துல்கர் சல்மானின் முதல் தமிழ்ப்படமான `வாயை மூடி பேசவும்’ ரிலீஸாகி ஆறு வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தப் படத்தின் கதை உருவானதில் இருந்து படம் ரிலீஸான பிறகு வந்த பாராட்டுகள் வரைக்கும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள அதன் இயக்குநர் பாலாஜி மோகனிடம் பேசினோம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS`வாயை மூடி பேசவும்’ படத்தின் கதையை எப்போது எழுதினீர்கள்?

`` `காதலில் சொதப்புவது எப்படி’ படம் ரிலீஸானதுக்கு அப்பறம் `ஒய் நாட்’ தயாரிப்புலே இன்னொரு படம் பண்றதுக்கு கேட்டாங்க. நானும் மூணு, நாலு ஐடியாக்கள் கொடுத்திருந்தேன். அந்த ஐடியாக்களில் `வாயை மூடி பேசவும்’ படத்தோட ஐடியாவும், சில கமர்ஷியல் படங்களுக்கான ஐடியாக்களும் இருந்துச்சு. அதுல, `வாயை மூடி பேசவும்’ கதையை செலக்ட் பண்ணார் `ஒய் நாட்’ சஷி சார். பொதுவா தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் படம் பண்ணலாம்னு நினைப்பாங்க; ஆனா, `வாயை மூடி பேசவும்’ மாதிரியான ஒரு எக்ஸ்ப்ரிமென்டல் கதையைப் படமா பண்ணலாம்னு சஷி சார் என்னை என்கரேஜ் பண்ணார். ஏன்னா, எனக்கே இந்தப் படத்தை என்னோட ரெண்டாவது படமா பண்றதுக்கு பயமா இருந்துச்சு. இன்னும் ரெண்டு, மூணு படங்கள் பண்ணிட்டு இதைப் பண்ணலாம்னு இருந்தேன். அவர் கொடுத்த நம்பிகையில்தான், அந்த ஐடியாவை ஸ்கிரிப்ட்டா மாற்றினேன்.’’
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
துல்கர் சல்மானை எப்படி தமிழ் சினிமாவுக்கு அழைச்சிட்டு வந்தீங்க?

``படத்தோட கதையை ஃபைனல் பண்ணதுக்கு அப்பறம் தமிழ்ல சில ஹீரோக்களிடமும் தெலுங்குல சில ஹீரோக்களிடமும் சொன்னேன். ஆனா, அவங்க எல்லாரும் இந்தக் கதையில நடிக்கத் தயங்கினாங்க. இந்தப் படத்தோட அவுட் புட் எப்படி வரும்; படத்தில் இடைவேளைக்குப் பிறகு வசனமே இல்லையே, இந்தக் கதையில நடிச்சா சரியா இருக்குமானு எல்லாரும் யோசிச்சாங்க. அப்புறம் துல்கர் சல்மான்தான் இந்தக் கதை மேல நம்பிக்கை வெச்சு, `நடிக்கிறேன்’னு சொன்னார். துல்கருக்கு இந்தக் கதையில் இருந்த எக்ஸ்ப்ரிமென்தான் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதுமட்டுமல்லாமல் இந்தக் கதை தமிழ், மலையாளம்னு ரெண்டு மொழிகளில் எடுக்குறதுக்கும் தகுந்ததா இருந்ததாலும் துல்கர் தமிழ்ல அறிமுகமாகுறதுக்கு இந்தப் படம் சரியா இருக்கும்னு அவர் நினைச்சதாலும் இந்தக் கதைக்கு ஓகே சொன்னார்.’’
துல்கரோட முதல் தமிழ்ப்படத்தை எந்தளவுக்கு என்ஜாய் பண்ணி நடிச்சார்?

"துல்கர் ரெண்டு விஷயத்தை ரொம்பவே என்ஜாய் பண்ணி நடிச்சார். ஒண்ணு, இந்தப் படத்துக்கு முன்னாடி அவர் பெருசா எந்தக் காமெடி படத்துலேயும் நடிச்சதில்லை. இந்தப் படத்தில் பேசி காமெடி பண்றது; பேசாம காமெடி பண்றது; முக பாவனைகளில் காமெடி பண்றது; பாடி லாங்குவேஜ்ல காமெடி பண்றதுனு காமெடியிலேயே பல வெர்ஷன்கள் இருந்துச்சு. அதையெல்லாம் ரொம்பவே என்ஜாய் பண்ணார். இன்னொண்ணு, அவர் ரொம்ப வருஷமா சென்னையில இருந்தாலும்; இதுதான் அவர் நடிக்கிற முதல் தமிழ்ப்படம். அதுனால, எந்த சீன் எடுத்தாலும் முதலில் தமிழ் வெர்ஷன்லதான் ஷூட் பண்ணுவோம். அவரும் அதுக்குத் தயாரா இருப்பார். அதுக்கப்பறம்தான் மலையாள வெர்ஷனை எடுப்போம். இதுவும் அவருக்கு புதுசா இருந்தனால, ரொம்பவே ஆர்வமா இருந்தார்.’’
இந்தப் படத்துல நீங்க நடிச்சிருந்த `செய்தி வாசிப்பாளர்’ கேரக்டருக்கு வேற எந்த நடிகரையாவது நடிக்க வைக்கலாம்னு ப்ளான் பண்ணியிருந்தீங்களா?

"இந்தக் கேரக்டருக்கு பெருசா எந்த ப்ளானும் பண்ணலை. படத்தோட முழு ஷூட்டிங்கையும் முடிச்சதுக்கு அப்பறம், இந்த போர்ஷனை ஒரே நாள்ல ஸ்டூடியோவுக்குள்ள எடுத்துட்டோம். நான்தான் இந்தக் கேரக்டரில் நடிக்கப்போறேன்னு முடிவானதுக்கு அப்புறம் வசனங்களை எனக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்கள் பண்ணிக்கிட்டேன். செய்தி வாசிப்பாளர்கள் அந்தச் செய்தியை வாசிக்கிறதுக்கு முன்னாடியும் வாசிச்சதுக்கு அப்புறமும் என்ன பண்ணுவாங்கனு காமெடியா சில விஷயங்கள் சேர்த்தேன். அதுவும் வொர்க் அவுட் ஆகிடுச்சு.’’
இந்தப் படத்தோட சில காட்சிகள் இப்போவரைக்கும் மீம் டெம்ப்ளேட்களாக வலம் வந்திட்டு இருக்கு. அதையெல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கும்?
"என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் படமே ஒரு மீம்தான். இந்தப் படத்தோட ஐடியாவில் இருந்து நான் நடிச்சிருந்த கேரக்டர் கொடுக்கிற காமெடி கவுன்ட்டர் வரைக்கும் எல்லாமே ஒரு மீம் மாதிரிதான் இருக்கும். படம் ரிலீஸான சமயத்தில் இந்த மீம் கலாசாரம் பெரிசா இல்லை. மீம்ஸ் டிரெண்டிங் வந்ததுக்கு அப்பறம், பல விஷயங்களுக்கு இந்தப் படத்தோட காமெடிகளை யூஸ் பண்ணாங்க. இதையெல்லாம் தாண்டி கொரோனாவோடு இந்தப் படம் ரொம்பவே சம்பந்தப்பட்டிருக்கு. படத்துல வந்த நிறைய விஷயங்கள், இப்ப நம்ம நாட்டுல நடந்திட்டிருக்கு. ஆள்கள் இருமினதும் அவங்க மேல மருந்து அடிக்கிறது, மாஸ்க் போட்டுக்கிட்டு வெளில வர்றது, வைரஸ் வந்ததுக்கு அப்புறம் ஊரை லாக் டௌன் பண்றதுனு பல விஷயங்கள் கொரோனா வைரஸால இப்ப நாம பண்ணிட்டு இருக்கிற விஷயங்களோடு ஒத்துப்போகுது. இந்தக் கதையை எழுதும் போதே, வெளிநாடுகளில் வைரஸ் வந்தப்ப அந்தச் சூழலை எப்படி கையாண்டாங்கனு தெரிஞ்சுக்கிட்டு, அதையும் ஸ்கிரிப்ட்டில் சேர்த்தேன்.’’
இந்தப் படம் ரிலீஸானதுக்கு அப்பறம் கிடைச்ச பாராட்டுகளில் மறக்க முடியாதது எது?

"' `வாயை மூடி பேசவும்’ படத்தை ஒரு திரைப்பட விழாவில் திரையிட்டாங்க. இந்தப் படத்தில் சைலன்ஸ் போர்ஷன் அதிகமா இருந்தனால, `பேசும் படம்’னு தன்னோட முழுப் படத்தையும் சைலன்ஸ் படமா எடுத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் சாரை ஜட்ஜ் பண்றதுக்காக வர வெச்சிருந்தாங்க. அவரும் படம் பார்த்திட்டு, `சைனல்ஸை ரொம்பவே நல்லா படமாக்கியிருக்கீங்க. எடிட்டிங் மூலமாகவும் காமெடி பண்ணியிருக்கீங்க’னு பாராட்டினார். இந்தச் சம்பவம் படத்தோட ரிலீஸ் சமயத்துல நடந்துச்சு. போன வருடம் அவரைப் பார்த்தப்போதும், இந்தப் படத்தைப் பற்றி என்கிட்ட பேசினார். ஆறு வருஷமாகியும் அவர் இந்தப் படத்தை மறக்காமல் வைத்திருந்துதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.’’