Published:Updated:

`வாசிப்பு பழக்கம் குறைஞ்சிடுச்சு; யூடியூப் பக்கம் வந்துட்டேன்!’- பாரதிராஜா

‘என் இனிய தமிழ் மக்களே’ என்கிற பெயரில் யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார், பாரதிராஜா.

Bharathiraaja
Bharathiraaja

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், யூடியூப் சேனல்கள் ஆரம்பிக்கும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார், பாரதிராஜா.

பாரதிராஜாவின் டிரேட்மார்க்கான, ‘என் இனிய தமிழ் மக்களே’ என்கிற வசனத்தையே தனது யூடியூப் சேனலுக்குப் பெயராக வைத்திருக்கிறார். தான் கடந்து வந்த பாதை, பட்ட கஷ்டங்கள், சினிமாவின் மறுபக்கம், தனது படங்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள் எனப் பலவற்றை, இந்த சேனல் மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்த இருக்கிறாராம். இந்த விஷயங்களை எல்லாம் முதலில் புத்தகமாக எழுதும் நோக்கத்தில்தான் இருந்தாராம். ’வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டதால், யூடியூப் பக்கம் வந்திருக்கிறேன்’ என்கிறார் பாரதிராஜா.

Manobala, Bharathiraaja
Manobala, Bharathiraaja

சமீபத்தில், இதே போன்றதொரு யூடியூப் சேனலை, இயக்குநரும் நடிகருமான மனோபாலா ஆரம்பித்து, அதில் பல வீடியோக்களைப் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாரும், தான் சந்திக்கும் சமூகப் போராளிகளைப் பேட்டி எடுத்து, அவரது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார். 

தற்போதைய டிரெண்ட் என்ன; மக்கள் எங்கு நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து யூடியூப்பிலும், அவர்களை நேரடியாகவே தொடர்புகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இதே பாணியில் யூடியூப் சேனலைக் கலக்கவிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.