Published:Updated:

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
விஷால்

நீங்க இருக்கும்போது, ஆர்யா மாதிரியான நபர் இன்னொரு கேரக்டர்ல நடிச்சா சூப்பரா இருக்கும்’னு சொன்னேன்.

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

நீங்க இருக்கும்போது, ஆர்யா மாதிரியான நபர் இன்னொரு கேரக்டர்ல நடிச்சா சூப்பரா இருக்கும்’னு சொன்னேன்.

Published:Updated:
விஷால்
பிரீமியம் ஸ்டோரி
விஷால்

'அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய மூன்று படங்களில் வெவ்வேறு விதமான திரையாடலைக் கையாண்ட இயக்குநர், ஆனந்த் சங்கர். தற்போது, விஷால் - ஆர்யாவை வைத்து ‘எனிமி’ படத்தை இயக்கியிருக்கிறார். ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு பத்து வருடங்கள் கழித்து, விஷாலும் ஆர்யாவும் இணைந்திருக்கின்றனர். படத்தின் டீசருக்கு சோஷியல் மீடியாவில் செம ரெஸ்பான்ஸ். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு இடையில் இயக்குநர் ஆனந்த் சங்கரின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினேன்.

`` `அரிமா நம்பி’, ‘இருமுகன்’னு தமிழ்ப் பெயர்களா வெச்சுட்டு, இந்த முறை ‘எனிமி’ன்னு பெயர் வைக்கக் காரணம் என்ன?’’

‘‘தியேட்டர்கள் இப்போதான் திறந்திருக்காங்க. பெரிய படங்களுக்கும் ரெண்டு மூணு வாரங்கள்தான். இப்போ இருக்கிற சூழல்ல ஓ.டி.டி-யிலதான் ஒரு படம் ரொம்ப நாள் இருக்கு. தமிழ்ப் படங்களை மற்ற ஊர்கள்ல, நாடுகள்ல பார்க்கிறாங்க. நெட்ஃபிளிக்ஸ்லயோ அமேசான்லயோ எல்லா ஊர்க்காரங்களையும் ஈர்க்கிற மாதிரி படத்துக்கு டைட்டில் தேவைப்படுது. இது தமிழ்ப் படமா இருந்தாலும் டைட்டில் அவங்களுக்கும் ரீச்சாகிடுச்சுன்னா, எல்லோரும் இந்தப் படத்தை ஓ.டி.டி-யில பார்ப்பாங்க. அதனாலதான், பொதுவான தலைப்பு வெச்சிருக்கோம்.”

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

`` ‘எனிமி’ எப்படி ஆரம்பமானது?’’

‘‘ ‘இருமுகன்’ முடிச்சவுடனே இந்தக் கதையைப் படமாக்கலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்கான வேலைகள்ல இருந்தபோது, ஷான் கருப்பசாமியுடைய ‘வெட்டாட்டம்’ புத்தகத்தைப் படிச்சேன். அது என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. உடனே, இதைப் பண்ணிடுவோம்னு ‘நோட்டா’ பண்ணினேன். ஆனாலும், எனக்குள்ள இந்தக் கதை இருந்துக்கிட்டே இருந்தது. கமர்ஷியல் படங்கள் இதுக்கு முன்னாடி பண்ணியிருந்தாலும், அதுல ஒரு கேரக்டர் டிராமாவும் எமோஷனும் இருக்கணும்னு நினைச்சேன். உடனே படம் ஆரம்பிக்காமல் ப்ரீ புரொடக்‌ஷனுக்குக் கொஞ்ச டைம் எடுத்துக்கிட்டு, எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஷான் கருப்பசாமியுடன் சேர்ந்து வொர்க் பண்ணினேன். சிங்கப்பூர்ல லிட்டில் இந்தியான்னு ஒரு இடம் இருக்கு. அந்தப் பகுதியில் தமிழர்கள்தான் வாழ்றாங்க. அங்க ஒரு கூட்டம் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கு. சிலர் ரொம்ப நல்லாவும் செட்டிலாகியிருக்காங்க. அவங்களைப் பத்தின கதைதான் இது. அங்க ஒரு இந்தியன் சூப்பர் மார்க்கெட் வெச்சிருக்கார், விஷால். அங்க இருக்கிற விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் என்ன தொடர்பு, எப்படி அவங்களுக்குள்ள பிரச்னை ஆரம்பமாகுதுன்னு கதை போகும். ஃபாரின்ல இருக்கிற தமிழர்கள் எல்லோரும் இந்தப் படத்தை கனெக்ட் பண்ணிக்குவாங்க. டீசருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு நினைச்சோம். ஆனா, இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

``ஆர்யா எப்படி உள்ள வந்தார்?’’

“ரொம்ப நாளாகவே விஷால் சாரும் நானும் ஒரு படம் பண்ணலாம்னு பேசியிருந்தோம். தயாரிப்பு நிறுவனத்திலும் ‘விஷால் கால்ஷீட் இருக்கு, பண்றீங்களா’ன்னு கேட்டாங்க. ‘சூப்பர். நாம ஏற்கெனவே, படம் பண்ணணும்னு பேசியிருந்தோம். இப்போ தானாவே அமையுது’ன்னு விஷாலை சந்திச்சுக் கதை சொன்னேன். ‘இது ரெண்டு கேரக்டர்களை வெச்சு நடக்கிற கதை. நீங்க இருக்கும்போது, ஆர்யா மாதிரியான நபர் இன்னொரு கேரக்டர்ல நடிச்சா சூப்பரா இருக்கும்’னு சொன்னேன். அவங்க ரெண்டு பேரும் எந்த அளவுக்கு நண்பர்கள்னு தெரியும். அதனால, அவரும் ரொம்ப ஹாப்பி. எனக்கும் ஆர்யா ரொம்ப வருஷமாவே பழக்கம். அப்புறம் ஆர்யாவை சந்திச்சுக் கதை சொன்னதும் அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்படியே ஆரம்பமானதுதான். ஆர்யாவுக்கு இந்தப் படம் வேற முகத்தைக் கொடுக்கும்.’’

``விஷால் ஹீரோ, ஆர்யா வில்லன்னு தகவல் வருதே... அப்படியா?’’

‘‘இது ஹீரோ - வில்லன் படமே இல்லை. ஒரு ஹீரோ - வில்லன் கதையா இருந்தால், ஹீரோவை வெச்சுதான் படம் இருக்கும். வில்லன் பிரச்னை கொடுத்துக்கிட்டே இருப்பான். அதை ஹீரோ எப்படி சமாளிச்சு வர்றார்ங்கிறதுதான் ரெகுலர் டெம்ப்ளேட். ஆனா, இதுல அப்படியிருக்காது. ரெண்டு பேருடைய கேரக்டருக்குமே ஆழமான பின்னணி இருக்கும். விஷால் - ஆர்யா ரெண்டு பேருக்குள்ளேயும் நெகட்டிவ் ஷேட் இருக்கும். இவருக்கு அவர் ‘எனிமி.’ அவருக்கு இவர் ‘எனிமி.’ இவங்களுக்குள்ள என்ன பிரச்னை, அதுக்கான காரணம் என்னன்னு கதை நகரும். ரெண்டு பேரும் ஆக்‌ஷன் சீன்ஸ்னா செம எனர்ஜி ஆகிடுவாங்க. டூப் போட விடமாட்டாங்க. போட்டி போட்டுக்கிட்டு சண்டை போடுவாங்க. ரவி வர்மா மாஸ்டர் ரியலிஸ்டிக்கா ஸ்டன்ட் கோரியோ பண்ணியிருக்கார்.’’

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

``சிங்கப்பூர்ல நடக்கிற கதைன்னு சொன்னீங்க. அங்க ஷூட் பண்ணிய அனுபவம் எப்படியிருந்தது?’’

