Published:Updated:

“வருஷத்துக்கு ஒரு தடவை குழந்தைகள் படம்!”

அருணாச்சலம் வைத்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
அருணாச்சலம் வைத்யநாதன்

ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன் குழந்தைகள் உலகத்திற்குள் தங்கு தடையில்லாமல் போய் நுழைந்து வந்திருக்கிறார்.

“வருஷத்துக்கு ஒரு தடவை குழந்தைகள் படம்!”

ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன் குழந்தைகள் உலகத்திற்குள் தங்கு தடையில்லாமல் போய் நுழைந்து வந்திருக்கிறார்.

Published:Updated:
அருணாச்சலம் வைத்யநாதன்
பிரீமியம் ஸ்டோரி
அருணாச்சலம் வைத்யநாதன்

“ரொம்ப நாளாகவே குழந்தைகள் சார்ந்து ஒரு படம் பண்ணணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். என் பிள்ளைகளோடு உட்கார்ந்து படம் பார்க்க காதல், மோதல், பைட்னு இல்லாம ஒரு படம்கூட இல்லை. குழந்தைகள் மனநிலையிலேயே இருந்து ஒரு கதை சொல்வதற்கான செயல்திட்டம்தான் இந்த ‘ஷாட் பூட் த்ரீ’ ” என்றபடி பேசத் தொடங்கினார் இயக்குநர் அருணாச்சலம் வைத்யநாதன். ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’, ‘பெருச்சாளி’ என வித்தியாசம் காட்டியவர்.

“வருஷத்துக்கு ஒரு தடவை குழந்தைகள் படம்!”

“குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு இப்போ பேசுபொருளா இருக்கு. ஆனால் முன்னாடியே அதைவெச்சு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் பண்ணினேன். அரசியலில் இங்கே இருக்கிற துரோகம், சாமர்த்தியம், காய் நகர்த்தல் எல்லாமே அமெரிக்க அரசியலுக்கும் பொருந்தி வருதுன்னு மலையாளத்தில் ‘பெருச்சாளி’ எடுத்தேன். த்ரில்லர் ஜானரில், சீரியல் கில்லர் வகையில் ரொம்பவும் ஆழமா இறங்கி வேலை பார்த்திருக்கேன். என்னவோ இந்தத் தடவை குழந்தைகளை முன்வைத்துச் செய்யணும்னு தோணுச்சு. நான்கு குழந்தைகள் தாங்கள் தொலைத்த விஷயத்தைத் தேடி பெற்றோர்களுக்குத் தெரியாமல் வெளியே போகும்போது அவங்க கண்டடைகிற உண்மைகளை இந்தப்படம் பேசுது. இதுபோல நிறைய குழந்தைகள் படங்கள் வரவேண்டும்.”

“வருஷத்துக்கு ஒரு தடவை குழந்தைகள் படம்!”

“குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கிறது சிரமம் ஆச்சே!”

“அதற்கான ஏற்பாடுகள், தேர்வுக்குத்தான் அதிக நாள்கள் ஆச்சு. பூவையார், பிரணதி, கைலாஷ், வேதாந்த்னு நான்கு பேர்கள். இதில் பூவையார் மட்டும் இதுக்கு முன்னாடி பிரபலம் ஆகிட்டார். எனக்கு இந்த நான்கு பேரும் இந்த சினிமாவில் நடிச்சிருக்கிறது அவ்வளவு இயல்பாக இருந்தது. குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியதும், குழந்தைகளிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருக்கு. இது குழந்தைகளை வைத்து எடுத்து, பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம். நாம் குழந்தைகளை மாற்ற நினைக்கிறோம். ஆனால் இங்க மாற வேண்டியது பெரியவர்களான நாமதான். குழந்தைகள் சரியாக இருக்க, நாம் நம்மளையே அறிவாளிகளா நினைச்சுக்கிட்டு அவர்களின் இலக்கை அடையவிடாமல் தடுக்கிறோம். குழந்தைகளின் உலகத்தை அப்படியே எடுத்து வச்சிருக்கேன். அதைத் திரைக்கதையாக்கியது மட்டுமே என் வேலை. அதை அருமையாக உணர்ந்து குழந்தைகள் நடிச்சுக் கொடுத்தாங்க. சிரிச்சுக்கிட்டுப் பார்க்கும்போதே சிந்திக்கவும் வைக்கும்.”

“வருஷத்துக்கு ஒரு தடவை குழந்தைகள் படம்!”

“சினேகாவும் வெங்கட்பிரபுவும் இருக்காங்க...”

“ ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ காலத்தில் இருந்தே சினேகா பழக்கம். அவர்களிடம் இந்தக் கதையைச் சொன்னபோது, இப்படியே தொடர்ந்து வாய்ப்புகள் வரும்னு நினைச்சாங்க. ஸ்கிரிப்டின் பத்துப் பக்கங்களை வாசிச்சதும், நானே இதைச் செய்றேன்னு சொல்லிட்டாங்க. ‘பிரமாதமான நடிப்பு. விடவே கூடாது’ன்னு சில கேரக்டர்கள் நம்மளைக் கூப்பிடும். அப்படியிருக்கு இந்த ரோல்னு சினேகா சொன்னது சந்தோஷமா இருந்தது. வெங்கட்பிரபு நண்பர்தான். ‘எவ்வளவு நாள் வேணும்னு சொல்லுங்க... நான் வந்திடுறேன்’னு சொல்லிட்டு வந்திட்டார். அருமையான தகப்பனாக நடிச்சிருக்கார். மிகவும் முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு வருகிறார்.”

ராஜேஷ் வைத்யா
ராஜேஷ் வைத்யா
“வருஷத்துக்கு ஒரு தடவை குழந்தைகள் படம்!”

“முதல் தடவை ராஜேஷ் வைத்யா மியூசிக் பண்றாரே!”

“அவர்கிட்டே தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். நேரம் இருந்தால் அவர் கச்சேரிகளுக்கு முதல் வரிசையில் முதல் ஆளா உட்கார்ந்துடுவேன். நீங்க தனியாக ட்யூன் போட்டு வாசிக்கிறதெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கும்போதே ‘எங்க, வாய்ப்பு கொடுங்க பார்க்கலாம்’னு கேட்டுட்டார். சந்தோஷமாயிட்டேன். அருமையான பாடல்கள், பின்னணி இசையிலும் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கிட்டார். ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன் குழந்தைகள் உலகத்திற்குள் தங்கு தடையில்லாமல் போய் நுழைந்து வந்திருக்கிறார். குழந்தைகள் படம் என்பதால் செலவைக் குறைத்தோ, சுருக்கமாகவோ செய்துவிடவில்லை. அதற்கான தேவை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான படத்தை வருஷம் ஒரு தடவையாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எனக்குள் வந்துவிட்டது. அதற்கான நல்ல ஆரம்பம்தான் ‘ஷாட் பூட் த்ரீ.’ ”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism