Published:Updated:

"செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ்... இவங்க ஏன் இந்தப் படத்துல நடிக்கிறாங்க?!"- `சாணிக் காயிதம்' அருண்

சாணிக் காயிதம்
சாணிக் காயிதம்

''ரொம்ப முக்கியமான கேரக்டர்தான் படத்துல. இந்தப் படத்துல வர்ற மாதிரியான ரோல் இதுவரைக்கும் இவங்க பண்ணல. படத்துல பார்க்குறப்போ ரொம்ப சர்ப்ரைஸாயிருக்கும்" என்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

'சாணிக் காயிதம்' படத்தோட அறிவிப்பு வந்திருக்கு, உங்களைப் பற்றிய அறிமுகம் சொல்லுங்க?''

அருண் மாதேஸ்வரன்
அருண் மாதேஸ்வரன்

''தியாகராஜன் குமாரராஜா சார்கிட்ட 'ஆரண்ய காண்டம்' படத்துல உதவி இயக்குநரா இருந்தேன். அதுக்குப்பிறகு, 'இறுதிச்சுற்று' படத்துல டயலாக் போர்ஷன் மட்டும் எழுதுனேன். இப்போ, 'ராக்கி'னு ஒரு படத்தை வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா சாரை நடிக்க வெச்சு ஷூட்டிங் எடுத்து முடிச்சிட்டேன். படம் ரிலீஸூக்கு ரெடியா இருக்கு.''

'' 'ராக்கி' ரிலீஸ் பிளான் என்ன?''

ராக்கி
ராக்கி

''கொரோனா காரணமா லாக்டெளன் இல்லைனா படம் தியேட்டர்ல ரிலீஸாகியிருக்க வேண்டியது. இப்போ, நடக்குற சூழல் காரணமா தள்ளிப் போயிருச்சு. படத்தை தியேட்டர் ரிலீஸூக்கு ப்ளான் பண்ணிட்டிருக்கோம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''செல்வராகவனை நடிக்க வைக்கணும்கிற ஐடியா எப்படி வந்தது?''

சாணிக் காயிதம்
சாணிக் காயிதம்

'சாணிக் காயிதம்' படத்தோட ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டிருக்கு. படத்தோட ஷூட்டிங் இன்னும் தொடங்கல. அதனால, படத்தோட கதையை இப்போதைக்குச் சொல்ல முடியாது. படத்தோட ஸ்க்ரிப்ட் எழுதுறப்போ முக்கியமான கேரக்டரை செல்வராகவன் சார் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. என்னோட முந்தையப் படம் 'ராக்கி'ல கூட அவரை நடிக்க வைக்கலாம்னு மனசுல பட்டுச்சு. ரொம்ப ஆசையும்கூட. அப்போ முடியல, இப்போ கைகூடிருச்சு. படத்தோட ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சுட்டு புரொக்டஷன்ஸ் கம்பெனிக்கிட்ட பேசும் போது, அந்த முக்கியமான கேரக்டர்ல செல்வராகவன் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு சொன்னேன். புரொடக்‌ஷன் கம்பெனிக்கும் இது சரியா பட்டுச்சு. இருந்தும், 'செல்வா சார் நடிப்பாரா மாட்டாரா... இதுவரைக்கும் எந்தப் படத்துலயும் நடிச்சது இல்லையேனு ஒரு சந்தேகம் எல்லார் மனசுலயும் இருந்துச்சு. கதை சொல்லிப் பார்ப்போம்னு செல்வா சாரை மீட் பண்ணி கதையைச் சொன்னேன். சொல்லி முடிச்சவுடனே என்ன சொல்லப் போறார்னு கொஞ்சம் பதற்றமும் இருந்தது. நடிக்குறேன்னு பாசிட்டிவா பதில் சொன்னார். 'ராக்கி' படத்தோட ட்ரெய்லர் செல்வா சாருக்குப் பிடிச்சிருந்தது. அதனால, மேக்கிங் மேல நம்பிக்கையிருந்தது. அதுமட்டுமில்லாம, கதை கேட்குறபோதே கதையோட போக்கு இப்படித்தான் போகும்ற கற்பனையை மனசுக்குள்ள ஓட விட்டுட்டார். இதெல்லாம் மொத்தமா சேர்ந்து செல்வா சாரை ஓகே சொல்லவெச்சிடுச்சு.''

''கீர்த்தி சுரேஷ் கேரக்டர் எப்படியிருக்கும்?''

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

''இந்தப் படத்துல வர மாதிரியான கேரக்டரை இதுவரைக்கும் அவங்க பண்ணல. நிறைய ஆக்‌ஷன் சீன்ஸ் கீர்த்திக்கு இருக்கு. அதுக்கு முன்னாடி எல்லா கேரக்டர்ஸும் ரொம்ப சாஃப்ட்டானதா இருக்கும். அதனால, வித்தியாசமான ரோல்ல நம்ம படத்துல நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அவங்ககிட்ட கேட்கவும் கொஞ்சம் தயக்கமிருந்தது. இந்த மாதிரியான ஸ்டோரி பண்ணுவாங்களானு டவுட் இருந்துச்சு. ஆனா, கதை கேட்டு முடிச்சவுடனே ஓகே சொல்லிட்டாங்க. படத்துல நடிக்குற மத்த ஆர்டிஸ்ட் பற்றி சீக்கிரம் அறிவிப்பு வரும்.''

``விஜய் சேதுபதியை வெச்சு ஏன் அந்த போட்டோஷூட்?!'' - போட்டோகிராபர் ராமசந்திரன்

டெக்னிக்கல் டீம் பற்றி?

''படத்தோட மியூசிக் டைரக்டர் இன்னும் முடிவாகல. ஒளிப்பதிவு யாமினி யாகமூர்த்தி பண்றாங்க. 'சில்லுகருப்பட்டி' படத்துல சமுத்திரக்கனி மற்றும் சுனைனா போர்ஷனை இவங்கதான் ஷூட் பண்ணியிருந்தாங்க. லாக்டெளன் முடிஞ்சவுடனே படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவோம்.''

அடுத்த கட்டுரைக்கு