‘‘2020 பிப்ரவரில ஷூட்டிங் போகலாம்னு இருந்தோம். மார்ச்ல லாக்டெளன் வந்திடுச்சு. இப்போ வரை, அங்க ஷூட்டிங் பண்ண முடியாத சூழல். அதனால, சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில செட் போட்டு எடுத்தோம். கார் சேஸிங் மாதிரியான ஆக்‌ஷன் சீன் எடுக்கிறதுக்காக துபாய் போனோம். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் ரொம்ப சூப்பரா செட் போட்டுக்கொடுத்தார். ஈ.வி.பி பிலிம் சிட்டிக்கு வேற ஷூட்டுக்கு லொகேஷன் பார்க்கிறதுக்காகப் போனேன். அப்போ இதுதான் ‘காலா’ படத்துடைய செட்னு காட்டினாங்க. அப்போ படம் ரிலீஸாகலை. அப்படியே தாராவி மாதிரியே இருந்தது. கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியலை. இந்த வொர்க்கைப் பார்த்துட்டுதான் அவரை அப்ரோச் பண்ணினேன். சிங்கப்பூருக்கு ஒரு டீமை அனுப்பி நிறைய ரெஃபரென்ஸ் எடுத்துக்கிட்டு வந்து அதை அப்படியே செட்டா போட்டார். அப்புறம் பேசும்போதுதான், நான் முருகதாஸ் சார்கிட்ட அசிஸ்டென்டா ‘ஏழாம் அறிவு’ல வேலை செய்யும்போது, அவர் ஆர்ட் டைரக்டர் ராஜீவன் சார்கிட்ட அசிஸ்டென்டா வேலை பார்த்திருக்கார்னு தெரியவந்தது.”

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

`` `எனிமி’ - ஸ்பெஷல்னு எதைச் சொல்லலாம்?’’

“ ‘இருமுகன்’ படத்துல என்னுடைய மேக்கிங் நல்லாருக்குன்னு ஒத்துக்கிட்டாங்க. ஆனா, கதையில இருக்கிற கேரக்டர்கள், எமோஷன்களைக் கையாண்டதுல சில குறைகளும் வந்தது. ‘அரிமா நம்பி’ த்ரில்லிங்கா இருந்த படம். ஆனா, மேக்கிங்கா பிரமாண்டமா இருக்காது. ‘எனிமி’ படத்தைப் பொறுத்தவரையில் ஒரு பிரமாண்டமான கமர்ஷியல் படத்துல நல்ல கதையும், கேரக்டர்களும் எமோஷன்களும் இருக்கணும்னு நினைச்சுப் பண்ணியிருக்கேன். குறிப்பா, எமோஷனுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வேலை செஞ்சிருக்கேன்.”

`` ‘நோட்டா’, `எனிமி’ன்னு தொடர்ந்து எழுத்தாளர்களுடன் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கீங்களே?’’

‘‘நான் முதல் இரண்டு படங்கள் பண்ணும்போது கதாசிரியர்களோட முக்கியத்துவம் தெரியலை. பிறகுதான் தெரிய ஆரம்பிச்சது. மலையாளம், தெலுங்கு, இந்தின்னு எல்லா ஊர் சினிமாவுலயும் கதாசிரியர்கள்தான் ஹைலைட். அப்படி நம்ம ஊர்ல நிறைய கதாசிரியர்கள் வெளியே தெரியணும்னு தேடிக்கிட்டிருந்தேன். முதல் படம் இயக்கும்போது, நம்மகிட்ட இருக்கிற கதையை வெச்சுதான் ஒப்பந்தம் பண்ணுவாங்க. அதனால, இயக்குநரே கதை, திரைக்கதை எழுதிப் பழகிடுச்சு. ஆனா, ஒரு சீனை மெருகேத்துறதுக்கு, எமோஷனைக் கடத்துறதுக்கு நிச்சயமா கதாசிரியர்கள் பங்கு அவசியம். ஒரு கதாசிரியரும் இயக்குநரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்குறது ரொம்ப ஆரோக்யமான விஷயமா பார்க்கிறேன். அது ‘எனிமி’ல நடந்திருக்கு. இந்தப் படத்துடைய ஆரம்பக்கட்டத்துல எஸ்.ரா சார் திரைக்கதையில உதவி பண்ணியிருக்கார். அப்புறம், ‘நோட்டா’ மூலமா ஷான் அறிமுகமாகி அவரும் இந்தப் படத்துக்கு நிறைய வொர்க் பண்ணியிருக்கார். அவர் ஒரு ஐ.டி கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டிருக்கார். நம்ம ஊர்ல எத்தனையோ எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் ஐ.டி கம்பெனிகள்ல ஃபாரின்ல வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. காரணம், அவங்களுக்கான இடத்தை சினிமாவுல நாம முழுமையா கொடுக்கலை. இந்த நிலை மாறுச்சுனா, நம்ம ஊர் சினிமாவும் மாறும். படங்களுடைய தரம் உயரும். அதனால, தொடர்ந்து கதாசிரியர்கள், எழுத்தாளர்கள்கூட சேர்ந்து வேலை செய்யணும்னு நினைக்கிறேன்.’’

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

``ரொம்ப நாள் கழிச்சு, மம்தா மோகன்தாஸை தமிழுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்களே?’’

“அந்தக் கேரக்டருக்கு ரொம்ப மெச்சூரான பர்ஃபாமன்ஸ் தேவைப்பட்டது. மலையாள சினிமாக்கள் அதிகம் பார்ப்பேன். அதுல அவங்களுடைய நடிப்பு இந்தக் கேரக்டருக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு. அவங்களும் கதை கேட்டவுடனே ஓகே சொல்லிட்டாங்க. ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க. மிருணாளினி, பிரகாஷ்ராஜ் சார், தம்பி ராமையா சார், கருணாகரன், ஜான் விஜய் இவங்க எல்லோரும் படத்துக்குப் பெரிய பலம்.”

விஷாலுக்கு ஆர்யா எனிமி... ஆர்யாவுக்கு விஷால் எனிமி! - இது புதுசா இருக்கு

``உங்க ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்கூட மறுபடியும் சேர்ந்திருக்கீங்க. அதே மாதிரி, இசையமைப்பாளர் தமன்கூட முதல்முறை வேலை செஞ்ச அனுபவம்?’’

“ ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’னு ஏற்கெனவே ரெண்டு படங்கள் ராஜசேகர் சார்கூட வொர்க் பண்ணினதனால, எங்களுக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி இருக்கு. படத்துல நிறைய நைட் எஃபெக்ட்ஸ் இருக்கு. அதுல எல்லாம் கலக்கியிருக்கார். தமன் எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். நிறைய தெலுங்குப் படங்கள்ல அவர் வொர்க் பண்ணிட்டு இருந்ததனால, தமிழ்ல பண்ணமுடியாமலே இருந்தது. ‘அலா வைகுந்தபுரமுலோ’ ஆல்பம்தான் பயங்கர ஹிட். விஷால் சாரும் தமன் பெயரைச் சொன்னார். உடனே, அவரை உள்ள கொண்டு வந்துட்டோம். லாக்டெளன் வந்ததனால, பல திட்டங்கள் மாறிடுச்சு. தமனுக்குப் பின்னணி இசை அமைக்க நேரமில்லை. தமன்கிட்ட சாம் சி.எஸ் பெயரை நான் சொன்னதும் அவரும் ஓகே சொல்லிட்டார். தமனும் சாமும் பேசிக்கிட்டாங்க. ரொம்ப நல்லா வந்திருக்கு. எடிட்டர் ரேமன்ட் பத்திச் சொல்லியே ஆகணும். ‘அருவி’யில இருந்தே அவர் வொர்க்கை நான் ஃபாலோ பண்றேன். இந்த டீசருக்கு இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்குன்னா, அதுக்கு அவருடைய கட்ஸ்தான் ரொம்ப முக்கியம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism