Published:Updated:

``தனித் தீவு, தனி நாடுனு அவர் வேற லெவல்; ஆனா இந்த `நித்யா நந்தா' வேற படம்!" - ஆதிக் ரவிசந்திரன்

ஆதிக் ரவிசந்திரன்
News
ஆதிக் ரவிசந்திரன்

`காதலைத் தேடி நித்யா நந்தா', பிரபுதேவாவுடன் `பஹிரா' என இந்த வருடம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரனுடன் ஒரு பேட்டி!

``என்னோட அப்பா அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தவர். இதனாலே சினிமாவுக்குள்ள நான் வரக்கூடாது, அந்த சாயல் எனக்கு இருக்கக்கூடாதுனு அம்மாவும் அப்பாவும் ரொம்ப கவனமா இருந்தாங்க. ஆனா, எதிர் துருவங்கள்தான் ஈர்க்கும்ங்கிற மாதிரி எனக்குள்ள இயல்பிலேயே சினிமா ஆர்வம் இருந்தது. வெற்றிமாறன் சார், லிங்குசாமி சார் மாதிரி நிறைய பேர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்க வாய்ப்பு கேட்டேன். ஆனா, எதுவும் நடக்கலை. அதுக்கப்புறம் பல முயற்சிகள் பண்ணிதான் `த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படம் மூலமா இருக்குநராகுற வாய்ப்பு கிடைச்சது" எனத் தான் இயக்குநரான கதையுடன் பேச ஆரம்பிக்கிறார் ஆதிக் இரவிச்சந்திரன்.

ஆதிக் இரவிச்சந்திரன்
ஆதிக் இரவிச்சந்திரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நடிகர், இயக்குநர்னு ரெண்டு லைன்லேயும் டிராவல் பண்றது எப்படி இருக்கு. எதுக்கு முதன்மை?

``விருப்பம், முதன்மை எல்லாமே டைரக்‌ஷன்தான். நடிக்கிறதுக்கான வாய்ப்பு திடீர்னுதான் வந்தது. நடிக்கிறதுக்கு நான் வாய்ப்புத் தேடி போகலை. அதுவும் அஜித் சார் மாதிரி பெரிய நடிகர்கூட நடிக்க வாய்ப்பு வரும்போது எப்படி அதை மறுக்க முடியும். பொதுவா நான் அஜித் சாரோட பெரிய ரசிகன். அவரை வெச்சு படம் பண்ணலாம்னு ஆசை இருக்கு. இதுக்கு நடுவுல அவர் நடிக்கிற படத்துல சின்ன கேரக்டரா இருந்தாக்கூட விட மாட்டேன். `நேர்கொண்ட பார்வை'யில கமிட்டாகுறதுக்கு முன்னாடி பயங்கரமா வெயிட் போட்டிருந்தேன். திடீர்னு வெயிட் குறைச்சிட்டேன். எதனால அப்படி ஆச்சுன்னு தெரியலை. கரெக்ட்டா அப்பதான் பட வாய்ப்பும் வந்தது. மத்தபடி எனக்கு டைரக்‌ஷன்தான் எல்லாமே."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

AAA பட சமயத்துல சிம்புவுக்கும் உங்களுக்கு மிருந்த க்ளாஷ்க்கு பிறகு பேசினீங்களா. என்ன சொன்னார்?

சிம்புவுடன்
சிம்புவுடன்

``சிம்புவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல. நார்மலா சினிமாக்குள்ள என்ன நடக்குமோ அதுதான் நடந்தது. மத்தபடி எதுவும் இல்லை. அவர் மேல எனக்கும் என் மேல அவருக்கும் நல்ல ரெஸ்பெக்ட் இருக்கு. சிம்புவை வெச்சு அடுத்து ஒரு படம் இயக்கப் போறதா ஒரு டாக் போயிட்டிருக்கு. அந்த மாதிரி இப்ப எந்த ஐடியாவும் இல்ல."

`காதலை தேடி நித்யா நந்தா' பட டைட்டிலுக்கு கீழ இது ஆதிக் இரவிச்சந்திரனின் காவியம்னு ஒரு லைன் போட்ருப்பீங்க. அந்த அளவுக்கு படத்துல என்ன ஸ்பெஷல்?

'காதலை தேடி நித்யா நந்தா'
'காதலை தேடி நித்யா நந்தா'

``என்னோட படங்கள் ஒரே ஜானருக்குள்ள செட்டாகக் கூடாது. முதல் படம் இளைஞர்களுக்கான படமா அமைஞ்சிருச்சு. இரண்டாவது படம், ஆக்‌ஷன் ஜானர்ல ட்ரை பண்ணேன். மூணாவது படமான, `காதலை தேடி நித்யா நந்தா' லவ் ஃபேன்டசி ஜானர்ல இருக்கும். உண்மையான காதலைத்தான் எல்லாரும் தேடி ஓடிட்டு இருக்கோம். அதை யாரும் அனுபவிச்சதே இல்லை. அதை ஒருத்தன் அனுபவிச்சா எப்படி இருக்கிம்கிறதுதான் படத்தோட ஒன்லைன். நித்யா நந்தானு பெயர் வெச்சதும் அவரை உள்ள கொண்டு வந்துட்டீங்களானு எல்லாரும் கேட்குறாங்க. அது தப்பு. அவர் எவ்வளவு பெரிய ஆளு... தனி நாடு, தனித் தீவுனு வேற எங்கேயோ போயிட்டிருக்கார். அவரை ஏன் நாம தொந்தரவு பண்ணணும். இந்தப் படத்துல நித்யாங்கிற பொண்ணும் நந்தாங்கிற பையனும் உண்மையான காதலைத் தேடிப்போறாங்க. அவ்வளவுதான். லவ் ஃபேன்டசி படம் தமிழ்ல இதுவரை 3-டில வந்தது இல்லை. புது முயற்சியா இதைப் பண்ணியிருக்கோம். ஆடியன்ஸ் `நித்யா நந்தா'வைப் பார்த்துவிட்டு எப்படியும் `இது ஒரு காவியம்'னுதான் கமென்ட் சொல்லப் போறாங்க. அதான், அதை நானே சொல்லிட்டேன். அடுத்ததா பிரபு தேவா சாரை வெச்சு பண்ற படம், `பஹீரா'. த்ரில்லர் ஜானர்ல இந்தப் படம் இருக்கும். ரொம்பவே இன்டென்ஸா இருக்கும். படத்துல காமெடியே இருக்காது."

