Published:Updated:

"அனுராக் படம் பார்க்க ஆசைப்படுறார்னு டாப்ஸிதான் சொன்னாங்க!" - 'கேம் ஓவர்' அஸ்வின் சரவணன்

சனா

டாப்ஸி நடிப்பில் விரைவில் வெளிவரப்போகும் திரைப்படம் 'கேம் ஓவர்'. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. 'மாயா' 'இறவாக்காலம்' படங்களை எடுத்த அஸ்வின் சரவணன் இப்படத்தின் இயக்குநராக வேலைப் பார்த்திருக்கிறார். படம் குறித்து இவரிடம் பேசினேன். .

அஸ்வின் சரவணன்
அஸ்வின் சரவணன்

`கேம் ஓவர்' கதை எப்படி உருவாச்சு?

டப்ஸ்ஸி பன்னு
டப்ஸ்ஸி பன்னு

`இறவாக்காலம்' படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட மூன்று வருடம் நடந்தது. `பாகுபலி' மாதிரியான ஒரு பெரிய படத்துக்கு மூன்று வருடம் ஷூட்டிங் நடந்தா ஓகே. ஆனா, இந்தப் படத்துக்கு இது பெரிய விஷயம். இது எனக்குப் பெரிய வருத்தமா இருந்தது. சீக்கிரம் முடிக்கிற மாதிரி ஒரு படம் பண்ண நினைச்சேன். ஒரு வீடு, கம்மியான கேரக்டர்கள்... இப்படித்தான் `கேம் ஓவர்' கதை யோசிச்சேன். டாப்ஸி ஹீரோயினா கமிட் ஆனதுக்குப் பிறகு, இந்தப் படம் இந்திய அளவில் பிசினஸ் ஆகுற படமா மாறிடுச்சு. நூறு நிமிடத்துக்கு ஒரு படம்னு யோசிச்சேன். இப்போ, ஒன்றரை மணிநேரப் படமா வந்திருக்கு.

``டாப்ஸி எப்படி கமிட் ஆனாங்க?"

``டாப்ஸி நடிச்ச `பிங்க்' படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். `இறவாக்காலம்' படத்துக்கு அவங்ககிட்ட கதையைச் சொன்னேன். சில காரணங்களால அந்தப் படத்துல அவங்க நடிக்க முடியாம போச்சு. 'கேம் ஓவர்' கதைக்கு இந்திய அளவுல தெரிஞ்ச ஒரு முகம் தேவைப்பட்டப்போ, டாப்ஸி ஞாபகத்துக்கு வந்தாங்க. ஏன்னா, இது எல்லா மக்களும் எமோஷனலா கனெக்ட் பண்ணிக்கிற கதை. டாப்ஸிக்கும் பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொல்லிட்டாங்க."

``டெக்னிக்கல் டீம்?"

கேம் ஓவர்
கேம் ஓவர்

`` `இன்று நேற்று நாளை' ஒளிப்பதிவாளர் வசந்த் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அற்புதமான ஒளிப்பதிவாளர். `மாயா', `இறவாக்காலம்' படங்களின் இசையமைப்பாளர் ரான் யோஹன், இந்தப் படத்துக்கும் இசையமைச்சிருக்கார். ஜானருக்கு ஏற்ற மாதிரி இசையைக் கொடுக்கக்கூடியவர். `துருவங்கள் பதினாறு', `நரகாசூரன்' படங்களின் கலை இயக்குநர் சிவசங்கர் சார் பண்ணியிருக்கார். படத்துல வர்ற வீட்டை அழகாக வடிவைமைச்சிருக்கார். ரிச்சர்ட் கவின், ராஜா கிருஷ்ணன் இப்படிப் படத்தோட டெக்னிக்கல் டீம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்திருக்காங்க. இந்திய அளவில் இந்த சினிமாவைக் கொண்டுபோறதுக்கு என்னைவிட அதிகமா இவங்க மெனக்கெட்டாங்கன்னு சொல்லலாம். படத்துல நடிகை வினோதினி முக்கியமான ரோலில் நடிச்சிருக்காங்க. வேலைக்காரியா இந்தப் படத்துல வருவாங்க."

``படத்தை மூன்று மொழிகளில் சேர்த்து எடுக்க என்ன காரணம்?"

``தமிழ் மற்றும் தெலுங்கில் பை-லிங்குவெலா எடுக்கலாம்னுதான் முடிவு பண்ணியிருந்தேன். ஏன்னா, கதையோட தன்மை இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்துல எடுக்க முடியும்னு தோணுச்சு. எனக்கு இந்தியில் படத்தை டப்பிங் பண்ண விருப்பமில்லை. பாலிவுட்ல படத்தைப் புதுசாவே எடுக்கலாம்னுதான் இருந்தேன். ஆனா, தயாரிப்பு நிறுவனம்தான், `இது பாலிவுட் படமாவும் இருக்கு'னு சொல்லி, டப்பிங் பண்ணச் சொன்னாங்க."

