Published:Updated:

“பெண் இயக்குநர்கள் பெண்கள் பற்றித்தான் படமெடுக்கணுமா?”

சந்திரா தங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரா தங்கராஜ்

ஒரு ஆண் எப்படி இந்தச் சமூகத்தைப் பார்க்கிறானோ அப்படித்தான் நானும் பார்க்கிறேன். முழுக்க முழுக்க ஒரு பெண்ணாக நின்று ஒன்றைப் பார்ப்பது ஒரு நிலை.

“பெண் இயக்குநர்கள் பெண்கள் பற்றித்தான் படமெடுக்கணுமா?”

ஒரு ஆண் எப்படி இந்தச் சமூகத்தைப் பார்க்கிறானோ அப்படித்தான் நானும் பார்க்கிறேன். முழுக்க முழுக்க ஒரு பெண்ணாக நின்று ஒன்றைப் பார்ப்பது ஒரு நிலை.

Published:Updated:
சந்திரா தங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரா தங்கராஜ்

“என்னோட ‘கள்ளன்' வேட்டைச் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்து பிழைப்பு நடத்துறவன். அரசாங்கம் வேட்டையைத் தடைசெய்ய, என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறாங்க. அப்புறம் நண்பர்களோடு சேர்ந்து சின்னச் சின்னத் திருட்டுன்னு கொஞ்சம் கொஞ்சம் விரிந்து செல்கிற தவறுகள். அப்படி ஒரு திருட்டுக்குப் போகும்போது நடக்கிற சில விஷயங்கள். யோசிக்காமல் செய்கிற தவறுகள் எப்படி நம்மை இல்லாமலாக்குதுன்னு சொல்லியிருக்கேன்” என்றபடி ஆரம்பிக்கிறார், அறிமுக இயக்குநர் சந்திரா தங்கராஜ். சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்டவர், அமீர், ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

“பெண் இயக்குநர்கள் பெண்கள் பற்றித்தான் படமெடுக்கணுமா?”
“பெண் இயக்குநர்கள் பெண்கள் பற்றித்தான் படமெடுக்கணுமா?”

“ஒரு திருடனின் கதையை எப்படி முதல் படமாகச் செய்யணும்னு தோணுச்சு...”

“எங்க ஊர்ப் பக்கமாக நடந்த சில சம்பவங்களுக்குக் கூடுதலாக வண்ணம் சேர்த்தேன். மற்ற எந்த ஒரு சினிமாவோட தொடர்ச்சியாகவும் இருந்திடக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். என் கதைநாயகனுக்கு அறம் பற்றிய உணர்வு இருந்துக்கிட்டே இருக்கும். காடு, வேட்டை, அடுத்து ஒரு பெண்ணைச் சந்திக்கிற விதம், மறுபடியும் ஜெயில்... அடுத்து வெளியேன்னு படம் கலர் மாறிக்கிட்டே இருக்கும். அதிகாரத்தை, அரசை, மக்களை ஏமாற்றலாம். ஆனால் குற்றவுணர்விலிருந்து ஒரு மனுஷன் வெளியே வரவே முடியாது. இதையே முக்கியமா வச்சு ஒரு டிராவலில் படம் போகும். சிறுத்தை, பன்றியை வேட்டையாடும் முக்கியமான வேட்டைக் காட்சிகள் இருக்கு.”

“பெண் இயக்குநர்கள் பெண்கள் பற்றித்தான் படமெடுக்கணுமா?”

“பொதுவாக பெண் இயக்குநர்கள் பெண்களின் பிரச்னைகளை வைத்தே படம் எடுப்பார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறதே?”

“ஒரு ஆண் எப்படி இந்தச் சமூகத்தைப் பார்க்கிறானோ அப்படித்தான் நானும் பார்க்கிறேன். முழுக்க முழுக்க ஒரு பெண்ணாக நின்று ஒன்றைப் பார்ப்பது ஒரு நிலை. ஆனால் அதிலிருந்து மீண்டு வர விரும்பினேன். பெண்கள் பரந்துபட்டுச் சிந்திக்கிறார்கள். அவர்களின் ஆகாயம் விரிந்துவிட்டது. அதனால்தான் இப்படி ஒரு படத்தை என்னால் எடுக்க முடிந்தது. ‘இதோ பாருங்கள். நான் ஒரு பெண். என்னை ஆதரியுங்கள்’ எனக் கேட்க விரும்பவே மாட்டேன். இயல்பான சினிமாவையே எடுத்திருக்கேன். சின்ன வயதில் கேட்ட கதைகளில் ஏதோ ஒரு புள்ளி, என்னை இழுத்து இப்படி ஒரு கதை உருவாகியிருந்தது. அதுவே சினிமாவாக மாறி நிற்கிறது. வேட்டைக்காரங்களின் வாழ்க்கையும், அவங்க பழக்க வழக்கங்களும் உங்க கண் முன்னாடி நிற்கும் பாருங்க.”

“பெண் இயக்குநர்கள் பெண்கள் பற்றித்தான் படமெடுக்கணுமா?”
சந்திரா தங்கராஜ்
சந்திரா தங்கராஜ்

“இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் எப்படி?”

“அவருக்கு முன்னாடி நிறைய பேரைத் தேடினேன். ஒருத்தருக்காக ஒரு வருஷத்திற்கு மேலே காத்திருந்து உட்கார்ந்த கதையெல்லாம் இருக்கு. விஜய் சேதுபதியைத் தேடிப்போனால், தேதியில்லையேன்னு கையை விரிச்சிட்டார். வெற்றிமாறனுக்குக் கதைபிடிச்சு சித்தார்த்கிட்டே சொன்னால், அவரும் ஓகே சொல்லிட்டார். அந்தச் சமயம் வெற்றிமாறன் செலவு பண்றதுக்குப் போதுமான நிதி இல்லைன்னு சொல்லிட்டார். தெரிஞ்ச முகம், டார்க் கலர், எடுப்பான தோற்றம், தெளிவான பேச்சுன்னு வரும்போது கரு.பழனியப்பன் நினைவுக்கு வந்தார். முழங்காலுக்கு மேலே கட்டின லுங்கி, செருப்பு போடாத கால், அடர்ந்த தாடி, கையில் வேல் கம்புன்னு அவர் மாறிவந்து நின்னபோது அசந்துபோயிட்டேன். பெரிய நடிகர்கள் இல்லாத குறை அவர் நடிப்பில் தீர்ந்தது.

நிகிலான்னு கேரளப்பொண்ணு. நவீன நாடகங்களில் நடிச்சுத் தேர்ந்த பொண்ணு. காதலியாக நடிக்கிறாங்க. நான் பிறந்து வளர்ந்த தேனி பக்கமாகவே ஷூட்டிங் போயிட்டேன்.”

“சாதிப் பெயரை வைத்திருக்கீங்கன்னு சர்ச்சைகள் கிளம்பியிருக்கே?”

“‘கள்ளன்'னா ஏதோ சாதிப்பெயர்னு முன்முடிவு வேண்டாம். படத்துல சாதி மருந்துக்குக்கூட இல்லை. அன்பு மட்டுமே தேவைப்படுகிற இடத்தில் சாதிக்கு என்ன வேலை? ‘கள்ளன்'னா திருடன்தான். ‘மலைக்கள்ளன்', ‘தெற்கத்திக்கள்ளன்’னு எவ்வளவோ படங்கள் வந்திருக்கு.”