அத்தியாயம் 1
Published:Updated:

ஸ்ரீதேவி பற்றி பாரதிராஜா!

Director Bharathiraja talks about Actress Sridevi
பிரீமியம் ஸ்டோரி
News
Director Bharathiraja talks about Actress Sridevi

``நான் காமிரா வழியாக அதிகம் கவனிப்பது அவரது கண்களைத்தான்!

பிறவிக் கலைஞர்கள் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. யாரும் பிறக்கும்போதே நடிகனாக இருப்பதில்லை. அவர்களின் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி முக்கியம். இதைத் தொடர்ந்து சிந்தனை வளர்ச்சி வளர்கிறது. அவர்களுள் ஒரு கற்பனை உலகம் சிருஷ்டிக்கப்படுகிறது. அதில் சஞ்சரிப்பவர்கள் தாங்கள் விரும்பும் துறையில் மணக்கிறார்கள். மணப்பதற்கு உழைக்க வேண்டும். நான் அறிமுகம் செய்தவர்களில் பெரும்பகுதியினர், சினிமா அறிவு இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். எனது அறிமுகத்துக்குப் பின் உழைத்தவர்கள் நின்று நிலைத்தார்கள். மற்றவர்கள் தோல்வியைத் தாங்களே தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

Director Bharathiraja talks about Actress Sridevi
Director Bharathiraja talks about Actress Sridevi

ஸ்ரீதேவி :எனது `பதினாறு வயதினிலே' படத்தில் நடிப்பதற்கு முன் ஸ்ரீதேவி சில மலையாளப் படங்களிலும், பாலசந்தர் அவர்களின் `மூன்று முடிச்சு' படத்திலும் பிரதான வேடங்களில் நடித்திருந்தாலும், பரபரப்பான அறிமுகமாக அமைந்தது `பதினாறு வயதினிலே'யில்தான். இந்தப் படம் வெளிவந்த சில காலம் அவ `மயிலு' என்றுதான் அழைக்கப்பட்டார்!இந்தப் படத்தில் முதலில் ரோஜாரமணி தான் நடிப்பதாக இருந்தது. அது மட்டுமல்ல; கமல், ரஜினி இருவருக்கும் பதிலாகப் புதுமுகங்கள்தான் நடிப்பதாக இருந்தார்கள். அதில் நான் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் உறுதியாக இருந்தாலும், ``இந்தப் படத்தில் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று டெக்னீஷியன்கள் புதிதாக இருந்தால் பரவாயில்லை. நடிப்பவர்களும் புதிதாக இருந்தால் எப்படி?" என்று ஃபைனான்ஷியர்கள் தயங்கினார்கள். அதனால் மக்களுக்கு அறிமுகமானவர்களையே நடிக்கச் செய்தோம். கமல், ரஜினிக்கு ஈடாக அதே சமயம் முதிர்ச்சியான தோற்றம் ஸ்ரீதேவியிடம் இருந்ததால் அவரையே இறுதியில் தேர்ந்தெடுத்தோம். ஸ்ரீதேவியிடமுள்ள பெரிய ப்ளஸ் பாயிண்ட் அவரது அழகிய கண்கள். நான் காமிரா வழியாக அதிகம் கவனிப்பது அவரது கண்களைத்தான்.

Director Bharathiraja talks about Actress Sridevi
Director Bharathiraja talks about Actress Sridevi

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரு விஷயம் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு நடந்தது மொத்தமே பன்னிரண்டு நாட்கள்தான். அந்த அளவுக்குக் கலைஞர்களின் ஒத்துழைப்பு இருந்தது.

`பதினாறு வயதினிலே'-யில் ஸ்ரீதேவியைப் புதிய பரிணாமத்தில் நடிக்கச் செய்தோம்.

`சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இன்னொரு பரிணாமம்.

திறமை வாய்ந்த இந்த நடிகையை இப்போது கிளாமர் வேடங்களில் மட்டுமே அதிகம் நடிக்க வைப்பது வேதனையான விஷயம்.

- பாரதிராஜா

(24.08.1986 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)