``டாப்ஸி இந்தப் படத்துக்காக எவ்வளவு மெனக்கெட்டாங்க?

``வேலையில் ரொம்ப சரியா, துல்லியமா இருக்கிற நடிகை, டாப்ஸி. இந்தியில் பெரிய இயக்குநர்கள், ஹீரோக்கள் படத்தில் நடிச்சிருக்காங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா, தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பார். ரொம்ப எமோஷனலான காட்சியை எடுக்கிறதா இருந்தாலும், அவங்ககிட்ட காட்சியை விளக்கிட்டா போதும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திடுவாங்க. அவங்ககூட வொர்க் பண்றப்போ, என் வேலைப்பளு ரொம்பவே குறைஞ்சது. தீபா வெங்கட், டாப்ஸிக்கு டப்பிங் பேசியிருக்காங்க. படம் பார்த்துட்டு, அவங்களைக் கூப்பிட்டுப் பாராட்டினாங்க, டாப்ஸி. இந்தியில் டாப்ஸியே குரல் கொடுத்திருக்காங்க."

டாப்ஸி
டாப்ஸி

டாப்ஸி இந்தப் படத்துக்காக எவ்வளவு மெனக்கெட்டாங்க?

``வேலையில் ரொம்ப சரியா, துல்லியமா இருக்கிற நடிகை, டாப்ஸி. இந்தியில் பெரிய இயக்குநர்கள், ஹீரோக்கள் படத்தில் நடிச்சிருக்காங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா, தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பார். ரொம்ப எமோஷனலான காட்சியை எடுக்கிறதா இருந்தாலும், அவங்ககிட்ட காட்சியை விளக்கிட்டா போதும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திடுவாங்க. அவங்ககூட வொர்க் பண்றப்போ, என் வேலைப்பளு ரொம்பவே குறைஞ்சது. தீபா வெங்கட், டாப்ஸிக்கு டப்பிங் பேசியிருக்காங்க. படம் பார்த்துட்டு, அவங்களைக் கூப்பிட்டுப் பாராட்டினாங்க, டாப்ஸி. இந்தியில் டாப்ஸியே குரல் கொடுத்திருக்காங்க."

``இந்தப் படத்தை பாலிவுட்டில் ரிலீஸ் பண்றார், அனுராக் காஷ்யப். அவருடனான நட்பு பற்றிச் சொல்லுங்க?"

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

``நான் அனுராக்கின் தீவிர ரசிகன். டாப்ஸி ஒருநாள் போன் பண்ணி, `படத்தைப் பார்க்க ஆசைப்படுறார், அனுராக்'னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமாவும், அதேசமயம் பயமாவும் இருந்தது. தவிர, 70% மட்டுமே முழுமை அடைஞ்சிருந்த படத்தை அவருக்குக் காட்ட எனக்கு மனசே இல்லை. ஆனா, அவர் பார்க்கணும்னு சொல்லிட்டார். தவிர, பிடிச்சிருந்தா அவரே ரிலீஸ் பண்றதாகவும் சொல்லியிருந்தார். மும்பையில் இருக்கிற ஒரு தியேட்டரில் `கேம் ஓவ'ரைப் பார்த்தார். அவரை அப்போதான் முதல்முறையா சந்திச்சுப் பேசினேன். படம் பார்த்துட்டு, ரொம்ப சந்தோஷப்பட்டார். ரொம்ப நேரம் படம் பற்றிப் பேசினார். கண்டிப்பா எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்; எல்லோரும் பார்க்கணும்னு சொன்னார். ``இந்த 'கேம் ஓவர்' கேம் சேஞ்சரா இருக்கும்"னு சொன்னார்.  

`இறவாக்காலம்' ரிலீஸ் ஏன் லேட் ஆகுது?" 

``ரொம்ப ரொம்ப நியாயமான காரணங்களாலதான், படத்தோட ரிலீஸ் தள்ளிப்போகுது. அதனால, யாரையும் குறைசொல்ல முடியாது. சில படங்கள் சில நேரங்களில் ரிலீஸ் ஆனாதான் நல்லாயிருக்கும். அதை நான் நம்புறேன். இந்தத் தாமதம் படத்துல வொர்க் பண்ணவங்களால நடக்கல. துரதிர்ஷ்டவசமான விஷயம்தான். இந்த வருடத்துக்குள்ளே படம் வந்திடும்." 

இறவாக்காலம்
இறவாக்காலம்

உங்க படங்கள் எல்லாம் த்ரில்லர் ஜானரில் இருக்க என்ன காரணம்?

த்ரில்லர் ஜானர் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் இந்த ஜானரில் படம் எடுக்கிறேன். எந்தப் படமா இருந்தாலும், அதைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கிட்டு, புரிஞ்சுக்கிட்டு படம் எடுக்கணும்னு நினைப்பேன். சுருக்கமா சொன்னா, நான் எடுக்கிற படம் எனக்கு போர் அடிக்காம இருக்கணும்.