Published:Updated:

``கெளபாய் படமும், லாரன்ஸ் மாஸ்டரும் பின்னே அந்தக் குதிரையும்!'' - இயக்குநர் சிம்புதேவன்

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

தமிழில் வெளியான இரண்டாவது முழுமையான கெளபாய் படம் `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.' இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பத்மபிரியா, லட்சுமி ராய், மனோரமா, நாசர் என முன்னணி நடிகர்கள் நடிப்பில் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' நினைவுகள் குறித்து இயக்குநர் சிம்புதேவனிடம் பேசினேன்.

"சின்ன வயசுல இருந்தே Cowboy படங்கள் மேல ஆர்வம் அதிகம். தமிழ்ல கர்ணன் சார் எடுத்திருந்த ஜெய்சங்கர் சாரோட `கங்கா' படம் பார்த்திருக்கேன். இருந்தாலும், காலேஜ் படிக்குறப்ப செர்ஜியோ எடுத்திருந்த `The Good the Bad and the Ugly' படம் பார்த்தப் பிறகு ரொம்பவே ஆர்வம் தொத்திக்கிச்சு. கெளபாய் டைப் படங்கள் எடுக்குறதுல இவர் திறமைசாலியும்கூட. ஒருமுறை பாலுமகேந்திரா சார்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்ப செர்ஜியோ லியோனி என்னோட குரு மாதிரினு ரொம்ப பெருமையா சொன்னார். எனக்கு சந்தோஷமா இருந்தது. நான் காமிக்ஸ் புத்தகம் நிறைய படிப்பேன். அதுல நிறைய கெளபாய் கேரக்டர்ஸ் வரும். செம காமெடியா இருக்கும். அப்பதான் கௌபாய் படங்கள் பண்ணலாம்னு தோணுச்சு. சொல்லப் போனா கெளபாய் கதைகள்ல மேல்நாட்டு லைஃப்ஸ்டைல் அதிகம் இருந்தாலும் எல்லா நாட்டு மக்களும் ரசிக்கிற மாதிரி இருக்கும். அதனால, எனக்கு நம்ம கலாசாரத்துக்கு ஏத்த மாதிரி கெளபாய் கதை பண்ணணும்னு தோணுச்சு. இத்தாலியில இருக்கக்கூடிய ஒரு தமிழ் ரசிகர் பார்த்தாக்கூட புரிஞ்சிக்குற மாதிரியான கதையா `இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' படத்தை உருவாக்கினேன்.''

``கெளபாய் படமும், லாரன்ஸ் மாஸ்டரும் பின்னே அந்தக் குதிரையும்!'' - இயக்குநர் சிம்புதேவன்
`தப்பியோடிய இளவரசி', `மந்திரையைக் கடத்திய மாணவி'னு காமிக்ஸ்களோட டைட்டில்கள் இப்படித்தான் இருக்கும். அதே ஸ்டைல்லதான் `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்'னு வெச்சோம்.

இந்தக் கதை தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம் பிரதர்ஸுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஸ்டைலான ஒரு ஹீரோ நடிச்சா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. உடனே லாரன்ஸ் மாஸ்டர் மைண்டுக்கு வந்தார். அவருக்கும் கதை பிடிச்சிருந்தது. அப்படியே ஒவ்வொரு கேரக்டரும் படத்துக்குள்ள வந்தாங்க. வில்லன் கேரக்டர்ல நடிச்ச சாய் சார் 'ஒலக்கை' கேரக்டருக்கு சரியா பொருந்திப் போனார். ஸ்க்ரிப்ட் எழுதும்போதே ஒவ்வொருத்தரோட பெயரும் வித்தியாசமா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப் படம் உருவாக முதல் காரணமா இருந்தது தயாரிப்பாளர்தான். வித்தியாசமான கதையை டைரக்டர் ரெடி பண்ணாலும் அதைத் தயாரிப்பாளர் ஏத்துக்குறதுதான் கஷ்டம். ஆனா, எனக்கு அகோரம் சார் பக்கபலமா நின்னார்.

படத்துல எல்லோருடைய காஸ்ட்யூமும் மனோரமா மேடமுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னோட வெளிநாட்டு நண்பர்கள் படம் பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குறதா சொன்னாங்க.

பொட்டல்வெளியில படத்தை ஷூட் பண்ணணும்னு நினைச்சேன். அதுக்கு ஏத்த மாதிரியான லொகேஷன் அமைஞ்சது. கிராமங்கள், வில்லனோட கோட்டை, ரெட் ஹில்ஸ், புதையல் எடுக்கப்போறப்ப டிராவல் பண்ற இடங்கள்னு எல்லாத்தையும் படத்தோட தன்மைக்கு ஏத்த மாதிரியும் ஒவ்வொரு லேயராவும் காட்டியிருப்போம். கேரளா, கண்டி, தலக்கோணம், சென்னையில செட்னு நிறைய இடங்கள்ல ஷூட் பண்ணோம்.

சிம்புதேவன்
சிம்புதேவன்
குற்றாலத்துல செட் போட்டிருந்தோம். மழை சீசன் வர்றதுக்கு முன்னாடியே எங்களோட வேலையை ஆரம்பிச்சாச்சு. ஆனா, எதிர்பாராதவிதமா ஷூட்டிங் ஆரம்பிச்ச ரெண்டாவது நாளே செம மழை.

முதல்நாள் ஷூட்டிங்கின்போது லாரன்ஸ் மாஸ்டர் குதிரையில் ஏறி உட்கார்ந்தார். ஆக்‌ஷன் சொல்லிட்டு கேமரா ரோலிங்ல இருக்குறப்போ, டக்குனு குதிரை அவரை சறுக்கி கீழே தள்ளிருச்சு. ஸ்பாட்டுல இருந்த யாருமே இதை எதிர்பார்க்கல. பயந்து ஓடினோம். ஆனா, மாஸ்டர் சுதாரிச்சு எந்திருச்சு நின்னுட்டார். அவருக்கு குதிரை ஓட்டவும் தெரியும். இருந்தும் இப்படி நடந்து போயிருச்சு. அப்புறம் அந்தக் குதிரையோட மாஸ்டர் நல்லா பழகிட்டு ரெண்டு பேருக்கும் நல்லா செட்டானப் பிறகுதான் ஷூட்டிங் போனோம்.

குற்றாலத்துல செட் போட்டிருந்தோம். மழை சீசன் வர்றதுக்கு முன்னாடியே எங்களோட வேலையை ஆரம்பிச்சாச்சு. ஆனா, எதிர்பாராதவிதமா ஷூட்டிங் ஆரம்பிச்ச ரெண்டாவது நாளே மழை. செட்டை கலைக்கவும் முடியாது. பல கோடி ரூபாய் முதலீடு. கடைசில சில பிளாஸ்டிக், பாலித்தின் கவர், தார்பாய்னு பக்கத்துல இருந்த பொருள்களை எல்லாம் வெச்சி செட்டை இறுக்கக் கட்டினோம். கிட்டத்தட்ட 3 மாசம் வரைக்கும் மழை விடலை. எல்லாம் சரியானதுக்குப் பிறகுதான் திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சோம்.

இந்தப் படத்துல நிறைய சீனியர் நடிகர்கள் இருந்ததால சமமாக காட்சிகள் இருக்கணும்னு ரொம்ப கவனமாவும் அதே சமயம் ஷூட்டிங்கை வேகமாவும் எடுத்திட்டிருந்தோம். கலகலப்பா இருந்தாலும் ஒரு சின்ன பரபரப்பு எப்பவும் இருந்துட்டே இருக்கும். கிட்டத்தட்ட 82 நாள்கள் ஷூட்டிங் நடந்தது. `தப்பியோடிய இளவரசி', `மந்திரையைக் கடத்திய மாணவி'னு காமிக்ஸ்களோட டைட்டில்கள் இப்படித்தான் இருக்கும். அதே ஸ்டைல்லதான் `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்'னு வெச்சோம். படத்துக்கும் நல்ல ரிசல்ட் கிடைச்சது. பாலுமகேந்திரா சார் ரொம்பப் பாராட்டி கடிதம் எழுதிக் கொடுத்தார்.

``என்னாலதான் பாலுமகேந்திரா சார் அவரோட படத்தை எடுக்கலை!" - சிம்புதேவன் #12YearsOfAraiEn305ilKadavul
இந்தியால கௌபாய் சப்ஜெக்ட் படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் ஒரு முன்னுதாரணமாவும், ஆதாரமாவும் இருக்கும்னு நம்புறேன்.
சிம்புதேவன்

படத்தோட ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி `கங்கா' படம் எடுத்திருந்த சீனியர் இயக்குநர் கர்ணன் சாரை நேர்ல போய் பார்த்தேன். அவருக்கு அப்போ 83 வயசு. கெளபாய் படம் பற்றின சில டிப்ஸ் கொடுத்தார். அவங்க படம் எடுத்தப்ப, குதிரைக் குட்டியை வாங்கி வளர்த்துட்டு, ஷூட்டிங் முடிச்சதுக்குப் பிறகு அரசாங்கத்துக்கிட்ட கொடுத்ததா சொன்னார். மனோரமா மேடம், கர்ணன் சாரைப் பார்த்துட்டு சந்தோஷமா நலம் விசாரிச்சாங்க. படத்துல எல்லோருடைய காஸ்ட்யூமும் மனோரமா மேடமுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னோட வெளிநாட்டு நண்பர்கள் படம் பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குறதா சொன்னாங்க. இந்தியால கௌபாய் சப்ஜெக்ட் படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் ஒரு முன்னுதாரணமாவும், ஆதாரமாவும் இருக்கும்னு நம்புறேன்.

Padmapriya
Padmapriya

படத்தோட பெரிய பலம் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் சாய். இவங்க ரெண்டு பேரும்தான் நினைக்கிறதை விஷுவலா கொண்டு வந்தாங்க. குதிரை போர்ஷன் முழுக்க ரெண்டு நாள்ல ஷூட் பண்ணி முடிச்சோம். ஒளிப்பதிவாளர் அழகப்பன் சாரும் சிறப்பா வேலை செஞ்சுக் கொடுத்தார். மலையாளத்துல நிறைய படங்கள்ல வேலை பார்த்திருக்கார்.

ஒரு காட்சியில் புதையலைத் தேடி ஒரு சிலைக்குக் கீழே போவாங்க. அந்த இடம் ரொம்ப வித்தியாசமான பாலைவனம் மாதிரி இருக்கணும்னு நினைச்சேன். கடப்பா பக்கத்துல கண்டி-னு ஓர் இடம் அதுக்கு சரியா இருந்தது. ஒரு கரையில இருந்து இன்னொரு கரைக்குப் போறதுக்கு 60 கிலோ மீட்டர் தூரம் போகணும். அதுவும் போட்ல. ஆனா, கரை கண்ணுக்கு எட்டுன தூரத்துலதான் நமக்குத் தெரியும். இருந்தும் சுலபமாப் போக முடியாது. கடைசில ஒரு வழியா அந்த இடத்துக்கு வழி கண்டுபிடிச்சு செட் போட்டு ஷூட் பண்ணோம். அதுவரைக்கும் அங்க ஒரு ஷூட்டிங்கூட நடந்தது இல்லையாம்.

``இளையராஜா சார் மட்டுமில்ல... கமல்ஹாசன் சார்கிட்ட இருந்தும் போன் வந்தது!'' - லிடியன் நாதஸ்வரம்

எங்களுக்குப் பிறகு நிறைய ஷூட்டிங் இப்ப அங்க நடந்துட்டு இருக்கு. இதுக்கான வழியை நாங்கதான் கண்டுபிடிச்சோம்கிறதுல எங்களுக்கு ஒரு பெருமை. ஷூட்டிங்குக்குத் தேவையான எல்லா பொருள்களும் பத்து முறை போட்ல போயிட்டு வரும். நடிகர்கள் எல்லாரும் போட்லயே ட்ராவல் பண்ணாங்க. என் வாழ்க்கைல ரொம்பவே மறக்க முடியாத அனுபவம் இந்தப் படம்'' என நெகிழ்ந்தார் இயக்குநர் சிம்புதேவன்.

அடுத்த கட்டுரைக்கு