Published:Updated:

இது எதார்த்தத்தின் பதிவு!

இது எதார்த்தத்தின் பதிவு!
பிரீமியம் ஸ்டோரி
இது எதார்த்தத்தின் பதிவு!

“சொந்த ஊர் கோவை. 13 வருஷமா சில கார்ப்பரேட் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன்.

இது எதார்த்தத்தின் பதிவு!

“சொந்த ஊர் கோவை. 13 வருஷமா சில கார்ப்பரேட் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன்.

Published:Updated:
இது எதார்த்தத்தின் பதிவு!
பிரீமியம் ஸ்டோரி
இது எதார்த்தத்தின் பதிவு!

ண்ணற்ற ஆலிவ் இலைகளையும் பிர்சா முன்டாவின் முகத்தையும் தாங்கியிருக்கிறது `கோட்டா’ படத்தின் சுவரொட்டி. சத்தமில்லாமல் பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுகொண்டிருக்கிறது இத்திரைப்படம். 9 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 32 விருதுகளை வென்றுவிட்டு, திரையரங்க வெளியீட்டுக்குக் காத்திருக்கும் `கோட்டா’ படத்தின் இயக்குநர் அமுதவாணனைச் சந்தித்தேன்.

இது எதார்த்தத்தின் பதிவு!
இது எதார்த்தத்தின் பதிவு!

“சொந்த ஊர் கோவை. 13 வருஷமா சில கார்ப்பரேட் கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். பிறகு, தனியா தொழில் பண்ணினேன். ஆனாலும், எனக்குள்ளே இருந்த சினிமாக்காரன் அடிக்கடி எட்டிப்பார்த்தான். கதைகள் எழுத ஆரம்பிச்சேன். ஒளிப்பதிவு கத்துக்கிட்டேன். `வெருளி’ன்னு ஒரு படமும் இயக்கினேன். இப்போ, இரண்டாவது படமாக `கோட்டா’ ” என முன்கதையுடன் ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம்ங்கிறது குறிஞ்சிப்பூ மாதிரி. அந்த வகையில், `கோட்டா’ குழந்தைகளுக்கான நல்ல படமாக இருக்கும். திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படம்கிறதால் டார்க்கான படமா இருக்குமோன்னு நினைக்கவேண்டாம். எல்லாவிதமான உணர்வுகளும் கலந்த, நல்ல பொழுதுபோக்குப் படமாகவும் இருக்கும். கருத்துகளைப் பிரசாரத் தொனியில் சொல்வதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. அந்த வாழ்வியலை யதார்த்தமாகப் பதிவு பண்ணினாலே போதும், நாம் சொல்லவர்ற கருத்து, பார்வையாளர்களைச் சரியா சென்று சேரும்னு நம்புறேன்.

நானும் `லாக்கப்’ நாவல் எழுதிய சந்திரகுமாரும் நண்பர்கள். ஒருநாள், ஒரு கதை பற்றிப் பேசிட்டிருந்தோம். அப்போ, சந்திரகுமார் சில விஷயங்கள் சொன்னார். அதுதான் `கோட்டா’ங்கிற படமாக வளர்ந்துநிற்குது. இது ஒரு பழங்குடிச் சிறுவனைச் சுற்றி நடக்கும் கதை. திறமையான ஜிம்னாஸ்டிக் கலைஞனான அந்தச் சிறுவன் ஏழ்மையை எதிர்த்துப் போராடி, வெற்றி இலக்கை அடையுறானா, இல்லையாங்கிறதுதான் கதை. பழங்குடி மக்களின் வாழ்வியலை யதார்த்தமா பதிவு பண்ணணும்னு முடிவு பண்ணி, தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் சில காலங்கள் தங்கினேன். அங்கே 90% மக்கள் விவசாயத்தை விட்டு, கூலி வேலைக்கும் கட்டட வேலைக்கும் போறாங்க. சிலர் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு, விவசாயம் பண்றாங்க. இந்த எல்லா விஷயங்களும் கதையில் இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நக்கலைட்ஸ்’ செல்லா, சிறுவனுடைய அப்பாவாக, பகுத்தறிவாளரா நடிச்சிருக்கார். அவருக்கு மனைவியாக சஜீ சுபர்ணா நடிச்சிருக்காங்க. ஜீ டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார் டைட்டில் வின்னர் பவாஸ்தான் அந்தச் சிறுவன். அவருக்குத் தங்கையாக, அதே நிகழ்ச்சியின் ரன்னர் அப்பான நிகாரிகா நடிச்சிருக்காங்க. நரேஷ் மாதேஸ்வரன் இந்தப் படத்தில் வில்லனா பண்ணியிருக்கார். அதேபோல், சந்திரகுமாரும் படத்தில் நடிச்சிருக்கார். அறியப்படாத, ஆனால் பெரிய திறமைகள் கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் வேலை பார்த்திருக்காங்க. படக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும், ஒவ்வொரு விழாவில் விருது ஜெயிச்சிருக்காங்க.

திரைப்பட விழாக்கள்ல படத்தை ஸ்க்ரீன் செய்யும்போது, மொழி தெரியாதவங்ககூட சில இடங்கள்ல கைதட்டி ரசிச்சுப் பார்த்தாங்க. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிலர், கண் கலங்கிட்டாங்க. `ஏழ்மையைச் சரியான முறையில் காட்சிப்படுத்தியிருக்கீங்க’ன்னு சொல்லி அழுதாங்க. ரொம்ப யதார்த்தமா இருந்தது, கேன்டிடா ஷூட் பண்ணுனமாதிரி இருந்ததுன்னு சிலர் சொன்னாங்க. அது எனக்கு மிகப்பெரிய பாராட்டு. நகரத்து மக்களுக்கு படத்தில் வரும் வாழ்க்கை புதுசா இருக்கும். கிராமத்து மக்களுக்கு `இது நம்ம ஊர் படம்’ன்னு தோணும்”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism