Published:Updated:

`` `மாஸ்டர்'ல `லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா'ன்னு நான் ஏன் எழுதினேன்னா..?'' - அருண்ராஜா காமராஜ்

அருண்ராஜா காமராஜ்
அருண்ராஜா காமராஜ்

`கன்னக்குழி அழகே’ என்கிற ஆல்பம் பாடலை உருவாக்கியிருக்கும் அருண்ராஜா காமராஜிடம் அந்தப் பாடல் குறித்து பேசினோம்...

நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ், `கனா’ படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். `கனா’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கப்போகும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தால், `கன்னக்குழி அழகே’ என்கிற ஆல்பம் பாடலின் அறிவிப்பு வருகிறது. இந்தப் பாடல் குறித்து அவரிடம் பேசினேன்.

`` `கன்னக்குழி அழகே’ ஐடியா எப்போது வந்தது..?"

கன்னக்குழி அழகே
கன்னக்குழி அழகே

``இண்டிபெண்டன்ட் பாடல் பண்ணணும்கிற ஐடியா ரொம்ப வருஷமா இருக்கு. நான் பாடலாசிரியரா ஆனதே தனியா பாடல்கள் பண்ணலாம்னுதான். அப்படித்தான் நான் பாடகரும் ஆனேன். ஆனால், அதுக்கப்புறம் ரொம்ப வருஷமா தனியா பாடல்கள் பண்ணவே முடியாம இருந்துச்சு. இப்போ அதுக்கான ஒரு வாய்ப்பு வந்ததும், விட்டுடக்கூடாதுனு `ஏ.ஆர்.கே எண்டர்டெயின்மென்ட்’னு ஒரு சேனல் ஆரம்பிச்சு, ஒரு பாட்டும் பண்ணிட்டேன். முதலில் இந்தப் பாட்டை வீடியோவாவும் ஷூட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால், லாக்டெளன்ல இருக்கிறதுனால, இப்போதைக்கு லிரிக் வீடியோவா மட்டும் பண்ணிட்டோம். இதுக்கு எப்படி ரெஸ்பான்ஸ் கிடைக்குதுனு பார்த்துட்டு லாக்டெளன் முடிஞ்சதும் வீடியோவும் பண்ணலாம்னு பிளான் இருக்கு. `புரூஸ் லீ’ படத்தோட ஒரு பாடலுக்கும் இப்போ பிரபுதேவா சாரோட `பஹிரா’ படத்துக்கும் இசையமைச்சிருக்குற கணேசன் சேகர்தான் இந்தப் பாட்டையும் கம்போஸ் பண்ணியிருக்கார். இவரும் இண்டிபெண்டன்ட்டா நிறைய பாடல்கள் பண்ணியிருக்கார். நானும் இவரும் சேர்ந்தே விகடன் நம்பிக்கை விருது நிகழ்ச்சிக்காக `நம்ம மெரினா’னு ஒரு பாட்டும் பண்ணோம்.

இந்தப் பாடலையும் ரொம்ப நல்லா பண்ணிக்கொடுத்திருக்கார். நான் இந்தப் பாட்டு எழுதி, இயக்க அதை விஜய் யேசுதாஸும் சவனீ ரவீந்திராவும் பாடியிருக்காங்க.’’

``நீங்க எழுதிப் பாடுற பாடல்கள் எல்லாமே மாஸ் பாடல்களாகவும் தீம் பாடல்களாகவும் இருக்கும். ரொமான்டிக் பாடல்கள் எழுதிப் பாடணும்னு ஆசை இல்லையா?"

``சினிமால ஒரு ஹீரோ ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் பண்ணும்போது அதுக்கான பாடல்களை எழுதுறோம்; அதே ஹீரோ ரொமான்ஸ் பண்ணும்போதும் நான் பாடல்கள் எழுதணும்னு ஆசை இருக்கு. இதுவரைக்கும் நான் பாடியிருக்கிற மாஸ் பாடல்கள் எல்லாமே திரையில் பார்க்கும்போது, அந்த மொமென்ட்டுக்கு எனர்ஜி கொடுக்கும். ஆனால், சில வருஷங்கள் கழிச்சும் நான் எழுதி, பாடிய பாடல்களைத் தேடி கேட்பாங்களானு தெரியலை. ஏன்னா, ரொமான்ட்டிக் மெலோடிகள்தான் காலம் தாண்டியும் பேசப்படும். அப்படிப்பட்ட மெலோடி பாடல்களிலும் என் பங்கு இருக்கணும்னு ரொம்பவே ஆசைப்படுறேன். அப்படி சினிமாவில் `பீட்சா 2’ படத்துல `பூமியில் வானவில்’, `காக்கி சட்டை’ படத்துல `ஐயம் ஸோ கூல்’, `கனா’ படத்துல `ஒத்தையடி பாதையில’, `கொம்புவச்ச சிங்கம்டா’ படத்துல `பேசாத மொழியே’னு சில பாடல்களும் எழுதியிருக்கேன். என்னால காதல் பாடல்களும் எழுத முடியும்னு ஒரு நம்பிக்கை கொடுக்கிறதுக்குத்தான் இந்த இண்டிபெண்டன்ட் பாடலையும் எழுதியிருக்கேன்.’’

``நீங்க, சிவகார்த்திகேயன், `கனா’ இசையமைப்பாளர் திபு எல்லாரும் கல்லூரியில் படிக்கும்போதே, இந்த இண்டிபெண்டன்ட் பாடல்கள் பண்ணும்கிற ஐடியா இருந்ததா?"

music director dhibu, arunraja, sivakarthikeyan
music director dhibu, arunraja, sivakarthikeyan

``நான், சிவா, திபு எல்லாருமே காலேஜ்லதான் பழக்கமானோம். நாங்க மூணு பேருமே ஒரே டிபார்ட்மென்ட்தான். காலேஜ்ல திபு டேபிளில் தாளம் போட ட்யூனுக்கு ஏத்தமாதிரி நான் பல பாடல்கள் எழுதியிருக்கேன். வரிகளை எப்படி ட்யூனுக்குள்ள உட்கார வைக்கிறதுனு நான் கத்துக்கிட்டதே அப்போதான். பல பாடல்கள் அப்படி உருவாக்கியிருக்கோம். அதையெல்லாம் இண்டிபெண்டன்ட் ஆல்பமா ரிலீஸ் பண்ணலாமானு இப்போதும் யோசிப்பேன். நான், சிவா, திபுனு எங்க மூணு பேரையும் ஒண்ணா சேர்த்ததே கல்சுரல்ஸும் கிரிக்கெட்டும்தான். திபு கிரிக்கெட் விளையாட வர மாட்டான். சிவாவும் நானும்தான் கிரிக்கெட் அதிகமா கிரிக்கெட் விளையாடுவோம். அதுதான் எங்களுக்குள்ள மிகப்பெரிய புரிதலை ஏற்படுத்துச்சு. சிவா முதல் ஓவர் போடுவான்; நான் ரெண்டாவது ஓவர் போடுவேன். சிவா அஞ்சு விக்கெட் எடுப்பான்; நானும் அஞ்சு விக்கெட் எடுப்பேன். அவன் எப்படி விளையாடுவான்னு எனக்கு தெரியும்; நான் எப்படி விளையாடுவேன்னு அவனுக்கு நல்லா தெரியும். அதுமட்டுமல்லாமல் சிவாதான் எங்க டீமோட கேப்டன். அதனாலேயே நாங்க அதிகமா பேசிப்போம். எங்க நட்பு உருவானதே கிரிக்கெட் பிட்ச்லதான்.’’

``நடிகரா பிஸியா இருக்குற சமயத்திலும் கிரிக்கெட்டுக்காக சிவகார்த்திகேயன் நேரம் ஒதுக்குகிறாரா?"

arunraja cricket team
arunraja cricket team

``இப்போ கொஞ்சம் குறைஞ்சிடுச்சு; போன வருஷம் வரைக்கும் தொடர்ந்து விளையாடிக்கிட்டுத்தான் இருந்தோம். நைட்லதான் விளையாடுவோம். எனக்கு கிரிக்கெட்னா, அதை கிரிக்கெட் பந்தில்தான் விளையாடணும்னு நினைப்பேன். ஆனால், சிவாவுக்கு தினமும் ஷூட்டிங் இருக்கும்; அடி ஏதாவது பட்டுச்சுன்னா ஷூட்டிங் போறதுல சிக்கல் ஆகிடும்னு டென்னிஸ் பந்தில்தான் விளையாடுவோம். டென்னிஸ் பந்தில் விளையாடுறது ரொம்ப கஷ்டம். ஆனால், சிவா டென்னிஸ் பந்தில் சூப்பரா விளையாடுவான்.’’

`` `குட்டி ஸ்டோரி’ பாட்டுக்கான ரெஸ்பான்ஸ் இப்போதும் வந்துட்டு இருக்கே?"

oru kutti katha
oru kutti katha

`` `Life is very short nanba’னு எவன்டா எழுதுனான்னு இந்த கொரோனா சமயத்தில் மீம்ஸ் பார்த்தேன். ஒரு என்டர்டெய்ன்மென்ட்டா நம்மளையும் சேர்த்துக்கிறாங்கனு சந்தோஷமாத்தான் இருந்துச்சு. நம்ம வொர்க் மூலமா மக்கள் மனசுல நாம இருக்கணும்னுதான் எல்லா கலைஞர்களுமே ஆசைப்படுவாங்க. அது நடக்கும்போது சந்தோஷம்தான். அதுமட்டுமல்லாம `குட்டி ஸ்டோரி’ பாட்டு மூலமா பாசிட்டிவிட்டியைத்தான் சொல்லியிருப்போம். லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, சந்தோஷமா இருனு சொல்லியிருக்கோம். இது எல்லா காலத்துக்கும் தேவையான ஒண்ணு. அதுவும் இந்த கொரோனா சமயத்தில் ரொம்பவே தேவைப்படுற விஷயமா பாசிட்டிவிட்டி இருக்கு. லாக்டெளனுக்கு அப்புறம்தான் நாம ரொம்பவே பாசிட்டிவா இருக்கணும்.’’

`` க\பெ ரணசிங்கம் படத்தில் நீங்க நடிச்சிருக்கிற கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்லுங்க..?"

arunraja in ka pae ranasingam movie
arunraja in ka pae ranasingam movie

``இந்தப் படத்தில் நடிச்சது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்துச்சுனு சொல்லலாம். ஏன்னா, விருமாண்டி அண்ணனோட முதல் படம். சண்முகம் முத்துசாமி அண்ணன் எழுதியிருக்கார். `கனா' படம் மூலமா எனக்கு கிடைச்ச ஒரு நல்ல ஃபிரெண்ட் ஐஸ்வர்யா ராஜேஷ்; அவங்களோட படம் இது. இப்படி பல நெருக்கமான விஷயங்கள் இந்தப் படத்தில் இருந்ததனால, ஷூட்டிங் ஸ்பாட்டே ஒரு ஃபேமிலி பங்ஷன் மாதிரி இருக்கும். அதுமட்டுமல்லாமல், இதுவரைக்கும் நான் நடிச்ச படங்களில் காமெடி கதாபாத்திரங்கள்தான் அதிகமா பண்ணியிருக்கேன். ஆனால், இந்தப் படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிச்சிருக்கேன். அது எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்குனு ஆடியன்ஸ்தான் பார்த்துட்டு சொல்லணும்.

அடுத்த கட்டுரைக்கு