Published:Updated:

``சிவகார்த்திகேயன்தான் ஹீரோன்னு தனுஷ் ஏன் முடிவு பண்ணார்னா?!'' - துரைசெந்தில் #7YearsOfEthirNeechal

Ethir Neechal
Ethir Neechal

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ திரைப்படம் வெளியாகி ஏழு வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தப் படம் உருவானதற்குப் பின்னால் இருந்த சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள, இயக்குநர் துரை செந்தில்குமாரிடம் பேசினேன்.

‘எதிர் நீச்சல்’ படம் ஆரம்பமான கதையைச் சொல்லுங்க?

துரை செந்தில்குமார்
துரை செந்தில்குமார்

'' வெற்றிமாறன் சாரின் உதவி இயக்குநர் நான். 'ஆடுகளம்’ படத்தின் ஃபைனல் மிக்ஸிங் நடக்கும்போதுதான் இந்தக் கதையை வெற்றி சார்கிட்ட சொன்னேன். தனுஷ் சார் நடிச்சா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதனால, அவரும் இந்த ஒன்லைனை தனுஷ் சார்கிட்ட சொல்லியிருந்தார். ஆனா, அதுக்கப்புறம் நாங்க அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிட்டதுனால, இந்தக் கதையைப் பற்றி அடுத்து நாங்க பேசிக்கவேயில்லை. ’3’ படம் ரிலீஸாகியிருந்த சமயத்தில் வெற்றி சார் எனக்கு போன் பண்ணி, ‘சிவகார்த்திகேயனை வெச்சு தனுஷ் ஒரு படம் தயாரிக்கிறதுக்காக கதை கேட்டுட்டு இருக்கார். நீ சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு சரியா இருக்கும்னு தோணுது. நீ போய் தனுஷைப் பார்’னு சொன்னார். நானும் தனுஷ் சாரைப் பார்த்து முழுக்கதையும் சொன்னேன். அவருக்கும் கதை பிடிச்சிருந்தனால, சிவகார்த்திகேயன்கிட்ட சொல்லச் சொன்னார். இப்படித்தான் இந்தப் படம் ஆரம்பமாச்சு.’’

கதையைக் கேட்டுட்டு சிவகார்த்திகேயன் என்ன சொன்னார்?

சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த்
சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த்

''சிவாவும் நானும் முதல் சந்திப்பிலேயே பல வருடங்களாக பழகிய நண்பர்கள் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டோம். இந்தக் கதையை நான் அவர்கிட்ட சொன்னதும், அவர் என்கிட்ட 'நல்லாயிருக்கு; நல்லாயில்லை; படம் பண்ணிக்கலாம்’னு எதுவுமே சொல்லலை. நான் ஒரு கதை சொன்னதும், அவர் ரெண்டு கதை என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சிட்டார். அவர் உதவி இயக்குநரா இருந்த சமயத்தில் எழுதின கதையை என்கிட்ட சொன்னார். இப்படி நாங்க ரெண்டு பேரும் மாத்தி, மாத்தி அவங்களோட கதைகளைச் சொல்லிக்கிட்டோம். இந்த மீட்டிங் முடிஞ்சதுக்கு அடுத்த நாள் தனுஷ் சார் எனக்கு போன் பண்ணி, ‘சிவா இந்தக் கதையில் நடிக்கிறேன்னு சொல்லிட்டார். நீங்க ஆபீஸ் வந்து வேலையை ஆரம்பிங்க’னு சொன்னார்.’’

ஹீரோயின் கேரக்டருக்கு பிரியா ஆனந்த்தான் உங்களோட முதல் சாய்ஸா இருந்தாங்களா?

சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த்
சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த்

’’இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் தனுஷ் சார், ஹீரோவுக்கும் மியூசிக் டைரக்டருக்கும் மட்டும்தான் சாய்ஸஸ் கொடுக்கலை. சிவகார்த்திகேயனை ஹீரோவா வெச்சுத்தான் படம் பண்ணணும்னு அவர் முடிவு பண்ணிட்டார். அதே மாதிரி, ‘அனிருத்தையே இந்தப் படத்துக்கு இசையமைப்பாளரா வெச்சுக்கோங்க; அவனுக்குத்தான் நான் சம்பளம் தரத் தேவையில்லை’னு சொன்னார். மற்ற எல்லா கேரக்டர்களுக்கும் ரெண்டு மூணு சாய்ஸ் கொடுத்து, ’உங்களுக்கு யார் நடிச்சா நல்லாயிருக்குமோ சொல்லுங்க அவங்ககிட்ட கதை சொல்றதுக்கு டைம் வாங்கச் சொல்றேன்’னு சொன்னார். அப்படி அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் சொன்ன சாய்ஸ் எல்லாமே பெருசுதான். ஹீரோயின் கேரக்டருக்காக முதலில் சமந்தாகிட்ட கதை சொல்ல வெச்சார். அடுத்து, அமலா பால்கிட்ட கதை சொல்ல வெச்சார். அவங்களுக்கு கால்ஷீட் பிரச்னை வந்ததுனாலதான், பிரியா ஆனந்த்கிட்ட சொல்லி கமிட் பண்ணோம். 'என்னோட பங்கும் இந்தப் படத்துல இருக்கணும். நானும் இதுல நடிக்கிறேன். அதுக்கு ஏற்றமாதிரி சீன்ஸ் வைங்க’னு என்கிட்ட தனுஷ் சார் சொன்னார். ஒரு கமர்ஷியல் ஹீரோவா சிவாவை லான்ச் பண்றதுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் அவர் பண்ணிக்கொடுத்தார். எந்த விஷயத்துலயும் அவர் காம்ப்ரமைஸ் ஆகவேயில்லை.’’

'எதிர் நீச்சல்’ படத்தில் பாடல்கள் பயங்கர ஹிட். பாடல்கள் உருவானதைப் பற்றிச் சொல்லுங்க?

’’ஒரு இயக்குநரா எனக்கு கிடைச்ச முதல் படத்தை எந்தளவுக்கு பாக்கியமா நினைக்கிறேனோ, அதே அளவுக்கு இந்தப் படத்தில் வாலி சாரோட சேர்ந்து வேலை பார்த்ததையும் பெரிய பாக்கியமா நினைக்கிறேன். முதலில் இந்தப் படத்துக்காக அவர் ’மின்வெட்டு நாளில்’ பாட்டு மட்டும்தான் எழுதுற மாதிரி இருந்துச்சு. அதை அவர் எழுதிக்கொடுத்திட்டார். அதுக்கப்புறம்தான் ‘எதிர்நீச்சல் அடி’ பாட்டை படத்துல சேர்த்தோம். இந்தப் பாட்டையும் வாலி சாரே எழுதுனா நல்லாயிருக்கும்னு கேட்டப்போ, அவருக்கு உடம்பு சரியில்லை. இருந்தாலும் என்னையும் அனிருத்தையும் வீட்டுக்கு வரச் சொன்னார். எப்போதுமே அவரோட வீட்ல கீழ இருக்கிற ரூமில்தான் மீட் பண்ணுவோம்.

நாங்க போன அன்னைக்கு அவரால எழுந்துகூட நடக்க முடியல. மாடியில் அவரோட ரூமில் படுத்திருந்தார். நாங்க போனதும் அனிருத்கிட்ட, ‘ட்யூன் என்னனு சொல்லுப்பா’னு சொல்லிட்டு, என்கிட்ட பேப்பரையும் பேனாவையும் கொடுத்து ‘என் பேனாவை மத்தவங்க யூஸ் பண்ண விடமாட்டேன். ஆனால், இன்னைக்கு நானே அதை உன்கிட்ட கொடுக்குறேன். நான் சொல்லச் சொல்ல நீ எழுதிக்கோ’னு சொன்னார். இப்படி அனிருத் ட்யூன் சொல்லச் சொல்ல பதினைந்து நிமிஷத்தில் இருந்து இருபது நிமிஷத்துக்குள்ள பாட்டையே முடிச்சிட்டார். எங்களுக்கு எந்த மாதிரி அந்தப் பாட்டு இருக்கணும்னு நினைச்சோமோ, அதே மாதிரி எழுதிக் கொடுத்திட்டார். பாலு மகேந்திரா சார்கிட்ட நான் வொர்க் பண்ணுனதுக்கு அப்புறம், அதே மாதிரியான ஒரு ஆளுமைகூட இன்னொரு முறை வொர்க் பண்ணதை என்னால மறக்கவே முடியாது.

சிவகார்த்திகேயன், தனுஷ்
சிவகார்த்திகேயன், தனுஷ்

அதேபோல ’பூமி என்ன சுத்துதே’ பாட்டை முதலில் தனுஷ் சார் எழுதுற மாதிரி பிளான் பண்ணலை. அவர் வேற படத்தோட ஷூட்டிங்கில் இருந்தப்போ நானும் அனிருத்தும் மீட் பண்ணப் போனோம். அப்போ, ‘என்ன ட்யூன் போட்ட, சொல்லு’னு கேட்டப்போ அனிருத்தும் ட்யூனைப் பாடிக் காட்டினார். அந்த இடத்துலேயே அங்க இருந்த பேப்பர், பென்சிலை வெச்சு தனுஷ் சார் ‘பூமி என்ன சுத்துதே’னு பாட்டை எழுதி முடிச்சிட்டார். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, ‘சத்தியமா நீ எனக்கு தேவையேயில்ல’ பாட்டுதான் ’ஒய் திஸ் கொலவெறி’ பாட்டோட முதல் ஆப்ஷன். கிட்டத்தட்ட கன்ஃபார்ம் ஆகி ஷூட் போறதுக்கு முன்னாடிதான் தனுஷ் சார், ‘இந்த ட்யூன் வேகமா இருக்கு. கொஞ்சம் வேகம் குறைவா இருந்தா நல்லாயிருக்கும்’னு சொல்லி, அதுக்கப்பறம் ’கொலவெறி’ ட்யூனை கம்போஸ் பண்ணியிருக்காங்க. ’3’ படத்துக்காக போட்டு யூஸ் பண்ண முடியாத பாட்டை, இந்தப் படத்துக்கு சரியாயிருக்கும்னு யூஸ் பன்ணிக்கிட்டோம்.’’

எதிர்நீச்சல் படத்துக்கான ரெஸ்பான்ஸ் உங்களுக்குப் பர்சனலா எப்படி இருந்தது?

சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த்
சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த்

''இந்தப் படம் சரியா கனெக்ட் ஆச்சுனு நிறையபேர் சொன்னாங்க. பல பேருக்கு சின்ன வயசுல இருந்தே ‘எனக்கு ஏன் இந்தப் பெயர் வெச்சாங்க’னு வெறுப்பு இருந்திருக்கும். அவங்களுக்கு இந்தப் படம் ரொம்பவே கனெக்ட் ஆச்சு. எனக்குமே அப்படித்தான்; செந்தில்ங்கிற என் பெயர் எனக்குப் பிடிக்காமல் இருந்ததுதான், இந்தக் கதைக்கான ஆரம்பப்புள்ளி. அதனாலதான் கேரெக்டருக்கு குஞ்சிதபாதம்னு பேர் வெச்சேன். சொந்தப்பேரை தாழ்வா நினைக்கிற பல பேர் படம் பார்த்துட்டு, ’ஹீரோ கேரக்ட்டரோட ரொம்பவே கனெக்ட் பண்ணிக்கிட்டேன்’னு சொன்னாங்க.''

அடுத்த கட்டுரைக்கு