Published:Updated:

“உலகம் பேசுவதெல்லாம் உண்மையல்ல!”

கெளதம் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
கெளதம் மேனன்

கெளதம் மேனன்

“உலகம் பேசுவதெல்லாம் உண்மையல்ல!”

கெளதம் மேனன்

Published:Updated:
கெளதம் மேனன்
பிரீமியம் ஸ்டோரி
கெளதம் மேனன்

நெட்ஃபிளிக்ஸுக்காக ஆந்தாலாஜி படம், ‘இமைபோல் காக்க’, `துருவ நட்சத்திரம்’ என கெளதம் மேனன் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“உலகம் பேசுவதெல்லாம் உண்மையல்ல!”

‘`உங்க லிஸ்ட்ல ‘ஜோஷ்வா - இமைபோல் காக்க’ திடீர்னு வந்த படம் மாதிரி ஒரு ஃபீல் இருக்கே?’’

“இல்லை... இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் ரொம்ப நாளா டிஸ்கஷன்ல இருந்தது. ஒரு பொண்ணைக் காப்பாத்த ஒரு டீம் இறங்குது. அவங்களால் அந்தப் பொண்ணைக் காப்பாத்திக் கடைசிவரை கூட்டிட்டுப் போகமுடிஞ்சதா என்பதே கதை. முதல்ல சூர்யாகிட்டதான் சொன்னேன். அப்போ ‘காப்பான்’ பண்ணிட்டிருந்தார். ரெண்டு கதைக்கும் சில விஷயங்கள் ஒண்ணா இருக்குற மாதிரி இருந்ததால் அவர் பண்ணலை.”

‘` ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியாக ஐசரி கணேஷ்தான் உதவினார். அதற்கான நன்றிக்கடனாகத்தான் அவரின் உறவினர் வருணை வைத்து எடுப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

“அவரை எனக்கு இப்போதான் தெரியும்னு சிலபேர் தப்பா நினைக்கிறாங்க. என் பசங்க அவர் ஸ்கூல்லதான் படிப்பை ஸ்டார்ட் பண்ணினாங்க. அப்போதிலிருந்தே என்னை அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் நல்லா தெரியும். அதுக்குப் பிறகுதான் படங்கள் தயாரிக்க ஆரம்பிச்சார். நாலஞ்சு படங்கள் தயாரிச்சபிறகு ஒருநாள் சந்திச்சேன். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பாருங்க. படம் பிடிச்சிருந்தால் ரிலீஸ் பண்ணிக்கொடுங்க’னு சொன்னேன். படம் பார்த்துட்டு, ‘ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் ரிலீஸ் பண்ணுறேன்’னு சொன்னார். ரிலீஸ் தேதிகள் மாறிக்கிட்டே இருக்கும்போது, ‘நீங்க மத்தவங்களுக்காக வெயிட் பண்ணாதீங்க. நானே உதவுறேன். அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணுவோம். இடையில நீங்க வேற யார்கூட வேணாலும் படம் பண்ணலாம். நானும் வேற பண்ணுவேன். எப்போ நீங்க எனக்குப் படம் பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அப்ப பண்ணுங்க’ன்னு சொன்னார்.

“உலகம் பேசுவதெல்லாம் உண்மையல்ல!”

அவர் பேனர்ல அடுத்தடுத்து படங்கள் பண்ணணும்னு நினைச்சு ஒரு புரப்போசல் கொடுத்தேன். அதுல வருணுக்குத் தகுந்த கதை இருக்குன்னு நான்தான் சொன்னேன். ‘உங்களுக்கு இதைப் பண்ணுறேன். நீங்க எனக்கு அதைப் பண்ணுங்க’ன்னு அவர் கேட்கவேயில்லை. ‘நான் ஒரு ட்ரெய்லர் ஷூட் பண்ணுறேன். அதைப் பார்த்துட்டுச் சொல்லுங்க’ன்னு சொன்னேன். ஒரு ட்ரெய்லர் எடுத்து, ஒரு தியேட்டரை வாடகைக்குப் பிடிச்சு முறையான செட்டப்ல காட்டினேன். அதைப் பார்த்துட்டுத்தான் ‘எப்போ ஆரம்பிக்கிறீங்க? எவ்ளோ பட்ஜெட்?’னு கேட்டார். வெளியே ஏதேதோ உலகம் பேசும்தான். ஆனா அதெல்லாம் உண்மையா இருக்காது.”

‘`உங்க படங்களில் எப்பவும் பெரிய நடிகர்கள், சீனியர் டெக்னீஷியன்ஸ் இருப்பாங்க. ஆனா, ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்துல எல்லாருமே புதுசா இருக்காங்களே?’’

“இந்தப் படம் ஆரம்பிக்கும்போது ‘துருவ நட்சத்திரம்’ வேலைகள் இருந்தது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வும் ரிலீஸாகல. இந்த வேலைகளுக்கு எல்லாம் நேரம் எடுக்கும், அதனால நம்ம கன்ட்ரோல்ல இருக்கிற மாதிரி நடிகர்களைப் பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணினோம். வெங்கட்ராம் ஸ்டூடியோவுல ஒரு பொண்ணோட போட்டோ பார்த்தேன். ‘நல்லாருக்காங்களே’ன்னு தோணுச்சு. உடனே ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்து ராஹியை கமிட் பண்ணினோம். பாடகர் கார்த்திக், இசையமைப்பாளரா இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு. எனக்கு கம்ஃபர்ட்டபுளா இருந்தது. பாடல்களும் சூப்பரா வந்திருக்கு.”

“உலகம் பேசுவதெல்லாம் உண்மையல்ல!”

‘`பாண்டியா, அமுதன் - இளமாறன், விக்டர், குபேரன்னு உங்க படங்களில் வருகிற வில்லன்கள் பேசப்படுவாங்க. இந்தப் படத்துல வில்லன் யார்?’’

“கிருஷ்ணாதான் வில்லன். எனக்கு இந்த மாதிரி நடிகர்களைப் பிடிக்கும். அவங்களுக்குள்ள ஒரு ஸ்பார்க் இருக்கும். ஆக்‌ஷன் சீக்வென்ஸ் சூப்பரா பண்ணுவாங்க. உடம்பை ஃபிட்டா வெச்சிருப்பாங்க. அப்படித்தான் அருண் விஜய்யை ‘என்னை அறிந்தால்’ படத்துல விக்டர் கேரக்டர்ல நடிக்க வெச்சேன். அதே மாதிரி, இந்தப் படத்துல கிருஷ்ணா.”

“உலகம் பேசுவதெல்லாம் உண்மையல்ல!”

‘` ‘வேட்டையாடு விளையாடு -2’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா -2’, ‘குயின் சீசன் -2’ இந்த மூணும் எந்த அளவுல இருக்கு?’’

“ ‘வேட்டையாடு விளையாடு 2’ பெரிய படம். நிறைய ஃபாரின் லொகேஷன்களை வெச்சு எழுதியிருக்கேன். அதனால, இந்தச் சூழல்ல எப்போ சாத்தியம்னு தெரியலை. ‘விண்ணைத்தாண்டி வருவாயா - 2’ கதையும் கிட்டத்தட்ட ரெடி. ‘குயின்’ முதல் சீசன் வொர்க் பண்ணும்போதே மூணு சீசன் வரைக்கும் ஸ்கிரிப்ட் இருந்தது. எல்லாமே அடுத்தடுத்து நடக்கும்.”

‘`மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிச்சுட்டு வருது. சாத்தான்குளம் மரணங்களைத் தொடர்ந்து போலீஸ் வன்முறை, என்கவுன்டர் மரணங்கள் குறித்துக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ‘சமூகப்பொறுப்போ மனித உரிமை குறித்த அக்கறையோ இல்லாமல் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் படங்களை கௌதம் மேனன் எடுத்தார்’ங்கிற விமர்சனத்துக்கான உங்கள் பதில் என்ன?’’

“ ‘காக்க காக்க’ படத்தைப் பார்த்து இம்ப்ரஸாகி நிறைய பேர் காவல்துறைக்குள்ள வரணும்னுதான் அப்படிப்பட்ட படம் இயக்கினேன். என்கவுன்டர் அப்படிங்கிற விஷயத்தைக் கையாளும்போது, எதையும் நான் தப்பா காட்டினதேயில்லை. ரொம்ப ரொம்ப தப்பான ஒருத்தனை சினிமாவுக்கான சுதந்திரத்தோடு சில விஷயங்களை வெச்சு என்கவுன்டர் பண்ணுற மாதிரி காட்டியிருப்போம்.

“உலகம் பேசுவதெல்லாம் உண்மையல்ல!”

தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருத்தர் உத்தரப்பிரதேசத்துல விகாஷ் துபேயை என்கவுன்டர் பண்ணுனதுக்காகக் கொண்டாடப்படுறார். அதே நேரம், சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளை ஊரே திட்டுது. எல்லோருக்குள்ளேயும் ஒரு நெகட்டிவ் ஷேடு இருக்கும். அது ஒரு மெல்லியகோடுதான். அந்தக் கோட்டுக்கு இந்தப் பக்கம்தான் நாம எல்லோருமே மனுஷங்களா இருக்கோம். அப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறேன். அவங்க அப்படியில்லை.”