கட்டுரைகள்
Published:Updated:

பன்னிக்குட்டிக்குப் பிடிச்ச தேன் மிட்டாய்

கருணாகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாகரன்

பன்னியோட ஸ்டைல் பார்க்குற ஆடியன்ஸுக்கு கண்டிப்பா வித்தியாசமான ஃபீலைக் கொடுக்கும்.’’

படத்துக்குப் பேர் ‘பன்னிகுட்டி’யா என ஆச்சர்யத்துடன் பேசப்போனால் இன்னும் பல ஆச்சர்யங்களைக் கொடுக்கிறார் இயக்குநர் அனு சரண்.

கதிர் நடிப்பில் ‘கிருமி’ எனும் த்ரில்லர் கொடுத்தவர் இப்போது யோகி பாபு, கருணாகரன், லியோனி, சிங்கம் புலி, ராமர், தங்கதுரை என மிகப்பெரிய காமெடிப் பட்டாளத்தோடு ‘பன்னிகுட்டி’யை அழைத்துவருகிறார். ‘`ஒரு பன்னிக்குட்டியை ரெண்டு குரூப் தேடிக் கண்டுபிடிக்கணும். இந்த ஒன்லைனை வெச்சிக்கிட்டு கமர்ஷியலான, ஜாலியான திரைக்கதையை வடிவமைச்சிருக்கேன். ஒரு பெரும் பன்னிக்கூட்டத்தைப் படத்துல காட்டியிருக்கேன். எந்த இடத்துலயும் கிராஃபிக்ஸ் வேலைகள் பண்ணலை’’ என்கிறார் அனு சரண்.

‘கிருமி’ படத்தோட ஜானர்ல இருந்து மொத்தமா வேறுபடுத்திக் காட்டுற இன்னொரு படம் பண்ணணும்னு நினைச்சேன். அப்போதான் என் நண்பர் ரவிமுருகையா சொன்ன ‘பன்னிகுட்டி’ கதை ஞாபகம் வந்தது. நிறைய டிஸ்கஸ் பண்ணினோம். அடிப்படையில அவர் செம ஹியூமர் சென்ஸ் உள்ளவர். கிராமத்துல இருந்து வந்த நபரும்கூட. அவரும் நானும் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கோம். மண்வாசனையோடு இருக்கும். முக்கியமா, படத்தோட கதைக்களமா மதுரைப் பக்கத்துல இருக்கிற கிராமத்தைக் காட்டியிருக்கோம். கிட்டத்தட்ட ஆறுமாத கால இடைவெளியில நிறைய கிராமங்கள் சுத்தினோம். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப லொகேஷன் தேர்ந்தெடுத்து ஷூட் பண்ணினோம். இதுக்காக, நிறைய கள ஆய்வு பண்ணினேன். பன்னிக்குட்டி வளர்ப்பு குறைஞ்சிகிட்டே வருது. அதனால, ஒவ்வொரு ஊர்லயும் பன்னி வளர்க்குறவங்களைத் தேடி அலைஞ்சுதான் கண்டுபிடிச்சோம். தவிர, பன்னி களுக்குன்னு ஒரு லைஃப் ஸ்டைல் இருக்கும். இதையெல்லாம் அது பக்கத்துலயே இருந்து கவனிச்சோம். தவிர, பன்னி வளர்க்குறவங்ககிட்ட இதைப் பத்தி நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். ஷூட்டிங்ல பயன்படுத்துன பன்னிக்குட்டி நாங்க சொல்றது எல்லாத்தையும் கேட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்துச்சு. தேன்மிட்டாய்தான் விரும்பிச் சாப்பிடும். பன்னியோட ஸ்டைல் பார்க்குற ஆடியன்ஸுக்கு கண்டிப்பா வித்தியாசமான ஃபீலைக் கொடுக்கும்.’’

‘`யோகிபாபுவை எப்படி உள்ள கொண்டுவந்தீங்க?’’

“படத்தோட கதையை எழுதும்போதே கருணாகரன், யோகிபாபு ரெண்டு பேரும் மைண்ட்ல வந்துட்டாங்க. இதுல இவங்க ரெண்டு பேரும் வெறும் காமெடி மட்டுமல்லாம படத்தோட லீடு ரோலும் பண்ணியிருக்காங்க. அவங்களோட நடிப்பு பலத்தை யோகிபாபுவும், கருணாகரனும் காட்டியிருக்காங்க. கருணாவுக்கு லட்சுமி பிரியான்னு ஒரு புதுமுகம் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. யோகிபாபுவுக்கு ஜோடியா மலையாள நடிகை அஸானா நடிச்சிருக்காங்க.’’

பன்னிக்குட்டிக்குப் பிடிச்ச தேன் மிட்டாய்
பன்னிக்குட்டிக்குப் பிடிச்ச தேன் மிட்டாய்

`` ‘கிருமி’ படத்துல சார்லியோட கேரக்டர் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். அப்படி ‘பன்னிகுட்டி’ படத்துல யார் ஸ்பெஷல்?’’

‘`இந்தப் படத்துல கடைசியா கமிட்டானது லியோனி சார்தான். கிட்டத்தட்ட இருபத்து ரெண்டு வருஷத்துக்குப் பிறகு இந்தப் படத்துல நடிக்கிறார். இடையில நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் தவிர்த்துட்டார். லியோனி சார் கேரக்டர் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். படத்துல சாமியார் கேரக்டர்ல நடிச்சிருக்கார். கதை சொன்னவுடனே அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, எந்தத் தயக்கமும் இல்லாமல் படத்துக்குள்ள என்ட்ரி ஆனார். படத்துல முக்கியமான கேரக்டர் இவரோடதுதான்.’’

‘’எடிட்டர் டு இயக்குநர் பற்றி சொல்லுங்க?’’

‘`இன்ஜினீயரிங் முடிச்ச பையனா இருந்தாலும், சின்ன வயசுல இருந்து சினிமா ஆசை இருந்தது. அதனாலயே படிச்சி முடிச்சிட்டு நிறைய குறும்படங்கள் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். இதுக்காக, டைரக்‌ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே பண்ணவேண்டியதா இருந்தது. அதனால எல்லாத் துறை பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன். ‘கிருமி’ படத்தை இயக்குறப்போ ‘எடிட்டிங்கும் நீயே பண்ணிடு’னு அந்தப் படத்துக்கு என்னோடு கதை, திரைக்கதை எழுதிய ‘காக்கா முட்டை’ மணிகண்டன் சொன்னார். அதனாலதான் எடிட்டிங்கும் நானே பண்ணினேன். அது மட்டுமல்லாம தொடர்ந்து மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’ ‘ஆண்டவன் கட்டளை’ படங்களையும் நான்தான் எடிட் பண்ணினேன். இப்ப `பன்னிகுட்டி’யையும் எடிட் பண்ணியிருக்கேன்.’’