சினிமா
தொடர்கள்
Published:Updated:

நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்

கோப்ரா படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
கோப்ரா படத்தில்...

அப்படி ஒரு வில்லன் வேணும். இர்பான் போடுகிற டிக் டாக் வீடியோக்களைப் பாத்திருக்கிறேன். சும்மா பின்னி எடுப்பார்.

“நான் 90% ஒரு கதையை எழுதிட்டு, மீதி 10% கதையை யாரை வச்சு செய்யப்போகிறோமோ அவங்களோட டீட்டெய்ல்ஸுக்காக வச்சிருப்பேன். ரொம்பவும் அழகா விக்ரம் எனக்குக் கிடைச்சதும், அவரை ஒட்டி சின்னச் சின்ன மாற்றங்கள் நடந்தன. அவருடைய நடிப்புக்குத் தீனி போடுகிற படம். வித்தியாசமாக இருக்கும். எப்பவும் ஒரு படத்தை ஒரு ஜானருக்குள் சொல்லிடலாம். ஆனா இது சைக்கலாஜிக்கல், ரொமான்ஸ், சயின்ஸ் ஃபிக்‌ஷன், த்ரில்லர்னு பல இடங்களைத் தொட்டுட்டுப் போற பயணமாக இருக்கும். பிறவிமேதையா இருக்கிற ஒருத்தனை... குறிப்பாக கணிதனாக இருக்கிறவனைக் குற்றங்கள் செய்யப் பயன்படுத்துறாங்க. யாராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியலை. கணிதத்தைப் பயன்படுத்தி எல்லாம் நடக்குது. ஒரு கட்டத்தில் அவன் யார்னு கண்டுபிடிக்கும்போது இன்னும் சில புதிய விஷயங்கள் நடக்கின்றன. கடைசியில் என்ன ஆனது, அவனைப் பிடிக்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. விக்ரம் நடிப்பின் புதிய பரிமாணமா ‘கோப்ரா' இருக்கும்...’’ நிதானமாகப் பேசுகிறார் டைரக்டர் அஜய் ஞானமுத்து. ‘இமைக்கா நொடி’களில் பளிச்செனத் தெரிய வந்தவர்.

நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்
நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்

“அத்தனை கண்களும் எதிர்பார்க்கின்றன ‘கோப்ரா'வை... எப்படி வந்திருக்கு?”

“விக்ரம் சார் படத்திற்குள் வந்து சேர்ந்த பின்னாடிதான் எல்லாமே நிகழ்ந்தது. ஒரு கேரக்டரில் வந்து உட்காரும்போது அதை எப்படிச் செய்வது என்பதில் அவருக்கென்று ஒரு பாணி இருக்கு. கேரக்டருக்குத் தேவையான விஷயங்களை, பொருத்தங்களை நமக்கே தெரியாமல் காட்சிகளுக்குள்ள வச்சிருப்பார். அப்புறம் எடிட்டிங் ரூமில் வைத்துப் பார்க்கும்போதுதான் ‘என்னடா இந்த மனுஷன்’னு வாய்விட்டு ஆச்சர்யப்படுவோம். நான் மனசில் ஒண்ணு வச்சிருப்பேன். அதைத் தாண்டி வெளிச்சம் காட்டி ஒரு நடிப்பை விக்ரம் பிரதிபலிப்பார். அவர் நடிப்பில் நாம எதிர்பார்க்காதது ஒண்ணு கிடைச்சிட்டே இருக்கும். அதை என்னன்னு பார்க்கிறதுதான் ஒவ்வொரு சமயமும் ஆச்சரியமூட்டும் அனுபவம். ஆனால் இதெல்லாம் தன்கிட்ட இருக்கும் திறமைன்னு நினைச்சுக்காமல், அதைக் கொண்டாடிக்கொள்ளாமல் இயல்பாக இருப்பார் அவர். அதுதான் அவரோட ஸ்பெஷல்.

கொரோனா மூணு தடவையும் எங்களைச் சிக்க வைத்தது. எல்லோரும் பெரும் கூட்டத்தோட ரஷ்யாவில் போய் இறங்கினால் இரண்டு நாளில் அங்கிருந்து பேக்கப் பண்ணிட்டு இந்தியா திரும்பச் சொல்லிட்டாங்க. அவ்வளவு இழப்பு. மனசு விட்டுப்போயிடாமல் தயாரிப்பாளர் லலித் குமார் மறுபடியும் எங்களை அனுப்பினார். நாங்க ரஷ்யா போயிருந்தபோது இதுவரை இல்லாத பனி. -30 டிகிரிக்கும் கீழே போன கடுமையான குளிர். நமக்குக் கொஞ்சம்கூட பழக்கம் இல்லாதது. பயமா இருக்கும். மூக்கில் இருந்தெல்லாம் ரத்தம் வரும். அதைத் தொடச்சிட்டு வேலை பார்த்ததெல்லாம் நடந்திருக்கு. தலையில் ஐஸ் கட்டி ஃபார்ம் ஆகிறதைப் பார்த்து மிரண்டிருக்கோம். எல்லாத்தையும் தாண்டி விக்ரம் சார் நடித்துக் கொடுத்தது அவ்வளவு அருமையாக வந்திருக்கு தமிழ் சினிமாவில் விக்ரமின் இடம் இந்தப் படத்தில் தனியாகத் தெரியும்.”

நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்
நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்

“ஸ்ரீநிதி ஷெட்டி முதல் தடவையாக விக்ரமிற்கு இணையா நடிக்கிறாங்க?”

“எது வேணுமோ அதை அளவாக, அழகாகத் தருவதில் ஸ்ரீநிதியை ரொம்பவும் குறிப்பிட்டுச் சொல்லலாம். ‘கே.ஜி.எஃப்’ பார்த்துட்டு அவரை இந்தப் படத்திற்குள் கொண்டுவரணும்னு ஆசைப்பட்டோம். இதில் விக்ரம் - ஸ்ரீநிதி இணை பேசப்படும்.”

“கிரிக்கெட்டர் இர்பான் பதானை வில்லன் ஆக்கிட்டீங்களே!”

“அப்படி ஒரு வில்லன் வேணும். இர்பான் போடுகிற டிக் டாக் வீடியோக்களைப் பாத்திருக்கிறேன். சும்மா பின்னி எடுப்பார். அவரோட அலைபேசி எண்ணைக் கஷ்டப்பட்டு வாங்கி போன் பண்ணிட்டு அவரைப் பார்க்க நேரே போயிட்டேன். குஜராத் வதேராவில் அவர் வீடு இருக்கு. அங்கே போய் நான் இறங்கினதும் அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. வீட்டில் எல்லோரையும் கூப்பிட்டு வச்சு ‘பாருங்க, இவர் என்னை சினிமாவில் நடிக்க வைக்க வந்திருக்கிறார்’னு சொல்லி சந்தோஷமா காலரைத் தூக்கி விட்டுக்கிட்டார். கதை அவருக்குப் பிடித்துவிட்டது. திரை மொழி, தமிழ் உச்சரிப்புக்கு ஒரு மாஸ்டர்னு நடிப்பை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கிட்டார் மனுஷன். படத்தில் ரொம்ப முக்கியமான இடத்தில் இருக்கிறார்.”

நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்
நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்
நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்

“ஸ்ரீநிதி, மிருணாளினி, மியா ஜார்ஜ்னு நிறைய பேர்... என்ன விதமான கதாபாத்திரங்கள்?”

“படத்தில் நிறைய லேயர்கள். நிறைய பேர் தேவைப்படுறாங்க. ஸ்ரீநிதி ரோல் போக மிருணாளினியும் ஒரு முக்கிய இடத்தில் இருக்காங்க. அதைப்போலவே மியாவும் ஒரு ரோலில் வருகிறார். ஆனந்த்ராஜ், ரவிக்குமார், ரோபோ சங்கர், ஜான்விஜய், பூவையார்னு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கு. விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட வேண்டியிருந்தது. ஒண்ணும் பிரச்னை இருக்காதுன்னு நம்பிட்டுப் போனால், அவரை அத்தனை ஜனங்களும் சுத்திக்கிட்டாங்க. அவரோட ‘அந்நியன்', ‘ஐ' இரண்டும் அங்கே தாறுமாறா பிரபலம் ஆகிக்கிடக்கு.”

நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்
நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்
நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்
நடுங்கும் குளிரில் விக்ரமின் நம்பர் விளையாட்டு! - ‘கோப்ரா’ ஸ்பெஷல்

“ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் எக்கச்சக்கமாக ஹிட்டாகியிருக்கு!”

“கதையைக் கேட்டதும் தயாரிப்பாளர் லலித் குமார் ‘இதை ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொண்டு போகலாமே’ என்றார். கதை பிடித்த உற்சாகத்தில் சார் ஏதோ சொல்றார்ன்னு எடுத்துக்கிட்டேன். அடுத்த இரண்டொரு நாள்களில் ‘ரஹ்மான் சார் டைம் ஒதுக்கியிருக்கார். போய் கதை சொல்லிட்டு வருவோம்’ன்னு லலித்குமார் சார் கூப்பிட்டார். நான் இருக்கிறதிலேயே நல்ல சட்டையாக எடுத்துப் போட்டுட்டு, ‘சரி, சார் கூட ஒரு போட்டோவாவது எடுத்துக்கலாம்'னு போனேன். ஆனால் அவர் கதை கேட்டுட்டு ‘பண்றேன்’னு சொல்லிட்டார். நான் பதற்றத்தில் அப்ப போட்டோகூட எடுக்காமல் வந்துட்டேன். ஆஸ்கர் வாங்கும்போது அவர் வீட்டுக்கு முன்னாடி போய் ‘தலைவா வாழ்க'ன்னு கூச்சல் போட்டிருக்கேன். அப்படிப்பட்டவன் படத்துக்கு ரஹ்மான் சார் ம்யூசிக் பண்றார்னா எப்படி பதற்றமில்லாமல் இருக்கும்? பாடல்களும் இசையும் அவ்வளவு நல்லா வந்திருக்கு. விக்ரம் சாருக்கு, லலித் சாருக்கு ஒரு நல்ல படத்தைத் தரணும்னு வேண்டி விரும்பி வேலை செய்திருக்கேன். ஹரிஷ் கண்ணன் வியூ ஃபைண்டரில் பார்த்தால் காட்சிகள் ‘அடடா'ன்னு இருந்தது. அதையே ஸ்கிரீனில் பார்த்தால் பிரமாண்டமான ஃபீல் உங்களுக்குக் கிடைக்கும். அழகா, திருத்தமா கதை சொல்லியிருக்கேன்னு நம்பிக்கை இருக்கு. சந்தோஷமாகப் பார்க்கலாம்.”