கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

"முதல் கதையைப் படமாக்கவே முடியலை!”

பாலாஜி சக்திவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலாஜி சக்திவேல்

சமூகத்துல இருக்குறதை பிரதிபலிப்பதுதான் சினிமா!

‘`என் முதல் படம் ஹீரோ சப்ஜெக்ட் படம் கிடையாது. நாலு பொண்ணுங்களை மையமா கொண்ட கதை. அதைத்தான் முதல் படமா எடுக்கணும்னு தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சார்கிட்ட போனேன். அவர் கதையைக் கேட்டு, ‘ஷங்கர்கிட்ட இருந்து வர்றீங்க. ஆக்‌ஷன் படம்தான் எதிர்பார்த்தேன்’னு சொன்னார்.

உடனே ஆக்‌ஷன் ஹீரோக்கான கதையை எழுத ஆரம்பிச்சிட்டேன். அதுதான் ‘சாமுராய்.’ ஆனால் படத்தை ஆர்.பி.செளத்ரி சார் தயாரிக்கல’’ - சினிமாவில் முதல் இன்னிங்ஸ் அனுபவம் சொல்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

பாலாஜி சக்திவேல்
பாலாஜி சக்திவேல்

‘`அடுத்து தயாரிப்பாளர் ‘ஆலயம்’ ஸ்ரீராம் சார்கிட்ட சொன்னேன். அவருக்குக் கதை பிடிச்சிருந்தது, உடனே, ‘பண்ணிரலாம்’னு சொல்லிட்டார். ‘காதலன்’ படத்துல பிரபுதேவாவுக்கு விக்ரம் சார்தான் டப்பிங் கொடுத்திருப்பார். ஆனா, விக்ரம் சாருக்கும் எனக்கும் பழக்கமில்ல. ‘சாமுராய்’ படத்தோட கதையைச் சொல்லப் போனப்போதான் முதல் முறையாக நேர்ல பார்த்தேன். ‘சேது’ ரிலீஸாகி தியேட்டர்களில் பெரிய கொண்டாட்டமா இருந்த நேரம். அவரும் ஆக்‌ஷன் படம் பண்ண ஆர்வமா இருந்து நிறைய இயக்குநர்கள்கிட்ட கதை கேட்டிருக்கார். ஆனா, அவருக்கு எந்தக் கதையும் பிடிக்கல. என் கதையை முழுசா கேட்டு, ரொம்பப்பிடிச்சிப்போக நடிக்க ஓகே சொல்லிட்டார்.’’

‘‘சாமுராய் எப்படி உருவாச்சு?’’

‘`பெரிய பட்ஜெட் கிடைச்சதால பிரமாண்டமாவே பண்ணினோம். ஹீரோயின் அனிதா ஹஸானந்தானியை ஒரு விழால பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சிப்போக அவங்களை நடிக்கக்கூப்பிட்டுட்டு வந்துட்டேன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர். படத்துல மூணு கேமராமேன் வேலை பார்த்தாங்க. சந்தோஷ் சிவன் சாரின் உதவியாளர் சேது ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினேன். அப்புறம், ‘மூங்கில் காடுகளே’ பாட்டுக்காக மட்டும் விஜய் மில்டன் வொர்க் பண்ணிக் கொடுத்தார். இந்தப் பாடலின்போதுதான் மில்டனுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்புறம், ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ பணிபுரிந்தோம். அப்புறம் வினோத்னு ஒரு கேமராமேன் குறிப்பிட்ட போர்ஷனை மட்டும் படமாக்கினார். ஷங்கர் சாரோட ஸ்கூல்ல இருந்து வந்த பையன்றதுனால என்மேல பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. சமூகத்துல இருக்குறதை பிரதிபலிப்பதுதான் சினிமான்னு நம்புறவன் நான். அதனால முதல் படத்துலயே சமூகம் சார்ந்த கருத்தைச் சொல்லியிருப்பேன்.

சாமுராய்  படம்
சாமுராய் படம்

ஆனா, படம் நான் எதிர்பார்த்த மாதிரி போகல. ஷங்கர் சார்கூட ரிலீஸானதுக்கு அப்புறம்தான் படம் பார்த்தார். ‘திரைக்கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமா அமைச்சிருக்கணும்’னு சொன்னார். எல்லாத் தரப்பு மக்களையும் போய்ச் சேர்ற மாதிரி ‘சாமுராய்’ படம் பண்ணலையேங்கிற வருத்தம் இன்னமும் எனக்குள்ள இருக்கு.’’

காதல்  படம்
காதல் படம்

‘`முதல் படம் வெற்றிப்படமா அமையலைன்னாலும் உங்க ரெண்டாவது படமான ‘காதல்’ சூப்பர் ஹிட். அந்த வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’

‘`முதல் படம் சுமாராப் போனா ரெண்டாவது பட வாய்ப்பெல்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். ‘இவர் பெருசா பட்ஜெட் இழுத்து விட்டுருவார். இவரை நம்பிப் பணம் போட முடியாது’ன்னு வேற என்னைப்பத்தி ஒரு நெகட்டிவ் டாக்கும் பரவ ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, விக்ரம் சாருக்கு என்னோட உழைப்பு தெரியும். அவர் என்கூட சேர்ந்து அடுத்த படம் பண்ண ரெடியா இருந்தார். வளசரவாக்கத்துல எனக்கு ஒரு ஆபீஸ் ரெடி பண்ணிக்கொடுத்து அவருக்காக ஒரு கதை ரெடி பண்ணச் சொல்லியிருந்தார். அந்த ஆபீஸுக்குள்ள உட்கார்ந்து தினமும் கதை எழுத யோசிப்பேன். ஆனா, ஒண்ணுமே தோணாது. ஏதேதோ எழுதிப்பார்த்தும் எதுவும் சரியா செட் ஆகல. “டீக்கடையில நின்னுட்டு இருந்தப்போ ஒரு ஸ்கூல் படிக்குற பொண்ணும், மெக்கானிக் பையனும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ, முன்னாடி நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. அதாவது, ட்ரெயின்ல மதுரை டூ சென்னை வந்துக்கிட்டு இருந்தப்போ நான் சந்திச்ச ஒரு தம்பதி சொன்ன நிஜக் கதையுடன் டீக்கடையில் நான் பார்த்த ஜோடியை இணைச்சு ஒரு கதையை உருவாக்கினேன். அதான் ‘காதல்’ கதை! உடனே, விக்ரம் சார்கிட்ட ஓடினேன். அவர் அப்ப ‘சாமி’ படத்தோட வேலைகளில் இருந்தார். ஆபீஸ் சாவியை அவர் கைல கொடுத்துட்டு, ‘எனக்கு ஒரு கதை தோணியிருக்கு சார். ஆனா, அதுல நீங்க நடிக்க முடியாது. வேறொரு கதைல உங்களை சந்திக்குறேன்’னு சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பிட்டேன்.

"முதல் கதையைப் படமாக்கவே முடியலை!”

விக்ரமும் என்னைப் புரிஞ்சிக்கிட்டார். அதுக்கு அப்புறம் நான் எடுத்த ‘காதல்’ ஹிட் ஆனதும் விக்ரம் சார் போன் பன்ணி, ‘வாழ்த்துகள் சார். நீங்க ஜெயிப்பீங்கன்னு தெரியும்’னு பாராட்டினார். ‘காதல்’ படத்தோட க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றச் சொல்லி எத்தனையோ தயாரிப்பாளர்கள் சொன்னாங்க. கேட்காம பிடிவாதமா மறுத்தேன். படமும் ஹிட் ஆச்சு. அதே மாதிரி நான் என்னோட முதல் படமா நாலு பெண்கள் கதையைப் படமா எடுத்திருந்தா அந்தப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா அதை இப்போ வரைக்கும் எடுக்க முடியலை.’’