Published:Updated:

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"

துல்கர் சல்மான்
பிரீமியம் ஸ்டோரி
துல்கர் சல்மான்

மதன் கார்க்கி இந்தக் கதையைக் கொண்டு வந்தார். அவர் அதை அழகாக விவரிக்கத் தொடங்கியதுமே என் மனசுக்குள் ஒரே ஒரு மனிதர் வந்தார். அவர், துல்கர் சல்மான் தான்.

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"

மதன் கார்க்கி இந்தக் கதையைக் கொண்டு வந்தார். அவர் அதை அழகாக விவரிக்கத் தொடங்கியதுமே என் மனசுக்குள் ஒரே ஒரு மனிதர் வந்தார். அவர், துல்கர் சல்மான் தான்.

Published:Updated:
துல்கர் சல்மான்
பிரீமியம் ஸ்டோரி
துல்கர் சல்மான்

'இந்தியாவின் நம்பர் ஒன் டான்ஸ் மாஸ்டர்’ என கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிருந்தாவை கொண்டாடுகிறார்கள். டான்ஸ் மாஸ்டரிலிருந்து இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் அவர்.

“இருபது வருஷம் ஆகிடுச்சு. நீங்க சொல்லித்தான் தெரியுது. பழசையெல்லாம் நான் திரும்பிப் பார்க்கிறதே இல்லை. எப்பவும் முன் நோக்கித்தான் போய்க்கிட்டிருக்கணும்னு நினைப்பேன். அப்படியே திரும்பிப் பார்த்தாலும், நான் பண்ணுன தவறுகளையெல்லாம் திரும்பச் செய்ய கூடாது. அவற்றிலிருந்து என்ன கத்துக்கிட்டேன்னுதான் பார்ப்பேன். ஆனாலும் இந்த சினிமா என்னை நல்லபடியாக வாழவச்சிருக்கு. அருமையான சினிமாக்களில் முக்கியமாக இருந்திருக்கேன். நாம எந்த ஸ்டெப் சொல்லிக் கொடுத்தாலும் சந்தோஷமா ‘யெஸ் மாஸ்டர்’னு பணிவாக சொல்லி செய்துட்டு போறாங்க. இந்த இடம் நல்ல இடம். இவ்வளவு அனுபவத்திற்குப் பின்னர் ஒரு படம் இயக்கணும்னு தோணுச்சு. அப்படி ஒரு ஸ்கிரிப்ட் அமையும்போது அதை உடனே செய்து பார்த்திடனும்னு பட்டது. அதான் ‘ஹே! சினாமிகா’. டெக்னிகலாகவும் ஸ்கிரிப்டாகவும் புதுசாகச் செய்யணும்னு நினைச்சது நடந்திருக்கு.” நிதானமாகப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் பிருந்தா.

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"
"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"

“தலைப்பே இளமை புதுமையா, செமயா இருக்கு..?”

“மதன் கார்க்கி இந்தக் கதையைக் கொண்டு வந்தார். அவர் அதை அழகாக விவரிக்கத் தொடங்கியதுமே என் மனசுக்குள் ஒரே ஒரு மனிதர் வந்தார். அவர், துல்கர் சல்மான் தான். அவருக்கு அப்படியே இதைப் பொருத்தி அழகு பார்க்கலாம். இரண்டு கோபக்கார பெண்களின் ஊடாக ஓர் இளைஞன். துல்கர், காஜல் அகர்வால், அதிதி ராவ் மூணு பேருமே சேர்ந்து ஒரு நல்ல படம் பண்ணுவதற்கு எனக்கு உதவி செய்தாங்க. என் மேல் இருக்கிற அன்பில் ஒரு சுமையும் இல்லாமல் ஒரு படம் செய்ய வச்சாங்க. சினிமாவில் நான் இவ்வளவு நாள் நடன மாஸ்டராக இருந்து வேலை செய்ததற்கான அன்பளிப்பு இந்த விஷயம்னு தெரிஞ்சது. அந்த அன்பை எந்த விதத்தில் எனக்குத் திருப்பிக் காட்டணும்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. மனுஷனோட சந்தோஷம், துயரம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சியெல்லாம் உறவுகள் தான். அது ரொம்ப உணர்வுபூர்வமானது. அன்பு, காதல் எல்லாத்தையும் செஸ் விளையாட்டு மாதிரி ஆக்கிட்டா, காய் நகர்த்தல்லயே நம்ம காலம் முடிஞ்சிடும். உறவுகளை உணர்றதில்ல. நமக்கு எந்த உறவுமே கையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. விட்டுப் போனதும் அப்படியே கிடந்து தவிப்போம். அது எப்படின்னு பேசப்போற படமாகவும் ‘ஹே! சினாமிகா’ இருக்கும்.

நீதி சொல்றது என்னோட வேலை கிடையாது. இதையே வேடிக்கையாகவும் கொஞ்சம் சந்தோஷமாகவும் பார்த்திட்டு போறபடி செய்யலாம். அதனால் ‘இப்படி இருக்கு, பார்த்துக்குங்க’ன்னு சில விஷயங்களைச் சொல்லியிருக்கோம். இதில் தம்பதிகள் வர்றாங்க. அதைத் தாண்டி காதலுக்கும் இடமிருக்கு. அருமையான காதலா அது இருக்கு. காதலை வசீகரிக்காதவங்க யாரு! எல்லாமே பழசாகிப் போன இந்த உலகத்தில் இந்தக் காதல் மட்டும் தானே புதுப்பிச்சுக்கிட்டே வருது.

ஸ்கிரிப்ட்டை மதன் கார்க்கி அருமையாக கொண்டு வந்திருக்கார். நச்சுன்னு அளவாகவும் சொல்லணும். பேசறதுக்கு முன்னாடி பின்னாடி ஒரு அமைதி வர்ற மாதிரி இருக்கணும். அப்படி அருமையாக எழுதி இருக்கிறார் கார்க்கி. இதைச் செய்ய துல்கர் வேணும் என்பது என் அபிப்ராயமாக அமைந்துவிட்டது. எளிமையாக இதில் கதை சொல்லியிருக்கேன். இந்தக் கதைக்கு எது உண்மையோ, எது நேர்மையோ அவ்வளவுதான் படம்!”

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"

“துல்கர் எப்படிக் கிடைச்சார்?”

“அவரைப் பார்த்து கதை சொன்னோம். ‘கண்டிப்பாக செய்வோம்’னு சொல்லிட்டார். கொஞ்சம் கூட அப்பழுக்கு இல்லாத ஆத்மா. தங்க ஸ்பூனில் சாப்பிட்டு வளர்ந்த பிள்ளை. ஆனால் அவ்வளவு பணிவு, தெளிவு. சொன்ன நேரத்திற்கு வந்து நடிச்சுக் கொடுத்திட்டுப் போயிடுவார். ஒரு வார்த்தை குறை சொல்லிவிட முடியாதபடி நடந்துக்குவார். நிறைகுடம். எல்லாவற்றிலும் தனித்துத் தெரிகிறார். திறம்பட நடிக்கிறார். அவர் மாதிரி உள்ளே நுழைந்து நடிக்கிறதெல்லாம் இப்போ அபூர்வம். அவர் செய்கிற மலையாளப் படங்களிலும் பாருங்க, ஒவ்வொரு படத்திலும் ஒன்னு செய்திட்டு இருக்கார். இந்த வயதில் இந்தப் பக்குவம் அதிசயம், ஆச்சரியம். ஏதோ என் படத்தில் நடிக்கிறார்னு இதைச் சொல்லவில்லை. மனதின் அடியாழத்திலிருந்து வருகிற வார்த்தைகள்னு எவருக்கும் புரியும். துல்கர் நம்மிடம் அவ்வளவு நெருங்கி விடுவார். ஒரு விஷயத்தை சின்னச் சின்னதாக மெருகேற்றுவது அவருக்குக் கை வந்த கலை. அவர்மேல் மொத்த சுமையெல்லாம் தூக்கி வைக்கலை. ஆனால் தூக்கி வைச்சாலும் தாங்குவார் போல. அவ்வளவு பதப்பட்டு நிற்கிறார்.”

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"

“காஜல் அகர்வால், அதிதி ராவ்னு ரெண்டு ஹீரோயின்கள்... அடடா, ரொம்ப நல்லாயிருக்கே?”

“சொன்னேன் இல்லையா? சில உறவுகளை நாம் பொத்தி வச்சிருக்கணும். பக்கத்தில் இருக்கும்போது ஒருத்தரின் அருமை தெரியாமல் போய்விடுகிற சமயங்கள் இதில் வந்திருக்கு. நம்மையே நமக்கு சில நேரம் அடையாளம் தெரியறது இல்லே. அதனால் தான் நம் அழகும் கம்பீரமும் நளினமும் நமக்கே புரிபடுறது இல்லை. அது நமக்கே தெரியும் போது அழகா இருக்கும். இதில் நல்ல காதல் இருக்கு. பெண்ணோட உச்சபட்ச கொதிநிலைகூட வருது. காஜலை இதற்கு முன்னாடி இப்படிப் பார்த்திருக்கவே முடியாது. அவங்களுக்கு இப்படி வேஷங்களை கொடுத்துப் பார்த்திருக்கணும் போல. பின்னியிருக்காங்க. சிம்ப்ளி சூப்பர்ப்.

அதிதி ராவ்... சொல்லவே வேண்டாம். எங்க குருநாதர் மணிரத்னம் படத்திலேயே அப்படியே நிலைத்து நின்னு ஆடுவார். என்ன இருந்தாலும் துல்கர் சென்னையில் வளர்ந்து திரிஞ்ச பையன் இல்லையா? அப்படியே தமிழ் விளையாடுது. இதில் அவரே பாட்டும் பாடியிருக்கார். இவங்க காம்பினேஷன் பார்க்காதவங்களுக்கு இது ரொம்ப புதுசா வேற இருக்கும். பாடல்கள், ஆடல்கள் எல்லாம் நம்ம ஏரியா இல்லையா? விளையாடியிருக்கோம். பெண்களுக்கு எல்லாம் இந்த துல்கரை அப்படிப் பிடிச்சுப்போகும். அப்படி ஒரு இடத்தில் அவர் இருக்கார். காஜலும் அதிதியும் துல்கரும் 62 நாட்கள் செய்ய வேண்டிய படத்தை 42 நாட்களில் முடிக்க வழி செய்தாங்க. இந்தப் படமே அவங்க அன்பின் கொடைதான்.”

“பாடல்கள் வகையாக அமைஞ்சிருக்கு...”

“கோவிந்த் வசந்தா தான் மியூசிக். படம் ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி பாடல்களை முடிச்சுக் கையில் கொடுத்ததெல்லாம் அருமையான விஷயம். அப்படியே காதலையும் பாசத்தையும் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டினது மாதிரி எழுதியிருந்தார் கார்க்கி. இளமையும் புதுமையுமா இருக்கிற இந்த நவீன இளைஞர்களுக்கு அவ்வளவு அருமையான வரிகளை எழுதியிருக்கார். படத்திற்கான ஒளிப்பதிவை ப்ரீத்தா ஜெயராமன் கவனிச்சிருக்கார். இந்தப் பொண்ணை தமிழ் சமூகம் ஏன் தூக்கி வைத்துக் கொண்டாடலைன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.”

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"

“மிகவும் உழைத்து முன்னுக்கு வந்தவர் நீங்கள்...”

“ஆமாம், எல்லோருக்கும் அது தெரியும். சினிமாவில்தான் எனது பெரும்பகுதி நேரங்களைக் கழிச்சிருக்கேன். எல்லா விஷயத்திலும் என் சகோதரிகள் என்னை விட்டுக் கொடுக்காமல் மீட்டெடுத்துக் கொண்டு வந்திருக்காங்க. குடும்பத்தின் எத்தனையோ கரங்கள் சேர்ந்துதான் ஒற்றை மனுஷியாய் என்னை உருவாக்கியிருக்கு. இப்ப என் கணவர் பரமேஸ்வர் என்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குறார். எனக்காகவும் உங்களுக்காகவும் யார் யாரோ உதவி செய்திருப்பாங்க. அவர்களில் சிலரை மறந்துகூட போயிருப்போம். நான் இன்னமும் நடனத்தைத் தான் உயிர் மூச்சாக வச்சிருக்கேன். அதுதான் எனக்கு மூன்று வேளையும் உட்கார வச்சு சாப்பாடு போட்டது. கால்ஷீட் கேட்டதும் இப்படி எல்லா பெரிய நடிகர்களும் சந்தோஷமாக டேட்ஸ் கொடுக்கறதுக்குக் காரணமாக இருந்தது. பெரிய ஹீரோ, ஹீரோயின்களோட வொர்க் பண்ணியாச்சு. அவங்க ஒவ்வொருத்தரும் அவ்வளவு புகழ் அடைந்திருந்தாலும், என்கிட்ட முதல் படம் மாதிரியே கத்துக்கிட்டாங்க. அதான் அழகு. டான்ஸ் மாஸ்டர், இப்ப டைரக்டர்னு ஆடுறேன், ஓடுறேன். நம்மள ஆட்டி வைக்கிற நிஜமான மாஸ்டர் மேல இருக்கார். அதானே உண்மை. நான் யார் மனதையும் காயப்படுத்தினது இல்லை. அது எனக்கு ரொம்ப சந்தோஷம். மத்ததெல்லாம் அப்புறம்தான்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism