கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”

யுத்த சத்தம் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
யுத்த சத்தம் படத்தில்...

எனக்கு அடுத்தடுத்து வித்தியாசமான படங்கள் செய்யணும்னு ஆசை இருந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு என் காமெடிப் படங்கள் ஹிட்டாக, அந்தப் பக்கமே போயாச்சு.

எழில்ன்னு சொன்னாலே காமெடின்னு ஆகிப்போச்சு. அதற்கென்ன? சந்தோஷம்தான். என்னதான் சொன்னாலும் ஒரு காமெடிப் படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம்தான். டைமிங், டயலாக், முகபாவம், அந்த காமெடியனுக்கு இருக்கிற மக்கள் செல்வாக்கு எல்லாம் வச்சுதான் ஹிட் ஆகும். சினிமாவோட அடிநாதம் நகைச்சுவைதான்னு சொல்வேன். இப்ப கோவா பிலிம் பெஸ்டிவல் போயிருந்தேன். அங்கேதான் நம்ம குரு பார்த்திபன் சாரைப் பார்த்தேன். ‘என்னடா, என்னை வெச்சுப் படம் பண்ணலையா’ன்னு கேட்டார். அவரையும் கௌதம் கார்த்திக்கையும் வெச்சு ‘யுத்த சத்தம்’னு மர்டர் மிஸ்டரி ஒண்ணு செய்திருக்கேன். எனக்கு இது முற்றிலும் புதிய ஏரியா” நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் எழில்.

“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”

“உங்ககிட்டேயிருந்து இப்படி ஒரு படமா?”

“எனக்கு அடுத்தடுத்து வித்தியாசமான படங்கள் செய்யணும்னு ஆசை இருந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு என் காமெடிப் படங்கள் ஹிட்டாக, அந்தப் பக்கமே போயாச்சு. எனக்கு என் குரு பார்த்திபன் சாரை வச்சுப் படம் செய்யணும்னு ஆசை. பல விதங்களில் அது தள்ளிப் போயிட்டே இருந்தது. நாவலாசிரியர் ராஜேஷ்குமார் சார்கிட்டே ஒரு நல்ல நாவல் சினிமாவுக்கு ஏதுவாக இருக்கிறதாக நண்பர் சொன்னார். நாவலின் தலைப்பு ‘யுத்த சத்தம்’ படத்திற்கும் பொருத்தமாக இருக்க, அதையே வெச்சிட்டோம். ஒரு கொலையின் முடிச்சை போலீஸ் அதிகாரி பார்த்திபனும் பிரைவேட் டிடெக்டிவ் கௌதம் கார்த்திக்கும் எப்படித் தேடிப் போறாங்க, என்ன நடக்குது என்பதுதான் கதை. கொலை நடக்கிற சந்தர்ப்பங்கள் ஒரு மெல்லிய கோடு மாதிரிதான். ஒரு தருணம், ஒரு பொழுது, ஒரு சின்னக் கோபம் நம்மை வேறொரு எல்லைக்குக் கொண்டுபோயிடும். இதில் அப்படியொரு கொலையைக் கையிலெடுத்து படம் அலசுகிறது. அதிலிருக்கிற உண்மை, குற்றச் சூழ்நிலை உருவாகிற விதம்னு படம் உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கும்.”

“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”
“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”

“பார்த்திபனும் கௌதம் கார்த்திக்கும் ஒர்க் பண்ணுகிற சூழ்நிலை எப்படியிருந்தது?”

“பார்த்திபன் அனுபவத்தின் உச்சத்தில் இருக்கார். அவர் கூட உதவியாளராக இருந்த நாள்களில் எங்களுக்கு அவர் நண்பர் மாதிரிதான். எப்பவும் தோளில் கைபோட்டுப் பழகுகிறவர். முதல் பாதி முழுக்க அடுக்கடுக்கா வந்து விழுகிற முடிச்சுகள், அடுத்த பாதி அவை அவிழ்கிற விதம்னு படம் போகும். சாரோட மிடுக்கும் துடுக்கும் கோபமும் நகைச்சுவையும் படத்தோட இயல்பிற்கு அவ்வளவு முக்கியமாக இருக்கும். அந்த அனுபவத்திற்கு இணையாக துள்ளலும் துடிப்புமான இளைஞன் கௌதம். இந்தப் படத்தை முடிச்சுட்டு இமானிடம் கொண்டுபோய் வச்சதும் ‘என்ன சார், வேற லெவலில் செய்திருக்கீங்க. உங்க ஸ்டைல் இது இல்லையே... யார் கேமராமேன்’னு கேட்டார். ‘ஹலோ, படம் நான் செய்திருக்கிறேன். நீங்க கேமராமேனை விசாரிக்கிறீங்க’ன்னு கேட்டேன். அந்த அளவிற்கு அவரே ஃபீல் பண்ணியிருக்கார்.

சாய் பிரியான்னு தமிழுக்குப் புதுப்பொண்ணு. மலையாளத்தில் இரண்டு படம் செய்திருக்காங்க. முதன் முதலில் சென்னையில் தியேட்டர் கட்டினவரோட கொள்ளுப்பேத்தியாம். அதுவே புதுத் தகவலா இருந்தது.”

“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”
“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”
“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”

``நீங்கள் எழுத்தாளர்களின் நாவல்களைக் கையாள ஆரம்பிச்சிட்டீங்களே?’’

“நாவலைப் பிரிச்சா அப்படியே சினிமாவாக மனதில் ஓடுது. கொஞ்சம் அங்கே இங்கே கை வச்சு மாத்தினா, மொத்த ஸ்கிரிப்ட்டே கையில் வந்துடுது. சிரமமே இல்லை. உண்மையில் நாவல்களைப் பயன்படுத்திக்கொள்ள இதுமாதிரி படைப்புகள் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. கதையை சினிமாவுக்கென்று மடை மாற்றும்போது அதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அல்லது, சேர்க்க வேண்டியிருக்கும். அதற்கு உடன்படுகிற, புரிந்துகொள்கிற எழுத்தாளர்கள் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். ராஜேஷ்குமார் சார் அதற்கு உதவியாக இருந்தார். முருகேஷ்பாபுவின் வசனமும் படத்துக்குப் பெரும் பலம் சேர்க்கும்.”

“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”
“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”
“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”

``இத்தனை வருஷம் சினிமாவில் இருந்திருக்கீங்க... என்ன உணர்றீங்க?’’

“இங்கே இருந்துக்கிட்டு நம்மை மட்டுமே பாத்துக்கிட்டு இருக்கக் கூடாது. மத்தவங்க நல்லா இருக்கிறதையும் கவனிக்கணும். சினிமா என்ன வேண்டுமானாலும் செய்யும். வருஷக் கணக்குல காக்க வைக்கும். பெரிய வெளிச்சத்தை நம்ம மேல பாய்ச்சும். ஆனால், இதெல்லாம் நம்மோட குணத்தை மாத்தாம இருக்கணும். வெற்றிங்கிறதுகூட சுலபம்தான். அந்த வெற்றியைத் தக்க வைக்கிறதுதான் பெரும்பாடு. மக்களோட கைத்தட்டல்தான் நம்ம உயரத்துக்குக் காரணங்குற உண்மை நம்ம நெஞ்சில் உறைக்கணும். பழசை மறக்காமல், வானத்தில் மிதக்காமல் இருந்தோம்னா சினிமா என்னைக்கும் நம்மளைக் கைவிடாது.

“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”
“வெற்றி நம் குணத்தை மாத்திடக்கூடாது!”
எழில்
எழில்

இங்கே டிரெண்ட் மாறிக்கிட்டே வரும். அதுக்கு ஏத்த மாதிரி நம்மை மாத்திக்கணும். இத்தனை வருஷமா இந்த சினிமாவில் இருக்கேன். என் கனவும் நேற்று வந்த சினிமா பண்றவன் கனவும் ஒண்ணுதான். கனவுக்கும் கற்பனைக்கும் வயது எது? என்னோட வெற்றி என்னோட பயம், என்னோட தோல்வி என்னோட தைரியம். வாழ்க்கையில் எவ்வளவு மாறினாலும் அடிப்படைப் பண்புகள் மாறிடக் கூடாதுன்னு நினைப்பேன். யாரும் காணக்கூடிய, எளிதில் கைவரக் கூடிய எளிய மனிதர்களே என் கதாநாயகர்கள்.”