Published:Updated:

"விஜய் ஆண்டனி கரியர்ல `ரத்தம்' பெரிய பட்ஜெட் படமா இருக்கும்!" - `தமிழ்ப்படம்' சி.எஸ். அமுதன்

விஜய் ஆண்டனி

"ரம்யா நம்பீசன், நந்திதா, மஹிமா நம்பியார்னு படத்துல மூணு ஹீரோயின்ஸ் இருக்காங்க. ஏதோ, டூயட் பாடுறதுக்காக இல்லாம கதையின் மையக்கருவா நடிச்சிருக்காங்க." - சி.எஸ். அமுதன்

"விஜய் ஆண்டனி கரியர்ல `ரத்தம்' பெரிய பட்ஜெட் படமா இருக்கும்!" - `தமிழ்ப்படம்' சி.எஸ். அமுதன்

"ரம்யா நம்பீசன், நந்திதா, மஹிமா நம்பியார்னு படத்துல மூணு ஹீரோயின்ஸ் இருக்காங்க. ஏதோ, டூயட் பாடுறதுக்காக இல்லாம கதையின் மையக்கருவா நடிச்சிருக்காங்க." - சி.எஸ். அமுதன்

Published:Updated:
விஜய் ஆண்டனி

'தமிழ்ப் படம்' மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சி.எஸ். அமுதன். தற்போது விஜய் ஆண்டனியை வைத்து 'ரத்தம்' படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் படம் குறித்துப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயக்குநர் அமுதனின் வழக்கமான ஜானர்ல இருந்து 'ரத்தம்' வித்தியாசமான படம் மாதிரி தெரியுதே?

சி.எஸ். அமுதன்
சி.எஸ். அமுதன்

'தமிழ்ப் படம்' பண்ணுறப்போ ரெண்டு கதை கையில இருந்தது. அப்போ, என்னோட நண்பரும் தயாரிப்பாளருமான சசி 'தமிழ்ப் படம்' பண்ணுனா நல்லாயிருக்கும்னு பீல் பண்ணுனான். படமும் ஹிட்டாச்சு. அப்புறம் அமுதனுடைய ஜானர் இப்படிதான்னு பேர் வந்திருச்சு. ஆனா, இதெல்லாம் தாண்டி எனக்கு எப்பவும் த்ரில்லர் ஜானர் மேல ஒரு ஈர்ப்பு இருக்கு. நான் பார்க்குற படங்கள், வெப்சீரிஸ் த்ரில்லர் ஜானர் படங்களாகத் தான் பெரும்பாலும் இருக்கும். சொல்லப்போனா விஜய் ஆண்டனியுடைய ரெண்டாவது படத்தை நான் டைரக்ஷன் பண்ணியிருக்கணும். என்னோட ரெண்டாவது படமாகவும் அது அப்போ இருந்தது. காமெடி ஜானர் படம் அது. இதுக்காக ரெண்டு பேரும் டிஸ்கஷனெல்லாம் பண்ணுனோம். ஆனா, ஏனோ அதைத் தொடராம விட்டுட்டோம்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்துக்கு 'ரத்தம்'னு டைட்டில் ஏன்?

விஜய் ஆண்டனியை சமீபத்துல சந்திச்சப்போ, 'படம் பண்ணலமான்னு' கேட்டேன். அவரும் சரின்னு சொல்லியிருந்தார். கிட்டதட்ட 'ரத்தம்' கதையை ரெண்டு வருஷமா டெவலப் பண்ணிட்டு இருந்தேன். ஆக்‌ஷன் கதை. விஜய் ஆண்டனிக்கு சரியா இருக்கும். படத்தோட டைட்டில் 'ரத்தம்'னு இருக்குறனால படம் முழுக்க ரத்தம் இருக்கும்னு அர்த்தம் இல்ல. ஆக்‌ஷன் படத்துல ரத்தம் இருக்கத்தான் செய்யும். இதனால, இந்தப் பெயரை வைக்கல. படத்தின் கதையை ஆண்டனிக்கிட்ட சொல்லி முடிச்சவுடனே, 'என்கிட்ட ஒரு டைட்டில் இருக்கு. ரெஜிஸ்டர் பண்ணி வெச்சிருக்கேன். உங்களுக்கு ஓகே வா'னு விஜய் ஆண்டனிதான் 'ரத்தம்' டைட்டிலை சொன்னார். எனக்கும் கதைக்கு அது சரியாப்பட்டுச்சு."

படத்தோட ஹீரோ ஒருத்தர், ஹீரோயின்ஸ் மட்டும் மூணு பேர் இருக்காங்களே?

மஹிமா நம்பியார்
மஹிமா நம்பியார்

"ரம்யா நம்பீசன், நந்திதா, மஹிமா நம்பியார்னு படத்துல மூணு ஹீரோயின்ஸ் இருக்காங்க. ஏதோ, டூயட் பாடுறதுக்காக இல்லாம கதையின் மையக்கருவா நடிச்சிருக்காங்க. படத்தோட ஷுட்டிங் போயிட்டு இருக்குறனால விரிவா மூணு பேரை பற்றிப் பேச முடியல. மூணு பேருல ஒருத்தர் இல்லைன்னாலும் கதையே நகராது. செகண்ட் ஷெட்டியூல் கொல்கத்தால நடக்கப் போகுது. ஆக்‌ஷன் கதைக்கு விஜய் ஆண்டனி சரியா பொருந்திப் போயிருக்கார். க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாருக்கும் பிரமிப்பா இருக்கும். தமிழ் சினிமால இது மாதிரியான க்ளைமாக்ஸ் யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. ஆனா, லாஜிக் இல்லாமல் படத்துல எந்தக் காட்சியும் இருக்காது. ஏன்னா, நானே பல ஓவர் பில்டப் காட்சிகளைக் கலாய்ச்சுட்டு ஹீரோயிஸம் படம் எடுத்தா நல்லாயிருக்காது. ஸ்பெயின்ல சில காட்சிகள் எடுக்கவும் திட்டமிட்டு இருக்கோம். விஜய் ஆண்டனி கரியர்ல பெரிய படமா 'ரத்தம்' இருக்கும். எனக்கும் கூட'' எனச் சொல்லி முடித்தார் சி.எஸ்.அமுதன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism