Published:Updated:

பாரதிராஜாவுக்கு ரெண்டு பிறந்தநாள் இருக்கு; ஏன்?- #HBDBharathiraja

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்; பல விருதுகளை வாங்கியவர், பாரதிராஜா. இவருக்கு இன்று பிறந்தநாள். இவருடன் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருக்கும் சுரேஷ், பாரதிராஜாவுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்.

''பாரதிராஜா சார்கூட கிட்டத்தட்ட 10 வருடங்களாக இருக்கேன். அவரோட 'தெக்கத்திப் பொண்ணு'ங்கிற சீரியல் அப்போ வேலைக்குச் சேர்ந்தேன். நான் முதன்முதலா அவரைப் பார்த்தப்போ அவர் எப்படியிருந்தாரோ அப்படிதான் இன்னைக்கு வரைக்கும் இருக்கார். அவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் மாறவே இல்லை. இப்போதும்கூட அவர் படங்களை இயக்குறார். 'ஓம்' படத்தோட ஷூட்டிங் துருக்கியில் நடந்தது. குளிர் நடுங்கும் அந்த இடத்திலும் காலையில் 5 மணிக்கு ஸ்பாட்டில் ரெடியா இருப்பார்.

Suresh, Bharathiraja
Suresh, Bharathiraja

யூனிட்டு வர்றதுக்கு தாமதம் ஆகும். கேமரா வர்றதுக்கு தாமதம் ஆகும். ஆனா, யார் இருந்தாலும் இல்லைன்னாலும் சாரை சரியான நேரத்துல ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கலாம். முதல்நாள் ஷூட்டிங் முடிஞ்சவுடனே அடுத்தநாள் ஷூட்டிங்கில் என்ன நடக்கும்னு இரவு நேரத்துல உதவி இயக்குநர்களோடு டிஸ்கஷன் நடக்கும். அதைச் சரியா துல்லியமா நோட் பண்ணி வெச்சிக்குவார். இரவு தூங்குறதுக்கு 1 மணியானாலும் காலையில் சரியா 4 மணிக்கு எந்திருச்சுருவார்.

எந்த ஊரில் இருந்தாலும் காலையில் ஒரு மணிநேரம் வாக்கிங் போக தவற மாட்டார். முக்கியமா, அவர் செய்தித்தாள்களை எந்தளவுக்கு படிக்கிறாரோ, அதே அளவுக்கு சமூகவலைதளங்களில் வரக்கூடிய செய்திகள், மீம்ஸ்கள் எல்லாத்தையும் பார்த்திருவார். சமூகவலைதளங்களில் ரொம்ப ஆக்ட்டிவா இருக்கக்கூடியவர். யூடியூபில் வர்ற சினிமா, அரசியல் கருத்துகளையும் பார்க்கத் தவற மாட்டார்.

Suresh, Bharathiraja
Suresh, Bharathiraja

முக்கியமா, தினமும் அவர் படம் பார்க்காமல் இருக்கவே மாட்டார். மதியம் ஒரு படம் பார்த்துட்டுதான் சாப்பிடுவார். அதே மாதிரி முடிந்தவரை இரவு நேரங்களிலும் படம் பாத்திடுவார். எந்த மொழி படமா இருந்தாலும் விரும்பி பார்ப்பார். குறிப்பா இளையராஜா சாரும் பாரதிராஜா சாரும் இப்போ பேசாமல் இருந்தாலும், அவரைப் பற்றி நிறைய நினைவுகளைத் தினமும் பேசுவார். இருவரும் சேர்ந்து வேலை பாக்குற நாளும் ரொம்ப தூரத்துல இல்லைனு நினைக்குறேன்.

 
பாரதிராஜா படங்களின் பளிச் வசனங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரதிராஜா சார்க்கு இரண்டு பிறந்தநாள் இருக்கு. ஜூலை 17-ம் தேதி அவரோட முதல் படம் '16 வயதினிலே' சென்சார் ஆச்சு. அதனால அந்த நாளை தன்னோட பிறந்தநாளா நினைச்சு கொண்டாடுவார். ஆகஸ்ட் 23 அவரோட நெருக்கமான சிலருக்கு மட்டுமே தெரிந்த அவருடைய பிறந்தநாள்.
சுரேஷ்

இந்த நாளுல அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்த பாக்யராஜ் சார் வாழ்த்து சொல்ல மறக்கவே மாட்டார். அதே மாதிரி ஆர்.சுந்தர்ராஜன் சாரும் எல்லா வருடமும் முதல் ஆளாக வாழ்த்துகளை சொல்லிருவார். அதே மாதிரிதான் வைரமுத்து சாரும். ரெண்டு பேரும் அடிக்கடி போனில் பேசுவாங்க. சாருக்கு சாமி கும்பிடுகின்ற பழக்கம் அதிகமில்லை. தினமும் காலையில் அரைமணிநேரம் அவரோட அம்மா, அப்பா போட்டோவை சாமியா நினைச்சு கும்பிடுவார். யார் வந்தாலும் சினிமா பத்திதான் பேசுவார். அவரால சினிமாவை விட்டுட்டு இருக்கவே முடியாது.

Suresh, Bharathiraja
Suresh, Bharathiraja

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் பாரதிராஜா சார். அவரால் ஈழத்தில் நடந்த போரை மட்டும் எப்போதும் மறக்கவே முடியாது. அடிக்கடி போரில் நடந்த விஷயங்களைச் சொல்லி வருத்தப்படுவார். பாரதிராஜா அவரோட தலைவரா ஒருவரை மட்டும்தான் நினைச்சிருக்கார்; அது பிரபாகரன் மட்டும்தான். அவரோட மரணம் பாரதிராஜா சாரை ரொம்பவே பாதிச்சிருச்சு. தமிழர்கள்தாம் தமிழனை ஆளணும்னு நினைக்குற மனிதர்தான் பாரதிராஜா சார்'' என்றார் சுரேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு