சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இது மூவர்ணப் படம்!”

ஸ்டெபி பட்டீல், அருண் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டெபி பட்டீல், அருண் விஜய்

டெல்லியும் சுற்றுப்புறமும்தான் கதைக்களம். இந்திய உளவுத்துறை அதிகாரியின் வழியே பின்தொடரும் படம். தீவிரவாதம்ன்றது ஒரு மதம், ஒரு நாடு சம்பந்தப்பட்ட விஷயமில்லை.

“இப்போ சினிமாமொழியில் ஒரு தேர்ச்சியையும் முன்னகர்வையும் பாக்கிறேன். இளைஞர்கள் ரொம்பவும் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அனுபவம் கிடைச்சிருக்கு. புதிய சிந்தனைகள் உருவாகியிருக்கு. இதையெல்லாம் வெச்சுக்கிட்டு இப்ப ‘பார்டர்’ படத்தோட மறுபடியும் வர்றேன். தேசபக்தி, தீவிரவாதம்னு வேறொரு கோணத்தில் படம் பயணம் போயிருக்கு. அடுக்கடுக்காக வந்து விழுகிற முடிச்சுகள். அவை அடுத்து அவிழ்கிற விதம்னு மக்கள் எதிர்பார்க்கிற விதத்தில் அமைஞ்சிருக்கு. நான் இயக்குநரா உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தையும் வச்சிருக்கேன். ‘பார்டர்’ல பாகிஸ்தான் தீவிரவாதம் தாண்டி கவனமாக எழுதிய உணர்வுகளும் நல்ல உளவியலும் இருக்கு” என நிதானித்துப் பேசுகிறார் இயக்குநர் அறிவழகன். ‘ஈரம்’ படத்தில் திறமையாக வெளிப்பட்டு வித்தை காட்டியவர்.

“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”

``முழுக்கவும் டெல்லியைச் சுற்றிக் கதை நடக்கும்போல இருக்கே..?’’

‘‘டெல்லியும் சுற்றுப்புறமும்தான் கதைக்களம். இந்திய உளவுத்துறை அதிகாரியின் வழியே பின்தொடரும் படம். தீவிரவாதம்ன்றது ஒரு மதம், ஒரு நாடு சம்பந்தப்பட்ட விஷயமில்லை. தன் வாதத்தை நிரூபிக்க துப்பாக்கியைக் கையில் எடுத்து, அதில் பாதிக்கப்படுறது மக்களாக இருக்கும் போது, எதுவாக இருந்தாலும் தப்புதான்னு தோணுது. ‘இது தீவிரவாதம் பற்றிய படமா, உளவுத்துறை பற்றிய படமா’ன்னு ஒரு வரியில் சொல்லிட முடியாது. ஒரு கதையைப் படமா எடுக்கும் முன், ‘இதை ஏன் படமா எடுக்கணும்... அதுவும் நான் ஏன் எடுக்கணும்’னு இந்த இரண்டையும்தான் யோசிச்சுப் பார்ப்பேன். அப்படி மனசுக்குள்ளே டபுள் டிக் ஆச்சுன்னா ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிடுவேன். அப்படித்தான் ‘பார்டர்’ வந்தது.’’

“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”

``உங்க ஒவ்வொரு படமும் வேற வேற திசையில் இருக்கும்...’’

‘‘அப்படித்தான் செய்யணும்னு விரும்புவேன். கதையில் நிறைய கவனம் செலுத்தி விவரம் சேகரிக்கிற விஷயங்கள் நடக்கும். ஒவ்வொரு படத்திற்கும் ஒரு டோன் ஃபிக்ஸ் பண்ணுவேன். இதுல தேசம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மூவர்ணக் கொடி வண்ணம்தான் படத்தோட டோன். காட்சிக்கு ஏற்றவாறு இந்த மூன்றில் ஒன்று டோனாக இருக்கும். தேசபக்தியை எடுத்துக்கிட்டு பிரசாரம் எதையும் கொண்டு வரலை. டெல்லியில் நடந்தாலும் கதையின் மொத்த இயக்கமும் நம்ம மனதிற்கு நெருக்கமாக நடக்கிற விஷயமாகக் கையாண்டிருக்கேன்.’’

“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”

``அருண் விஜய் எப்படிப்பட்ட உழைப்பைத் தந்திருக்கார்?’’

‘‘மத்திய உளவுத்துறை அதிகாரியா அப்படியே பொருந்தியிருக்கிறார் அருண் விஜய். ஆழமா படத்தின் உணர்வை உள்வாங்கினார். பல கட்டங்களில் அவரின் ஸ்டைல், வேகம், உழைப்பு, டைமிங் எல்லாத்தையும் பார்த்து வியந்திருக்கேன். பார்டரில் அவரைத்தவிர யாரும் நடித்திருக்க முடியுமான்னு இப்போது தோன்றுவது நிஜம். கதையில் இருக்கிற தீவிரமான உழைப்பையும் அக்கறையையும் புரிந்துகொண்டு படத்தை 45 நாள்களில் முடிக்க உதவினார். பெருந்தொற்றுக் காலத்தில் இப்படி படத்தை முடிப்பதெல்லாம் சாதாரண காரியம் இல்லை. இந்தப் படத்திலிருந்து அருண் விஜய் இன்னும் அடுத்த கட்டத்திற்குப் போகிற வாய்ப்பிருக்குன்னு நம்பறேன்.’’

“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”
“இது மூவர்ணப் படம்!”

``ரெஜினா, ஸ்டெபி பட்டீல்னு இரண்டு ஜோடிகள் இருக்காங்களே..?’’

‘‘ரெஜினாவும் உளவுத்துறை அதிகாரியாக வர்றாங்க. ஸ்டெபி ‘ஃபெமினா மிஸ் இண்டியா’வில் தேர்வாகி வந்த பொண்ணு. அருண் விஜய்யின் ஜோடி. என் படத்தில் பெண்களுக்குப் பெரிய இடம் உண்டு. நாம் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையும் ஜனங்களை பாதிக்குது. சாதாரணமான மக்கள் அதை வேதம் மாதிரி எடுத்துக்கிறாங்க. அதையும் கணக்கில் எடுத்துப் படம் செய்திருக்கேன். இந்த மாதிரி படத்திற்கு அப்படியே என்கூட ஓடி வருகிற ஒளிப்பதிவாளர் வேணும். பி.ராஜசேகர் அப்படி வந்தார். தெலுங்கில் வெளுத்து வாங்கிட்டு இப்போ தமிழுக்கு வந்திருக்கிறார். ‘விக்ரம் வேதா’ பார்த்திட்டு சாம் சி.எஸ். கூட வேலை பார்க்க ஆசைப்பட்டேன். முகம் கோணாமல் ஒத்துழைப்பு கொடுத்த தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவுக்கு நன்றி சொல்லணும். பெரும் நம்பிக்கையில் காத்திருக்கிறேன். பார்டரில் அதற்கான அடையாளமும் இருப்பதுதான் மகிழ்ச்சி.’’