Published:Updated:

``நயன்தாரா படம் வேற... மஞ்சு வாரியர் படம் வேற... ஆனா, ரெண்டுலயும் ஒரே பிரச்னை!'' - இயக்குநர் அறிவழகன்

அறிவழகன்

``சினிமால இருக்கிறவங்களுக்கு லாக்டெளன் காலத்துல இருக்கிறது பெரிய கஷ்டமா இருக்காதுனு நினைக்கிறேன். ஏன்னா, எல்லாம் சரியா இருந்தாலே ஸ்க்ரிப்ட் வேலைகள்ல ஆறு மாசம் ஆபீஸ் ரூம்லயே மூழ்கியிருப்பாங்க.

``நயன்தாரா படம் வேற... மஞ்சு வாரியர் படம் வேற... ஆனா, ரெண்டுலயும் ஒரே பிரச்னை!'' - இயக்குநர் அறிவழகன்

``சினிமால இருக்கிறவங்களுக்கு லாக்டெளன் காலத்துல இருக்கிறது பெரிய கஷ்டமா இருக்காதுனு நினைக்கிறேன். ஏன்னா, எல்லாம் சரியா இருந்தாலே ஸ்க்ரிப்ட் வேலைகள்ல ஆறு மாசம் ஆபீஸ் ரூம்லயே மூழ்கியிருப்பாங்க.

Published:Updated:
அறிவழகன்

ஆனா, இப்போ வெளியே எங்கே போனாலும் கடைகள் மூடியிருக்கிறதால ஒரு மாதிரியான ஃபீல் கொடுக்கும். இருந்தும், எல்லோரும் வீட்டுலேயே இருக்கிறது நல்லதுதானே. இப்போ வீட்டுல இருந்தும் என்னோட சினிமா வேலைகளைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்'' என்கிறார் `குற்றம் 23' இயக்குநர் அறிவழகன்.

``இயக்குநராகி 10 ஆண்டுகளுக்கும் மேல ஆகிடுச்சு... இந்தப் பயணம் எப்படியிருக்கு?''

``ரஜினி சார் ஒரு ஆடியோ ஃபங்க்ஷன்ல சொல்லியிருந்தார். `இவ்வளவு தூரம் தாண்டி வெற்றியை அடைஞ்சதுக்கு நேரமும் முக்கியம்'னு. அதேமாதிரி நான் நேரத்தை ரொம்பவே நம்புவேன். நம்ம வேலையை நாம செஞ்சுகிட்டு இருந்தா சரியான நேரத்துல எல்லாம் அமையும். முதல் படமான `ஈரம்' ஆடியன்ஸ் மத்தியில க்ளாசிக்கா இன்னும் இருக்கு. இதுவரைக்கும் நாலு படங்கள் வரைக்கும் டைரக்‌ட் பண்ணியிருக்கேன். 10 வருஷத்துல நாலு படங்கள்ங்கிறது குறைவுனு நினைக்கிறேன். டைரக்டரா ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சிட்டு அதை முழுமையாக்க எனக்கு சில நேரங்கள் தேவைப்படுது. இருந்தும், நேரம் சரியா வர்றப்போதான் சில வேலைகளும் கைகூடும்னு நம்புவேன். இதை லக்குனு சொன்னா அது தப்பு. லக் மேல எனக்கு பெரிய நம்பிக்கையில்ல.''

``நீங்க எடுத்த நாலு படங்கள்ல மூணு படங்கள் த்ரில்லர் ஜானர்... எப்பவும் த்ரில்லர்ல பெரிய ஆர்வமுண்டோ?"

அறிவழகன்
அறிவழகன்

``ஒரு படத்தை ஆடியன்ஸூக்கு விஷூவல் மற்றும் டெக்னிக்கலா கொடுக்கணும்னு நினைப்பேன். சொல்ல வர்ற கதைல டெக்னிக்கல் டூல்ஸ் எல்லாமே இருக்கணும். இந்த யுக்தியை காமெடி படத்துல பண்ண முடியாது. ஆனா, த்ரில்லர் ஜானர்ல பண்ணலாம். கதைசொல்லியை சரியா யூஸ் பண்ணி ஆடியன்ஸூக்கு கொண்டு போறதுக்கு த்ரில்லர் சரியா இருக்கும். டிவி, டி.வி.டி, ப்ரைவசி வர்றப்போவெல்லாம் சினிமா அழிஞ்சிரும்னு பேச்சு வரும். அதனால போட்டி போட்டுகிட்டுத்தான் நம்ம படம் பண்ண வேண்டியதா இருக்கு. தியேட்டர்ஸூக்கு ஆடியன்ஸை வரவைக்க த்ரில்லர் ஜானர் படங்களா டைரக்‌ட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.''

``வெப்சீரிஸ் எடுக்கிற ஐடியா இருக்கா?"

``நிச்சயமா, இருக்கு. ஒரு டைரக்டர் கன்டென்ட் ரீதியா பெரியளவுல ஆடியன்ஸை ரீச் பண்ணியிருக்கணும். இல்ல, பொருளாதரா ரீதியா ஸ்ட்ராங்கா இருக்கணும். ஒரே வரில சொல்லணும்னா சினிமால ஓடிக்கிட்டே இருக்கணும். எந்தவொரு இடைவெளியும் இல்லாம பார்த்துக்கணும். அதனால, வெப்சீரிஸ் இயக்குவேன். ஏற்கெனவே சொன்ன கதைகளைக்கூட டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல பண்ண கேட்டுக்கிட்டு இருக்காங்க. இதுக்கான பேஸிக்கான கிரவுண்ட் வொர்க் இப்போ போய்க்கிட்டு இருக்கு.

``இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர் நீங்கள். இன்னும் அவர்கூட தொடர்புல இருக்கீங்களா?

``பேசிக்கிட்டுத்தான் இருக்கோம். அவரோட ஒவ்வொரு படமும் ரிலீஸாகுறப்போ படங்கள் குறித்துப் பேசுவோம். அடுத்து, நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு விசாரிப்பார். சினிமா மற்றும் வாழ்க்கை ரெண்டுலயும் எனக்கு குரு ஷங்கர் சார்தான். பாலாஜி சக்திவேல், வசந்தபாலன்னு அவரோட முன்னாள் உதவி இயக்குநர்கள் எல்லோரும் அவரோட தொடர்புலதான் இருப்போம். ''

``ஷங்கரின் உதவியாளர்களில் அட்லியைத் தவிர மற்ற இயக்குநர்கள் பெரும்பாலும் கமர்ஷியல் சினிமா வட்டத்துக்குள் வராமலேயே இருக்கீங்களே... ஏன்?

ஷங்கர்
ஷங்கர்

``நானே எனக்குள்ள போட்டுக்கிட்ட வட்டம் இல்ல. ரெண்டு விதமான விஷயங்கள் எப்பவும் பார்ப்பேன். கதைக்கான விஷயத்தை எடுத்துக்கிட்டு போகணும்னு ஒண்ணு. அப்புறம், இந்தக் கதைக்கு பெரிய ஹீரோ தேவைப்படுவாங்களானு ஒண்ணு. தேவைப்படுற கதைக்கு பெரிய ஹீரோக்கள்கிட்ட அப்ரோச் பண்ணியிருக்கேன். சரியான நேரம் வர்றப்போ அது நடக்கும். ஒரு ஆர்ட்டிஸ்ட் வெச்சு படம் பண்றப்போ ஹீரோக்கான கதையா மட்டுமல்லாம ஹீரோ மற்றும் அவரோட ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தணும். தவிர, என்னை மட்டும் முன்நிலைப்படுத்துற மாதிரி படம் பண்ண பெரிய ஹீரோவை வெச்சுக்கிட்டு படம் எடுக்கணும்னு அவசியமில்ல. அஞ்சு பாட்டு, டான்ஸ் இருக்குற கதை மட்டுமே கமர்ஷியல் சினிமா இல்ல. எந்தக் கதையா இருந்தாலும் சுவாரஸ்யமான எலிமென்ட்ஸ் சேர்த்துக் கொடுத்து ஆடியன்ஸ் திருப்தி அடைஞ்சிட்டா அதுவும் கமர்ஷியல் ஹிட் வரிசையில வந்துரும். இதுதான் கமர்ஷியல் சினிமானு நான் நம்புறேன்."

``நயன்தாராவை லீட் ரோலில் நடிக்க வெச்சு ஒரு படம் நீங்க இயக்கப்போறதா பேச்சு இருந்ததே?"

நயன்தாரா
நயன்தாரா

``ஒரு மெயின் ஆர்ட்டிஸ்ட் படத்துல நடிக்குறப்போ, வெறுமனே ஆர்ட்டிஸ்ட்டுக்கான கதையா மட்டும் இருக்கக் கூடாதுனு நினைப்பேன். தவிர, கதையை மீறி எதுவும் நடந்துடக் கூடாதுனு கவனமா இருப்பேன். நயன்தாரா லீட் ரோலில் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சு பண்ண கதை. கதை கேட்டுட்டு, `நிச்சயமா இந்தப் படம் பண்ணலாம்'னு நயன்தாராவும் சொன்னாங்க. ஆனா, இந்தப் படத்துக்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்கல. அப்புறம், இவங்களும் தொடர்ந்து பிஸி ஆகிட்டாங்க. இமேஜ் வேல்யூ இருக்குற ஒரு ஆர்ட்டிஸ்ட் பண்ணாதான் இந்தக் கதை நல்லாயிருக்கும். தமிழ்ல நயன்தாரா மாதிரியான ஆர்ட்டிஸ்ட் பண்ணணும். இல்லைனா இந்தி சினிமாவுக்குப் பண்ணணும். எல்லாரும் பட்ஜெட் கால்குலேஷன்ல இருக்காங்க. இதைக் குறைசொல்ல முடியாது. யாரும் அறிவழகன், நயன்தாரா புராஜெக்ட்னு பார்க்க மாட்டேங்கிறாங்க.''

``நயன்தாராவுக்குப் பதிலாக மஞ்சுவாரியர்னு சில செய்திகள் வந்ததே?"

``மஞ்சு வாரியர் படம் முற்றிலும் வேற. இது ஒரு ஃபேமிலி த்ரில்லர் கதை. இன்னைக்கு இருக்கிற சமுதாய பிரச்னையை எடுத்துப் பேசுற கதையா இருக்கும். சில கதைகள் திரைக்கதை வடிவத்துல நல்லாயிருக்கும். இல்ல, கதையோட கரு வடிவத்துல நல்லாயிருக்கும். இதுல ரெண்டுமே நல்லாயிருக்கும். நானும் மஞ்சு வாரியரும் இந்தக் கதையைப் பண்றதுல உறுதியா இருக்கோம். இதுக்கும் சரியான தயாரிப்பாளர் வந்துட்டா ஷூட்டிங் போயிடுவோம். இந்தக் கதையைப் படமாக்கியிருந்தா `அசுரன்'க்கு முன்னாடி இது ரிலீஸாகியிருக்கும். இதைத் தமிழ் மற்றும் மலையாளம் ரெண்டு மொழியிலும் எடுக்கிற ஐடியா இருக்கு. ''

``அருண் விஜய் படம் எப்படியிருக்கு?"

அருண்விஜய்
அருண்விஜய்

`` `குற்றம் 23' படத்துக்குப் பிறகு, மூணு ஸ்க்ரிப்ட் இருந்தது. இதுல ஒண்ணு அருண்விஜய் புராஜெக்ட். கொஞ்சம் டைம் எடுத்து வரேன். காரணம், ஸ்க்ரிப்ட் மற்றும் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள்ல இருந்துட்டேன். லாக்டெளன் தொடங்குறதுக்கு முன்னாடி டெல்லில 20 நாள் ஷூட்டிங் முடிச்சிட்டோம். லாக்டெளன் இல்லனா இந்நேரம் ஷூட்டிங் முடிஞ்சிருக்கும். ஸ்பை த்ரில்லர் ஜானர். எமோஷனல் மற்றும் ஆக்‌ஷன் சீக்வென்ஸா படம் இருக்கும். ரெஜினா மற்றும் புதுமுகம் ஸ்டெஃபினு இரண்டு ஹீரோயின்ஸ். ஃபர்ஸ்ட் லுக் வர்றப்போ படத்தோட பெயரும் சேர்த்து அறிவிப்போம். சாம்.சி.எஸ் இசை அமைச்சிருக்கார்.''