன்?

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

"அடிப்படையில நான் ஒரு இசைக் கலைஞர். அந்த ஒரு ஆர்வத்துலதான் முதல்ல தமிழ்ல படம் பண்ணும்போது, மியூசிக்ல எதாவது புதுசா பண்ணணும்கிற ஆர்வத்துல எட்டுப் பாடல்கள், எட்டு இசையமைப்பாளர்னு கொண்டு போயிட்டேன். பேண்ட்லாம் வச்சு பண்ணிட்டு இருந்ததால கண்டிப்பா ஒரு தனியிசைக் கலைஞரை படத்துக்குள்ள எடுத்துட்டு வரணும்கிறதுல தெளிவா இருந்தேன். அப்படித்தான் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு மியூசிக் டைரக்டரா உள்ள எடுத்துட்டு வந்தோம்."

காஸ்டிங் பொருத்தமா இருந்ததே?

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

"இந்த கமென்ட் நிறைய பேர்கிட்ட இருந்து வந்தது. இதுக்குப் பெரிய நன்றி காஸ்டிங் டைரக்டர் சரண்யா சுப்ரமணியனிக்குதான் சொல்லணும். பாட்டி கதாபாத்திரத்துக்கு சச்சுமாவை நான் யோசிச்சிருந்தேன். மத்தபடி கதைல வர்ற ஹீரோ அம்மா, கோச் இந்தமாதிரியான கதாபாத்திரங்களை எல்லாம் சரியா சரண்யாதான் தேர்ந்தெடுத்தாங்க. இந்த மாதிரி காஸ்டிங் டைரக்‌ஷன்ங்கிற துறை இப்பதான் தமிழ் சினிமாக்குள்ள வந்துட்டு இருக்கு. எதிர்காலத்துல இன்னும் பெரிய இடத்துக்குப் போகும்."

'தாராள பிரபு' படத்துடைய இரண்டாவது பாதியில திரைக்கதை 'விக்கி டோனர்'லேருந்து வேற மாதிரி இருக்குமே?

'விக்கி டோனர்'
'விக்கி டோனர்'

" 'விக்கி டோனர்' படத்துல இருந்து சீன் பை சீன் அப்படியே பண்ணக்கூடாது, நம்ம பங்களிப்பும் இருக்கணும்னு நினைச்சேன். கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு என்னோட கரியர்ல திரும்பி பார்த்தா, இந்தப் படத்துல நாம செஞ்ச வேலை இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால, கதையில அந்த மாற்றம் நடந்தது. தயாரிப்பாளர்களுக்கும் அது பிடிச்சிருந்தது."

குழந்தையைத் தத்தெடுக்கறது, ஸ்பெர்ம் டொனோஷன்னு எமோஷன், சயின்ஸ்ங்கிற ரெண்டு கான்செப்டை படம் சரியா டீல் பண்ணியிருக்குனு நினைக்கறீங்களா?

'தாராள பிரபு'
'தாராள பிரபு'

"ஸ்பெர்ம் டொனேஷன் மாதிரியான கான்செப்ட் இருக்குங்கறதை மக்கள் தெரிஞ்சுக்கணும், அதேசமயம் குழந்தைகளை தத்தெடுக்கறதுங்கறது தப்பில்லைன்னும் மக்கள் புரிஞ்சுக்கணும்னு இது ரெண்டுமே உள்ள இருக்குற மாதிரி வெச்சோம். மத்தபடி எது சரிங்கிறதை நாங்க சொல்ல முடியாது. அது தனிப்பட்ட ஒருத்தரோட முடிவு."

படம் வெளியான கொஞ்ச நாள்லயே கொரோனா சூழல் காரணமா OTT-ல வெளியிட வேண்டியதாகிருச்சே?

"படம் வெளியான 3 நாள்களுக்குப் பிறகு கொரோனா தீவிரத்தால லாக்டவுன் அறிவிச்சாங்க. வெளியான மூணு நாள்ல நல்ல ரெஸ்பான்ஸ் ரசிகர்கள்கிட்ட இருந்து கிடைச்சது. ஆனா, கொரோனா சூழல் படத்தை தியேட்டர்லயே கட்டிப்போட்டுடுச்சு. ஏப்ரல் முதல் வாரத்துல பாதிப்பு குறைஞ்சு நிலைமை சீரானா, படத்தை ரீ-ரிலீஸ் பண்ணத் திட்டம் வச்சிருந்தோம். ஆனா, இப்ப நிலைமை தலைகீழாகிடுச்சு. பல பெரிய படங்கள் வெளியீடு எல்லாம் தள்ளிப்போயிருக்கு. அந்தப் படங்கள் எல்லாம் எப்ப ரிலீஸ்னு எதுவும் உறுதியாகாம இருக்கு. அதனால OTT-ல ரிலீஸ் பண்றதுதான் சரியா இருக்கும்னு அமேசான் ப்ரைம்ல வெளியிட்டிருக்கோம். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. இப்ப இருக்க நிலையையும் கவனத்துல வச்சிக்கணும் இல்லையா. OTT-ல பார்த்துட்டு நிறையபேர் பாசிட்டிவ் கமென்ட்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க. இந்த வருஷம் சினிமாத்துறை கொரோனாவால எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கு, இனி வர்ற காலங்கள்ல இந்த நிலை எப்படி இருக்க போகுது இதெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்கணும்.”

அடுத்த கட்டுரைக்கு