இரண்டாவது முறையா ஜிவிகூட வொர்க் பண்ணறீங்களே?

ஜிவி பிரகாஷுடன்
ஜிவி பிரகாஷுடன்

``பக்கத்து வீட்டுப் பையன் லுக்ல என்னோட `த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' கதைக்கு ஒரு ஹீரோ தேவைப்பட்டாங்க. அதுக்கு முன்னாடி ஜிவி சாரோட நிறைய பேட்டிகள் பார்த்திருக்கேன். அவர்கிட்ட குழந்தைத்தனமான முகமும் இருக்கு, சீரியஸான முகமும் இருக்கு. என்னோட கதைக்கு கரெக்டா இருப்பார்னு பார்த்ததுமே தோணுச்சு. நைட்டு போய், கதை சொன்னேன். கேட்டதும் ஓகே சொல்லிட்டார். அந்தப் பட சமயத்துலயே அடுத்து இன்னொரு படம் சேர்ந்து பண்ணணும்னு பேசியிருந்தோம். அப்படி ஆரம்பிச்சதுதான் ஜிவி சார்கூட இப்ப பண்ணிகிட்டிருக்க `நித்யா நந்தா."

நீங்க ஹீரோவா நடிக்கப்போறதா ஒரு டாக் இருந்ததே, ஹீரோவா பண்ண ஆசை இருக்கா?

ஆதிக்
ஆதிக்

``அதெல்லாம் இல்லை. நான் ஹீரோவா நடிச்சா தமிழ் சினிமா பாவம். அந்த மாதிரி கொடுமைலாம் நடக்காது. நான் ஹீரோவா என்னைக்கும் பண்ண மாட்டேன்."

`பஹீரா'வுக்குள்ள பிரபுதேவா வந்தது?

'பஹீரா' படப்பிடிப்பில் பிரபுதேவாவுடன்
'பஹீரா' படப்பிடிப்பில் பிரபுதேவாவுடன்

" 'காதலை தேடி நித்யா நந்தா' படம் பண்ணிகிட்டிருந்த சமயத்துல அந்தப் படத்துடைய கேமராமேன் அபிநந்தன்கிட்ட அடுத்து இந்த மாதிரியான படம்தான் பண்ணப்போறேன்னு கதையோட ஒன்லைன் சொன்னேன். அதைக் கேட்டுட்டு, `பிரபுதேவா மாஸ்டர்க்கு இந்தக் கதையைச் சொல்லுங்க. வொர்க் அவுட் ஆகும்'னு சொன்னார். `மாஸ்டர் பண்ணா செமயா இருக்கும். ஆனா, அவர் பண்ணுவாரா. கதை புது ஸ்கேல்ல இருக்கே'ன்னு கேட்டேன். `பேசிப்பாரு'னு அபிநந்தன் என்கரேஜ் பண்ணார். அதுக்குப் பிறகுதான் மாஸ்டரை மீட் பண்ணி கதை சொன்னேன். ரொம்ப எளிமையா எல்லார் கூடவும் ஈஸியா பழகக்கூடிய ஒருவர். கதை சொல்லும்போதே இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர்னு சொல்லித்தான் ஆரம்பிச்சேன். அந்த அளவுக்கு புதுசாவும் ஃப்ரெஷ்ஷாவும் இருக்கும் `பஹிரா'. கதை கேட்டதும் `பண்ணறேன்'னு சொல்லிட்டார். போஸ்டர்ல மாஸ்டரை பார்த்த லுக் மட்டுமில்லாம, வேறொரு லுக்லையும் மிரட்டியிருப்பார்.

ஜங்கிள் புக்ல `பஹீரா' எனக்கு பிடிச்ச கேரக்டர். அதோட இயல்பே தாக்கவும் செய்யும், காக்கவும் முடியும். நல்லதைக் காக்கவும் கெட்டதைத் தாக்கவும்கூடிய ஒருவர்ங்கிற அடிப்படையிலதான் மாஸ்டருக்கு அந்தக் கேரக்டரை டிசைன் பண்ணேன். இந்தப் படத்தோட சமயத்துலதான் மாஸ்டர்கூட நல்ல பழக்கம் ஏற்பட்டு, `தபாங் 3' தமிழ் வசனம் எழுத வாய்ப்பு வந்தது. அடுத்து இந்திலேயும் படங்கள் பண்ணுவேன். அதுக்கான வாய்ப்புகளும் வந்துகிட்டிருக்கு" என உற்சாகமாக முடித்தார்.