Published:Updated:

இரண்டாம் நூற்றாண்டு புதையலைத் தேடி...

கொற்றவை படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
கொற்றவை படத்தில்

என்னுடைய படம் கதையோட்டத்துடன் இருக்கக்கூடியது. நமக்கு அந்த மாஸ் எலமென்டுகள் வரலை

இரண்டாம் நூற்றாண்டு புதையலைத் தேடி...

என்னுடைய படம் கதையோட்டத்துடன் இருக்கக்கூடியது. நமக்கு அந்த மாஸ் எலமென்டுகள் வரலை

Published:Updated:
கொற்றவை படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
கொற்றவை படத்தில்

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் அறிமுகப்படுத்திய பல இயக்குநர்கள் இன்று கோலிவுட்டின் முக்கியமான புள்ளிகள். சின்ன பட்ஜெட்டில் நல்ல படங்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்றவர், தயாரிப்பாளர் சி.வி.குமார். இயக்குநராக ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘கொற்றவை’ எனும் ட்ரையாலஜி படத்தைக் கையிலெடுத்திருக்கிறார். இதன் முதல் பாகம் ரிலீஸுக்கு ரெடி. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புக்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் பிஸியாக இருந்தவரை சந்தித்தேன்.

சி.வி.குமார்
சி.வி.குமார்

``மூணாவது படத்தை ட்ரையாலஜியா பண்ணணும்னு எப்போ முடிவு பண்ணுனீங்க?’’

‘` `மாயவன்’, ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ படங்களுக்குப் பிறகு, ஒரு ரிலேஷன்ஷிப் டிராமா பண்ணலாம்னு நினைச்சு ஒரு கதை எழுதியிருந்தேன். ஆனா, ‘மாயவன்’ முடிச்சதிலிருந்து, `கொற்றவை’க்கான ஸ்கிரிப்டை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வொர்க் பண்ணி வெச்சிருந்தேன். இந்த ரெண்டுல எதைப் பண்ணலாம்னு பேச்சு வரும்போது, என் அசிஸ்டென்ட்ஸ்தான், ‘கொற்றவை’ கதையைப் பண்ணலாம்னு சொன்னாங்க. ‘எதுக்குடா இப்போ பண்ணணும்? கொரோனா காலம். இந்தக் கதைக்கு அவ்ளோ நேரம், உழைப்பு தேவை. தியேட்டர்லதான் ரிலீஸ் பண்ணணும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கே’ன்னு சொன்னேன். அப்புறம், யோசிச்சுப் பார்த்தேன், ஜெயிக்கிறோமோ தோற்குறோமோ, இந்த மாதிரி ஒரு முயற்சியைப் பண்ணிப் பார்த்திடலாம்னு முடிவு பண்ணி களத்துல இறங்கியாச்சு. எழுதும்போதே இதை ட்ரையாலஜியாதான் எழுதினேன். காரணம், இதுல அவ்ளோ விஷயங்கள் இருக்கு. அதை எல்லாத்தையும் ஒரு படத்துல சொல்ல முடியாது. முதல் பாகம் பார்த்ததும் நாம் நினைச்சதைப் பண்ணிடலாம்னு நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கு.’’

இரண்டாம் நூற்றாண்டு புதையலைத் தேடி...

`` ‘கொற்றவை’ சரித்திரப்படமா?’’

‘`இல்லை. இது பேக்ட் அண்ட் ஃபிக்‌ஷன்னு சொல்லலாம். உண்மையும் புனைவும். படம் மூணு காலத்துல நடக்கும். படத்துடைய மையம் இரண்டாம் நூற்றாண்டு. அப்போ வைக்கப்படுற ஒரு புதையலை 13-ம் நூற்றாண்டுல தேடிக் கண்டுபிடிக்க முயற்சி பண்றாங்க, கிடைக்கலை. அப்புறம், அந்தப் புதையலைத் கண்டுபிடிக்க சமகாலத்தில் முயற்சி பண்றாங்க. அப்படியென்ன புதையல், ஏன் அதை எடுக்க முயற்சி பண்றாங்க, கிடைச்சதா இல்லையா என்பதை த்ரில்லரோடும் வரலாற்றுச் சம்பவத்தோடும் சொல்லியிருக்கோம். நூற்றாண்டு கடந்து புதையலைத் தேடுற பயணம்தான் இது. பீரியட் போர்ஷன் முதல் பாகத்துல குறைவுதான். அடுத்த இரண்டு பாகத்துலதான் அதிகமா இருக்கும். அந்தப் புதையலுக்கான துருப்புச்சீட்டு ‘கொற்றவை’ங்கிற கடவுள்தான். தமிழர்கள் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிற படமா இருக்கும்.’’

இரண்டாம் நூற்றாண்டு புதையலைத் தேடி...

``நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்?’’

‘`ராஜேஷ்னு ஒரு புதுமுகம் முதன்மைப் பாத்திரத்தில் நடிச்சிருக்கார். தமிழ், தெலுங்குல ரெண்டு படங்கள் பண்ணுன சந்தனாவுக்கு இந்தப் படம் நல்ல பெயரைக் கொடுக்கும். சுபிக்‌ஷா, அனுபமா குமார், இயக்குநர் கெளரவ் நாராயணன், வேல ராமமூர்த்தி, வேலு பிரபாகரன், பவன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. தமிழ்மகன் வசனம் எழுதியிருக்கார். ஜிப்ரான் இசை, ‘96’ ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரத்துடைய அசிஸ்டென்ட் பிரகாஷ் இதுல அறிமுகமாகுறார். ஏற்கெனவே என்னுடைய படங்களுக்கு ஆர்ட் டைரக்டரா இருந்த சிவா இந்தப் படத்துக்கும் வொர்க் பண்ணியிருக்கார்.’’

``நீங்க அறிமுகப்படுத்தின இயக்குநர்கள் எல்லாரும் இப்போ பெரிய இயக்குநர்களா இருக்காங்க. இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு?’’

‘`இப்போ மட்டுமல்ல எப்போவும் ரொம்பப் பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கும். அடுத்த பத்து ஆண்டில் திருக்குமரன் பேனர்ல இருந்து 20 இயக்குநர்களைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தணும்.’’

இரண்டாம் நூற்றாண்டு புதையலைத் தேடி...

``நீங்க இயக்குற படங்களுக்கு ஏன் பெரிய நடிகர்கள்கிட்ட போறதில்லை?’’

‘`என்னுடைய படம் கதையோட்டத்துடன் இருக்கக்கூடியது. நமக்கு அந்த மாஸ் எலமென்டுகள் வரலை. அதுதான் உண்மை. அந்த விஷயங்கள் அவங்களுக்குத் தேவைப்படுது. அவங்ககிட்ட மக்களும் அதைத்தான் விரும்புறாங்க. அதனால, அது நமக்கு செட்டாகாது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism